இடுகைகள்

நிதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பெண்மணி!

படம்
  நாடியா முராத் nadia murad நாடியா முராத், ஈராக்கில் பிறந்தவர்.அவருக்கு இருந்த ஒரே கனவு பெண்கள், சிறுமிகளுக்கான அழகுக்கலை சலூன் ஒன்றைத் தொடங்கி நடத்தவேண்டும் என்பதுதான். ஆனால் அவர் பிறந்த இனத்தின் பெயரால் அவரது கனவுகள் நொறுக்கப்பட்டன. ஈராக்கின் வடக்குப் பகுதியில் இருந்த கோஜோ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் நாடியா. யாஷிடி இனக்குழுவைச் சேர்ந்தவர். சலூனில் ஒன்றாக பெண்கள் சந்தித்தால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை.  2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் நாடியா உட்பட ஆறாயிரம் பெண்களை கடத்திச் சென்றனர். இந்த கடத்தலின்போது, நாடியாவின் அம்மா, உறவினர்கள், தோழிகள் கொல்லப்பட்டனர். கடத்திவரப்பட்ட பெண்கள் தீவிரவாதிகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகினர். மூன்று மாதங்கள் சித்திரவதைகளை அனுபவித்த நாடியா, அங்கிருந்து தப்பி 2015ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தார். தன்னார்வ அமைப்பொன்றைத் தொடங்கியவர், பாலியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகளைப் பெற்றுக்கொடுத்து உதவத் தொடங்கினார்.  2017ஆம் ஆண்டு தனது வாழ்க்கையை நூலாக எழுதி வெளியிட்டார். நியூயார்க் டை

குழந்தை பத்திர முறையை உருவாக்கியவர்கள்!

படம்
  டாரிக் ஹாமில்டன் - வில்லியம் டாரிட்டி darrick hamilton -william darity 2023ஆம் ஆண்டு, ஜூலையில் அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் நகரம், அங்கு பிறக்கும் புதிய குழந்தைகளுக்கு 3200 டாலர்களை வங்கிக்கணக்கில் செலுத்துவதாக கூறி, அதை நடைமுறைக்கு கொண்டு வந்தது. நாட்டிலேயே முதல்முறையாக நடைமுறைக்கு வந்த குழந்தை பத்திர முறை இதுவே. பதினெட்டு தொடங்கி முப்பது வயது வரையில் மேற்கண்ட தொகை பெருகி 24 ஆயிரம் டாலர்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதை வைத்து ஒருவர் தனது கல்லூரிக்கான செலவை சமாளிக்க முடியும். குழந்தை பத்திர திட்டத்தில் தற்போது, 15 ஆயிரம் குழந்தைகள் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை டாரிக் ஹாமில்டன் உருவாக்கினார். அதை நண்பரான வில்லியம் டாரிட்டியிடம் கூறினார். இப்படித்தான் திட்டம் சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளது.  ஹாமில்டனுக்கு வயது 53. கருப்பினத்தவர்களின் பொருளாதார வளம் சார்ந்து ஆய்வுசெய்து வருகிறார். பொருளாதாரம், நகரக்கொள்கைகள் துறை சார்ந்த பேராசிரியராக வேலை செய்கிறார். 2022ஆம் ஆண்டு ஆய்வுப்படி, நடுத்தர வெள்ளை இன குடும்பத்தின் செல்வம், கருப்பினக் குடும்பத்தை விட ஆறு மடங்கு அதிகம். கலிபோர்னியா, வாஷ

கருப்பின பெண் தொழில்முனைவோருக்கு உதவும் முதலீட்டு நிறுவனம்!

படம்
  அரியன் சைமன் - அயானா பார்சன்ஸ் arian simone, ayana parsons கருப்பின பாகுபாடு என்பது மேற்குலக நாடுகளில் சாதாரண ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. சமநீதி, ஒரே சட்டம் என்றாலும் மறைமுகமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கீழே தள்ள நிறவெறியர்கள் முயன்று கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கியக்காரணம், அவர்களிடம் தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதற்கு நிதி முதலீட்டையும் பெருமளவு பெற்றுவிடுகிறார்கள். இவர்களோடு போராடி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பேரளவுக்கு முதலீடு பெறமுடிவதில்லை.  ஆண்களே முக்கி முனகும்போது, கருப்பின பெண்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் செய்யும் தொழில்களுக்கு முதலீடு செய்யவே ஃபியர்லெஸ் ஃபண்ட் என்ற முதலீட்டு நிறுவனம் உருவானது. இதை 2018ஆம் ஆண்டு அரியன் சைமோன் தொடங்கினார். இவருடன் கூட்டாளியாக அயானா பார்சன்ஸ் இணைந்துள்ளனர். இவர்கள், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீடுகளை வழங்குகிறார்கள்.  இதுவரை 44 நிறுவனங்களில் 27 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். முதலீட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவது, வெள்ளையர்கள்தான். பெண்கள் தொடங்கும் நிறுவனங்களுக்கான முத

டெக் உலகில் மாற்றுப்பாலினத்தவர்கள் காலூன்ற உதவுபவர்! - ஆஞ்செலிகா ரோஸ்

படம்
  john hope bryant அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காம்டனில் பிறந்தவர். அன்றைய நாளில் அங்கு போதைப்பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறந்தது. அதுதான் பெரும்பான்மையானவர்களுக்கு சம்பாதிக்கும் வழிமுறையும் கூட. ஜானுக்கு பத்து வயதாகும்போது, அவர் படிக்கும் பள்ளிக்கு தொழிலதிபர் ஒருவர் வந்தார். நேர்மையான தொழில் செய்து சம்பாதிப்பதை அவர் மூலமே ஜான் அறிந்து நம்பிக்கை கொண்டார். இன்று 57 வயதானாலும் கூட அந்நாளை நினைவுகூர்ந்து பேசினார். வறுமையான நிலையில் உள்ள மக்கள், தங்களது தொழில் ஐடியாவை நிஜமாக்க நடைமுறையில் சாத்தியப்படுத்த முதலீட்டை ஈர்க்க முடியும். வாய்ப்புகளைப் பெறமுடியும். அதற்கு ஜான் உதவுகிறார்.  1992ஆம் ஆண்டு, ஜான் ஆபரேஷன் ஹோப் என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு, ஏழை மக்களுக்கு நிதி சார்ந்த கல்வியை இலவசமாக வழங்குகிறது. வறுமையில் வாடும் இனக்குழுவுக்கு தொழில் மூலம் முன்னேறுவது எப்படி என வழிமுறைகளை ஹோப் அமைப்பு கூறுகிறது. அமெரிக்காவில் உள்ள ஆயிரம் இடங்களில், 300 அலுவலகங்களில் ஹோப் அமைப்பு தனது பயிற்சிகளை வழங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டில் ஷாப்பிஃபை அமைப்புடன் இணைந்து கருப்பின தொழிலதிபர்கள

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள்!

படம்
  தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை - விவாதங்கள் 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தேர்தல் பத்திரங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன்மூலம், தனிநபர்கள், பெருநிறுவனங்கள் தங்களைப் பற்றிய அடையாளங்களை பிறர் அறியாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க முடியும். தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கிக்கொள்ளலாம். அதை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். அவர்கள் அதை ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும்.  இதுபற்றிய வழக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. வழக்கை இடதுசாரி கட்சி தொடுத்து நடத்தியது. வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனோடு மேலும் பலரும் பங்கேற்றனர்.    தகவலறியும் உரிமைச்சட்டம் 19 (1) படி விதிகளை மீறி, தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. மக்களுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக வழங்கப்படும் நன்கொடை பற்றிய தகவல் தெரிவிக்கப்படவேண்டும் என வாதாடப்பட்டது. அரசு சார்பாக வாதாடிய அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, மக்களுக்கு நன்கொடை அளிப்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. இதில் அவர்களுக்கு எந்த உரிமை

கல்வி, மனநலன் ஆராய்ச்சிக்கென தானமளிக்க தொடங்கியுள்ள தொழிலதிபர்கள்!

படம்
  Graeme hart rank group க்ரீம் ஹார்ட் தலைவர், ரேங்க் குழுமம் வயது 58 நியூசிலாந்து க்ரீம் ஹார்ட் இன்றைக்கு பல்வேறு பொருட்களை அடைத்து விற்கும் பேக்கேஜிங் பொருட்களை விற்கலாம். ஆனால், அவருக்கு ஒருகாலத்தில் பள்ளியில் படிக்கும்போது, பள்ளிப்படிப்பை தொடரமுடியாத பொருளாதார சூழ்நிலை இருந்தது. தற்போது பால் பாக்கெட், குடிநீர் புட்டிகள், காகிதம், அலுமினிய தாள் ஆகியவற்றை தயாரித்து வழங்கிவருகிறார். இவரின் சொத்து மதிப்பு 8.8 பில்லியன் டாலர்களாக உள்ளது.  அண்மையில் ஸ்டார்ஷிப் எனும் குழந்தைகள் மருத்துவமனைக்கு ஹார்ட், அவரது மனைவி ராபின் ஆகியோர் இணைந்து 3.8 மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளனர். அந்த மருத்துவமனை தொடங்கி 32 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த மருத்துவமனைக்கு கிடைத்த தனிநபர் நன்கொடையில் இதுவே அதிகம். கிடைத்த நிதியில், தீவிரமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை பராமரிக்கவும், செவிலியர்களுக்கு பயிற்சிகளை அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டு, ஹார்ட் தம்பதியினர் 10 மில்லியன் டாலர்களை ஒடாகோ பல்கலைக்கழகத்திற்கு வழங்கினர். ஆக்லாந்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரிக்கு 28.2 மில்லியன்

வறுமையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய தொழிலதிபர்!

படம்
 ரமோன் ஆங்க் அதிபர், இயக்குநர், மிகுல் கார்ப் வயது 69 பிலிப்பைன்ஸ்  Ramon ang miguel corp சுயம்பாக முளைத்தெழுந்த தொழிலதிபர். மணிலாவில் ஏழை குழந்தைகளுக்கு பள்ளி கட்டுவதற்காக ஒன்பது மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளார். மதுபானம், உணவு, வங்கி, ஆற்றல், மின்சாரம், சாலை பராமரிப்பு நிறுவனங்களை ரமோன் நடத்தி வருகிறார். நாட்டின் வலிமையை, வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் மக்களின் கல்வி, திறன் அதிகரிக்கவேண்டும். வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மட்டுமல்ல வயது வந்தோருக்கும் கூட நல்ல பணி கிடைக்கவேண்டும். அல்லது அவர்கள் சுயமாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும். அதற்கான திறன்களை வழங்க முயல்கிறோம் என்று தான் வளர்ந்த டோன்டோ மாவட்டத்தில் பள்ளி வளாகம் ஒன்றைத் தொடங்கி வைத்து பேசினார்.  ரமோன், சான் மிகுல் பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் வழியாக பள்ளிகளைக் கட்டுவது, கோவிட் 19 நிவாரண நிதி, நகர ஆறுகளை தூய்மைப்படுத்துவது, கல்விக்கான உதவித்தொகை, மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. ஆர்எஸ்ஏ பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பிற்கும் கல்வி சார்ந்து நிதி நல்கையை கொடுக்கிறது.  -ஜேபி லீ கா ஷிங் மூத்

ஒளிச்சேர்க்கை மூலம் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து அகற்றும் தொழில்நுட்பம் - அசத்தும் லிவ்விங் கார்பன் நிறுவனம்

            காடுகளை வளர்த்து அதாவது அதை செயற்கையாக கூட வளர்க்கலாம் . ஆனால் அதன் மூலம் மாசுபாடுகளை குறைக்கவேண்டும் என எண்ணும் காலம் வந்துவிட்டது . காடு , இயற்கை சூழல் என எதற்காகவும் மக்கள் தங்கள் சுகங்களை தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாது . நாளிதழ்கள் , வார இதழ்கள் எல்லாம் ஏழைகளிடம் , சாதாரண மக்களிடம் சிவப்பு இறைச்சியை சாப்பிடாதீர்கள் , மீத்தேன் அதிகரித்துவிடும் என பிரசாரம் செய்து வருகின்றன . ஆனால் இந்த பிரசாரத்தை அவர்கள் தொழிலதிபர்களிடம் செய்தால் நெஞ்சுக்கு நேர்மையாக இருக்கும் . ஆனால் அவர்கள்தான் ஊடகங்களை நடத்துகிறார்கள் . அல்லது விளம்பரங்கள் மூலம் படியளக்கிறார்கள் . அவர்களை எதிர்க்க த் துணிவார்களா கடினம் தான் . குறிப்பிட்ட மண் சார்ந்த மர வகைகளை கண்டறிந்து அதை மண்ணில் ஊன்றிவைத்து கார்பனை உறிஞ்சுகிறதா என பார்த்துவந்தது கடந்த காலம் . இப்போது காற்றிலுள்ள கார்பனை உறிஞ்சுவதற்காகவே நூறுக்கும் மேற்பட்ட மர வகைகளை ஆய்வகத்தில் உருவாக்கி அதை மண்ணில் ஊன்றி வருகிறார்கள் . இதை வணிகமாகவே சில நிறுவனங்கள் செய்து வருகின்றன . 2019 ஆம் ஆண்டு லிவ்விங் கார்பன் என்ற நிறுவனம் தொடங்கப்பட

இங்கிலாந்தில் உள்ள அரசுபள்ளிகளை பழுதுபார்க்க நிதி ஒதுக்க மறுக்கும் பிரதமர்!

படம்
  இங்கிலாந்தில் அரசுப்பள்ளி கட்டிடங்கள் பழுதுபார்க்க பணமின்றி தடுமாறி வருகின்றன. இந்த கட்டுமானங்கள் ராக் எனும் கான்க்ரீட் கலவையால் கட்டப்பட்டவை. இந்த வகை கான்க்ரீட் அதிக எடையில்லாதது என்பதால் கட்டுமான நிறுவனங்கள் இதை தேர்ந்தெடுத்தன. கான்க்ரீட் அதாவது சிமெண்டிற்கு காலாவதி நாள் உண்டு என்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதை அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் அங்கு பேசுபொருளாக உள்ளது. ராக் கான்க்ரீட் கலவை வீடுகளின் மேற்கூரை மாடிகள், சுவர்கள் கட்டப்பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தில் அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும பிற கட்டுமானங்கள் அனைத்துமே ராக் கலவையால் கட்டப்பட்ட காலம் ஒன்றுண்டு. அதுதான் 1950 முதல் 1990கள் வரை. தேசிய தணிக்கை அலுவலகம், 196 ஆய்வறிக்கை அடிப்படையில் 65 பள்ளிகளில் இருபத்து நான்கு பள்ளிகளுக்கு உடனடியாக பழுதுபார்ப்பு அவசியம் என பரிந்துரைத்துள்ளது. கல்வித்துறை செய்த ஆய்வுகளில் ராக் கான்க்ரீட்டில் முழுமையாக கட்டப்பட்ட 572 பள்ளிகள் ஆபத்தில் உள்ளன என தெரியவந்துள்ளது. ராக் கலவைக்கான காலாவதி முப்பது ஆண்டுகள் ஆகும். இந்த வகையில் 38 சதவீத பள்ளிகள், அதாவது 24 ஆயிரம் பள்ளிகள் தங்கள்

கடலைப் பாதுகாப்பதை வெறும் பேச்சாக அன்றி, செயலாக மாற்ற வேண்டும்! - பேட்ரிசியா ஸ்காட்லாந்து

படம்
  பேட்ரிசியா ஸ்காட்லாந்து, காமன்வெல்த் பொது செயலர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து, காமன்வெல்த் பொது செயலர் காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து. கடலை பாதுகாக்கும் செயல்பாட்டினை ஜி20 மாநாட்டை நடத்தும் இந்தியா முன்னெடுக்கும் என நம்புகிறார். நீலப்பொருளாதாரம் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்? உலக நாடுகள் வரையறுத்துள்ள நீலப்பொருளாதாரம் என்பதையே நானும் கூறுகிறேன். கடலை சூழலுக்கு உகந்த வழியில் பயன்படுத்தும்போது, அதைச் சார்ந்த   மக்களின் வாழ்க்கையும் ஆரோக்கியமான பாதைக்கு திரும்பும். நாம் ஏற்கெனவே நிலத்தை பெருமளவு பயன்படுத்திவிட்டோம். எனவே, இப்போது கடலில் இருக்கும் இயற்கை வளங்களை கவனத்துடன் பயன்படுத்தவேண்டும். நாம் நிலத்தை மோசமாக பயன்படுத்தியது போல கடலை, அதன் வளத்தை பயன்படுத்தக்கூடாது என்பதை மனதில் கொள்ளவேண்டும். நீலப்பொருளாதாரத்தில் உள்ள ஆபத்துகள் என்ன? இப்படி ஏற்படும் ஆபத்துகள் நாட்டுக்கு நாடு மாறுபடக்கூடியவையா? கடலை தங்களது வாழ்வாதாரமாக, பொருளாதார அடிப்படையாக கொண்டுள்ள நாடுகளைப் பொறுத்து இதன் பாதிப்புகள் மாறுபடும். காலநிலை மாற்றம், கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரித்தல், பி

10.வணிகமே செய்யாமல் பெரும்தொகையைக் கடன் கொடுக்க முடியும் - மோசடி மன்னன் அதானி

படம்
  சிங்கப்பூரில் வினோத் அதானிக்கு சொந்தமான நிதி நிறுவனம் உள்ளது. 2013-2015 காலகட்டங்களில், இந்த நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அதிக லாபம் காட்டும் விதமாக பயன்படுத்தப்பட்டது.   2013-2015ஆம் ஆண்டு கார்மிசல் அண்ட் போர்ட் சிங்கப்பூர் ஹோல்டிங்க்ஸ் லிட். நிறுவனத்தை வினோத் அதானி நிர்வாகம் செய்து வந்தார். (ப.2) இந்த நிறுவனத்தில் இருந்து மூன்றுநிதி   பரிவர்த்தனைகள் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் அதிகரித்தது. சொத்துகளுக்கு ஏற்படும் சேதம் அடிப்படையில் பெரிய நிறுவனம் என்ற அங்கீகாரத்தை இழக்கும் நிலையை அதானி குழுமம் நிதி பரிவர்த்தனை மூலம்தான் சமாளித்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்கம், ரயில்வே, துறைமுகம் ஆகிய நிறுவனங்களுக்கு நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. ஆனால் இந்த நிதி பரிவர்த்தனை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆய்வில் நிதி பரிவர்த்தனைகளைச் செய்த நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்