பெண்கள் உயிர்பிழைத்தால் உலகமும் உயிர் பிழைத்திருக்கும்! - லீனா நாயர்!

 











லீனா நாயர்

leena nair

by alana semules


பெண்கள் உயிர்பிழைத்தால் உலகமும் உயிர் பிழைத்திருக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர் லீனா நாயர். அந்த நம்பிக்கையில்தான் தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டு வருகிறார். ஆறு ஆண்டுகள் யுனிலீவரில் வேலை செய்தார். தற்போது சேனல் என்ற பேஷன் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். இவர் பொறுப்புக்கு வந்தபிறகு, நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள உள்ள பெண் தலைவர்களின் எண்ணிக்கை அறுபது சதவீதமாக அதிகரித்துள்ளது. 


நமக்கு பின்னே ஆற்றல் வாய்ந்த தலைவர் பின்னே உள்ளார் என்பதை அறியவேண்டிய காலம் இது. நாங்கள் கலந்துரையாடலின்போது, தங்கள் கருத்துகளை கூற வரும் அனைவரையும் கவனித்து அவர்களின் குரல்களையும் கேட்கிறோம் என்றார் லீனா நாயர். சானல் நிறுவனத்தின் அறக்கட்டளை ஃபாண்டேஷன் சானல் அமைப்புக்கு கொடுக்கும் நிதி கூடுதலாகியுள்ளது. இருபது மில்லியன் டாலர்களிலிருந்து நூறு மில்லியன் என நன்கொடை நிதி அதிகரித்துள்ளது. இந்த நிதியை வைத்து திருமணம் செய்யாமல் தனியாக வாழும் பெண்கள், மாங்குரோவ் காடுகளை வளர்க்கும் பெண்கள், பள்ளி செல்லும் சிறுமிகள் ஆகியோருக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறார்கள். 


சானல் நிறுவனத்தில் பெண் மேலாளர்களின் பங்களிப்பு 38 லிருந்து 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தோம், அதை பிறரிடம் சொல்லி பெருமைப்பட்டோம் என்று இல்லாமல் சமூக திட்டங்களுக்கு பணத்தை செலவழித்து வருகிறார் லீனா நாயர். தொண்ணூறுகளில் அவருடைய உறவினர்கள் எல்லாம் உயர்கல்வி படித்து பாதுகாப்பான வேலைக்கு சென்று வந்தபோடு, யுனிலீவர் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்த ஒரே ஒரு பெண்மணி அவர்தான். 


பல லட்சம் பெண்களின் நலன்களுக்காக நாங்கள் அனைவரும் குழுவாக இணைந்து உழைத்து வருகிறோம் என்றார் லீனா நாயர். 


டைம் வார இதழ்


கருத்துகள்