மொழி என்பது மனிதர்களுக்கே உரிய சிறப்பு அம்சம் - நோம் சாம்ஸ்கி
நோம்ஸ் சாம்ஸ்கி
மொழியியலாளர், தத்துவவாதி, அறிவுத்திறன் சார்ந்த அறிஞர், சமூக செயல்பாட்டாளர் என சொல்லிக்கொண்டே போகலாம். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் யூதப்பெற்றோருக்குப் பிறந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தத்துவம், மொழியியல் என இரண்டு பாடங்களை படித்தார். முனைவர் பட்டங்களை நிறைவு செய்தார். 1955ஆம் ஆண்டு, எம்ஐடியில் சேர்ந்தவர் 1976இல் அங்கு பேராசிரியரானார்.
நவீன மொழியியல் சிந்தனை மக்களுக்கு பரப்பியதில் முக்கிய பங்காற்றிய ஆளுமை. அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசுவது, அரசதிகாரத்தை தீவிரமாக எதிர்ப்பது என நோம் சாம்ஸ்கி எதையும் விட்டுவைக்கவில்லை. அதனாலேயே இவரது பெயரைக் கூறினாலே சர்ச்சையும் கூடவே வந்துவிடும். அறிவியல் பங்களிப்புக்காக ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். மொழியியல் அறிஞர் கரோல் ஸ்காட்ஸ் என்பவரை மணந்தார். இவரது மனைவி 2008ஆம் ஆண்டு மரணித்தார்.
முக்கிய படைப்புகள்
1957 சின்டாக்டிக் ஸ்ட்ரக்சர்ஸ்
1965 கார்டீசியன் லிங்குயிஸ்டிக்ஸ்
1968 லாங்குவேஜ் அண்ட் மைண்ட்
நோம் சாம்ஸ்கி, மொழி என்பது மனிதர்களுக்கான சிறப்பான அம்சம் என்று கருத்து கூறினார். இதில், பல ஆய்வாளர்களுக்கு வேறுபட்ட கருத்துகள் இருந்தன. மொழி என்பது பெற்றோர் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்வதில்லை. மொழி கற்கும் திறன், இயல்பாகவே குழந்தைகளுக்கு உள்ளது என நோம் சாம்ஸ்கி நம்பினார். இது அந்த காலத்திலேயே சர்ச்சைகளை கிளப்பியது. பொதுவாக உள்ளவர்கள் மொழியை இலக்கணம் கற்று பேச, எழுத, படிக்க கற்பதைப் போலவே பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியைக் கற்கிறார்கள். அது எப்படி நிகழ்கிறது? ஒருவருக்கு உள்ளார்ந்த மொழி இயல்பு இருப்பதால்தான். ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்திசாலித்தனம் கூடுதலாகவே இருக்கும். ஆனால், அதை பிறருக்கு கூறும் இடத்தில்தான் தடுமாறுவார்கள். அடிப்படை தேவைகளை நிறைவு செய்துகொள்வதே போராட்டம்தான். நவீன காலத்தில் மத்திய அரசு விருதுபெற்ற பத்திரிகையாளர் மேதகு பாலகிருஷ்ண மேனன் போன்றோர் இதற்கென செயலிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். போன் திரையில் தெரியும் படங்களை தொட்டாலே அதையொட்டிய தேவையை ஒலி வடிவில் பிறருக்கு உணர்த்தலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நுட்பமும் உதவிக்கு வருகிறது.
உளவியல், தத்துவம், கணிதம், மொழியியல் ஆகிய பல்வேறு துறைகளில் நோம் சாம்ஸ்கியின் கருத்துகள் புரட்சியை ஏற்படுத்தின. குழந்தைப்பருவத்தில் மொழிகளை எளிதாக கற்கலாம் என்ற கருத்து, மக்களிடையே பிரபலமானது.
கருத்துகள்
கருத்துரையிடுக