காட்டுத்தீக்கு காரணம் என்ன?

 










காட்டுத்தீக்கு காரணம் என்ன?


அண்மையில் நீலகிரியில் உள்ள குன்னூர் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ பற்றியது. அதை அணைக்க இந்திய விமானப்படையின் உதவி வழங்கப்பட்டது. மாநில வனத்துறையும் தீயை அணைக்க பாடுபட்டனர். இதற்காக எம்ஐ 17 வி5 என்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. பம்பி பக்கெட் மூலம் பதினாயிரம் லிட்டர் நீர் செலவானது.


காட்டில் உள்ள தீயை அணைக்க நிலப்பரப்பு வழியாக வீரர்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் பம்பி பக்கெட் பயன்படுத்தப்படுகிறது. குளம், ஏரியில் இருந்து நீரை எடுத்து வந்து அப்படியே தீ மீது ஊற்றுகிறார்கள். இதற்கென பக்கெட்டில் கீழ்ப்புறம் சிறப்பு வால்வு அமைக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் நவம்பர் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை அதிகளவு காட்டுத்தீ சம்பவங்கள் நடக்கிறது. அதிலும் பிப்ரவரி, ஏப்ரல் மே மாதங்களில் காட்டுத்தீ பாதிப்பு அதிகமாக நடைபெற்று வருகிறது. 


இந்திய வன ஆய்வுத்துறை, 2019ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுப்படி, 36 சதவீத காட்டுத்தீ சம்பவங்கள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. 4, 6 சதவீதம் என்று ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் மட்டுமே தீவிரமானவையாக உள்ளன என அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 


2015ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் 98 மிலியன் ஹெக்டேர்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டன. இந்த காடுகள் அனைத்துமே பருவமழைக்காடுகள் பிரிவில் வருகிறது.மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிஷா, சத்தீஸ்கர், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் நவம்பர் தொடங்கி ஜூன் மாதம் வரையில் அதிகளவு காட்டுத்தீ சம்பவங்கள் நடைபெறுகின்றன. 


2023ஆம் ஆண்டு கோவாவில் காட்டுத்தீ ஏற்பட்டது. அதில், மனிதர்கள் தலையீடு இருக்குமா என அரசு விசாரித்தது. 2021ஆம் ஆண்டு, உத்தர்காண்ட், இமாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் எல்லைப்பகுதி, ஒடிஷா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களி்ல் காட்டுத்தீ பாதிப்பு ஏற்பட்டது. 


தற்போது, மிசோரம் (3,738), மணிப்பூர் (1,702), அசாம் (1,652), மேகாலயா (1,252), மகாராஷ்டிரா (1,215) ஆகிய மாநிலங்களில் அதிகளவில் காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. இஸ்ரோவின் செயற்கைக்கோள் தகவல்படி, மகாராஷ்டிராவின் கொங்கணிப்பகுதி, குஜராத்தின் தெற்கு கடற்கரைப்பகுதி, கிர் போர்ப்பந்தர், தெற்கு ராஜஸ்தான், தென்மேற்கு மத்தியப் பிரதேச மாவட்டங்கள், கடல் மற்றும் உள்புறப்பகுதிகளான ஒடிஷா மாநிலம், பிறகு, ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டு வருவதை படங்கள் காட்டுகின்றன. இதெல்லாம் மார்ச் மாத தகவல்கள். இதேபோல தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. 


வட இந்தியாவில் ஏற்படுவதைப் போல தென்னிந்தியாவில் காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம், இங்கு பசுமை மாறாக் காடுகளே அதிகம் இருப்பதுதான். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானாவில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்படும் சில காட்டுப்பகுதிகள் உள்ளன. 


இடி மின்னல் காரணமாக காட்டுத்தீ சம்பவம் ஏற்படுகிறது. இதைத்தவிர, மனிதர்கள் குப்பைகளை எரிப்பது, சிகரெட் துண்டுகளை அணைக்காமல் எரிவது, கூடாரங்களை அமைத்து தங்கிவிட்டு நெருப்பை அணைக்காமல் விடுவது ஆகியவற்றால் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்களே அதிகம். வெப்பநிலை அதிகரித்து வருவது காட்டுத்தீ வேகமாக பரவ உதவுகிறது. 


1901ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம்தான் அதிக வெப்பநிலை பதிவானதாக வல்லுநர்கள் தகவல்களைக் கூறுகிறார்கள். கடந்த ஜனவரி மாதம், நூற்றாண்டில் ஐந்தாவதாக அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. 

ஐஇ

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்