கருப்பினத்தவருக்கான புரட்சிப்பாடலை பாடியவர் - ஆந்த்ரா டே
ஆந்த்ரா டே
andra day
சூப்பர் பௌல் போடியத்தில் கருப்பினத்தவரின் தேசியகீதத்தை பாடவேண்டும் என்பதுதான் டேவின் கனவு. ஏற்கெனவே பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பாடி புகழும், பெயரும் பெற்றவர், எதற்கு சூப்பர் பௌல் போடியத்தை முக்கியமாக நினைக்கவேண்டும்?
2015ஆம் ஆண்டு, டே ரைஸ் அப் என்ற பாடலைப் பாடி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த பாடல், இப்போதும் கருப்பினத்தவரின் போராட்டங்களில் ஒலித்து வருகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லி ஹாலிடே என்ற படத்தில் நடித்தார். அதை இயக்கியவர், லீ டேனியல்ஸ். அதில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர், கோல்டன் குளோப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டார். பாடல்களுக்கு கிராமி விருது பெற்றார். தி டெலிவரன்ஸ், எக்ஸிபிட்டிங் ஃபார்கிவ்னஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவை விரைவில் வெளிவரவிருக்கின்றன.
ரசிகர்கள் ரைஸ் அப் என்ற புரட்சி பாடலைப் போலவே அடுத்தடுத்த பாடல் இருக்கவேண்டுமென நினைக்கின்றனர். ஆனால் டே சற்று வேறுவிதமாக யோசிக்கிறார். அப்படி ரசிகர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வது தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் எனது பாடலை சுதந்திரமாக இருக்கவிரும்புகிறேன் என்றார். பாடகர் ஹாலிடேவின் குரலைப் படத்தில் கொண்டு வருவதற்காக நிறைய புகைப்பிடித்து குரலை மாற்றியமைத்தார். இதன் காரணமாக, அவரது இயல்பான குரல் சேதமடைந்துள்ளது. இருந்தாலும் அதை சரி செய்துகொண்டு காசன்ட்ரா என்ற அடுத்த ஆல்பத்தை வெளியிட தயாராகி வருகிறார்.
-மோசஸ் மென்டெஸ்
Cassandra Monique Batie (born December 30, 1984), known professionally as Andra Day, is an American R&B and soul singer, songwriter, and actress. She is the recipient of various accolades, including a Grammy Award, a Children's and Family Emmy Award, and a Golden Globe Award, along with nomination ... Wikipedia
கருத்துகள்
கருத்துரையிடுக