இடுகைகள்

மாராடோனா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சர்ச்சை பிளஸ் சாகசம் = மாரடோனா!

படம்
              தங்கச் சிறுவன் மாரடோனா ! அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் டியாகோ மாரடோனா 60 வயதில் மாரடைப்பால் காலமானார் . 1986 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலகப்கோப்பை பெற்றுத்தந்த வீரர் என மாரடோனா புகழப்படுகிறார் . இப்போட்டியில் காலிறுதிச்சுற்றில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஹேண்ட் ஆப் காட் கோல் முறை அனைத்து ஊடகங்களிலும் புகழப்பட்டு , நூற்றாண்டிற்கான கோல் என வரலாற்றில் இடம்பிடித்தது . இதுதொடர்பாக உருவான ஆவணப்படத்தில் அந்த கோல் , ஃபாக்லாந்து போரில் இங்கிலாந்து பெற்ற வெற்றிக்கான பழிவாங்கல் என்று குறிப்பிட்டார் மாரடோனா . கால்பந்து மைதானத்திலும் , நிஜ வாழ்க்கையிலும் கலககாரராக மாரடோனா இருந்தார் . மாஃபியா குழுக்களோடு தொடர்பு , பெண்களிடம் அதீத ஈர்ப்பு , கோகைன் , மதுபானம் ஆகியவற்றின் மீதான பிரியம் எப்போதும் ஊடக வெளிச்சம் இவர்மீது படும்படியாகவே வாழ்ந்தார் . மாரடோனாவுக்கு நான்கு மனைவிகள் மூலம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர் . ப்யூனோ ஏர்ஸின் வெளிப்புறத்தில் வில்லா டேவடோ என்ற இடத்தில் மாரடோனா வளர்ந்தார் . வறுமையான சூழலில் மூன்று வயதில் கால்பந்தை பரிசாக பெற்றார் . கால்பந்து விளை