இடுகைகள்

விசுவாசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிழைத்திருப்பதே முக்கியம் என நம்பி வாழும் உளவாளியின் கதை!

          பிளட் டீமன் சீன காமிக்ஸ் தொடர் முரிம் கூட்டமைப்பில் உளவாளியாக உள்ள தீயசக்தி இனக்குழுவின் உளவாளி பிடிபட்டு கொல்லப்படுகிறான். சாகும் அவன் நான் இப்படி இறந்திருக்கக்கூடாது என நினைக்கிறான். அவனது ஆவி, பல பத்தாண்டுகளுக்கு முன்னர் செல்கிறது. தீயசக்தி இனக்குழுவால் பிடிபடுவதற்கு முன்னர், ஒரு விடுதியில் வாழ்கிறான். அவனுடன் இரட்டையர் இருவர் இருக்கிறார்கள். அங்கு, வரும் தீயசக்தி இனக்குழுவினர் குழந்தைகளை, இளைஞர்களை பிடித்துச் செல்கிறது. கடத்துகிறார்கள். நாயகன் தப்பியிருக்கலாம். ஆனால், அவனுக்கு பிரியமான சிறுவனைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி முன்னர் நடந்தது போலவே தீயசக்தி குழுவிடம் மாட்டிக்கொள்கிறான். ஆனால் இங்கு நடக்கும் விஷயங்கள் வேறு. இவன் அம்மாவின் பரிசாக வைத்திருக்கு்ம குறுங்கத்தி, அந்த கத்தியில் வாழும் தேவதை மூலமாக இருவரைக் கொல்கிறான். பிறகு பிடிபட்டு தீயசக்தி குழுவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். நாயகனுக்கு ஏற்கெனவே தீயசக்தி குழுவில் உளவாளியாக இருந்த அனுபவம்,பத்தாண்டு தகவல் சேகரிப்பு என கூடுதல் பலம் உள்ளது. அதை பயன்படுத்தி தன்னை தீயசக்தி இனக்குழுவினர் கொல்வ...