இடுகைகள்

கோள்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்வெளி பற்றி அறிய விரும்புகிறீர்களா?

படம்
விண்வெளி பற்றிய புத்தகங்கள் சுயமுன்னேற்றம் , தொழில் என பல்வேறு நூல்கள் இருந்தாலும் விண்வெளியில் என்ன உள்ளது என்று அறியும் ஆவல் மனிதர்களுக்கு குறைவதில்லை. எனவேதான் பல்வேறு நூல்கள் இன்றும் வெளிவந்தபடி உள்ளன. SuperSpace: The furthest, largest, most incredible features of our Universe சூப்பர்ஸ்பேஸ் என்ற இந்த நூல், விண்வெளி உலகிலுள்ள ஏராளமான தகவல்களை நமக்குச்சொல்லுகிறது. குறிப்பாக கோள்கள், நிலவுகள், நிலப்பரப்பு, அங்கு சென்ற விண்கலங்கள், லேண்டர்கள் என தகவல்களும் ஓவியங்களும் பிரமிப்பு ஊட்டுகின்றன.  விண்கலங்களில் உள்ள சின்னச்சின்ன தகவல்களைக் கூட விட்டு வைக்காமல் எழுதியுள்ளனர். நாசாவின் க்யூரியாசிட்டி ரோவரில் 17 கேமராக்கள் உள்ளன என்பதோடு பல்வேறு கோள்களைப் பற்றிய தகவல்களும் அருமையாக உள்ளன. சிறுவர்களுக்கான சிறந்த அறிவியல் நூல் இது.  The Planets பேராசிரியர் பிரையன் காக்ஸ் எழுதியுள்ள கோள்களைப் பற்றிய செய்திகள் கொண்ட நூல் இது. இப்பெயரில் பிபிசியிலும் தொடர் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. இதில் முழுக்க சூரியக்குடும்பம் உருவான வரலாறு அறிவியல் பூர்வமான முறையில் விளக்