விண்வெளி பற்றி அறிய விரும்புகிறீர்களா?
விண்வெளி பற்றிய புத்தகங்கள்
சுயமுன்னேற்றம் , தொழில் என பல்வேறு நூல்கள் இருந்தாலும் விண்வெளியில் என்ன உள்ளது என்று அறியும் ஆவல் மனிதர்களுக்கு குறைவதில்லை. எனவேதான் பல்வேறு நூல்கள் இன்றும் வெளிவந்தபடி உள்ளன.
SuperSpace: The furthest, largest, most incredible features of our Universe
சூப்பர்ஸ்பேஸ் என்ற இந்த நூல், விண்வெளி உலகிலுள்ள ஏராளமான தகவல்களை நமக்குச்சொல்லுகிறது. குறிப்பாக கோள்கள், நிலவுகள், நிலப்பரப்பு, அங்கு சென்ற விண்கலங்கள், லேண்டர்கள் என தகவல்களும் ஓவியங்களும் பிரமிப்பு ஊட்டுகின்றன.
விண்கலங்களில் உள்ள சின்னச்சின்ன தகவல்களைக் கூட விட்டு வைக்காமல் எழுதியுள்ளனர். நாசாவின் க்யூரியாசிட்டி ரோவரில் 17 கேமராக்கள் உள்ளன என்பதோடு பல்வேறு கோள்களைப் பற்றிய தகவல்களும் அருமையாக உள்ளன. சிறுவர்களுக்கான சிறந்த அறிவியல் நூல் இது.
The Planets
பேராசிரியர் பிரையன் காக்ஸ் எழுதியுள்ள கோள்களைப் பற்றிய செய்திகள் கொண்ட நூல் இது. இப்பெயரில் பிபிசியிலும் தொடர் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. இதில் முழுக்க சூரியக்குடும்பம் உருவான வரலாறு அறிவியல் பூர்வமான முறையில் விளக்கப்பட்டுள்ளது.
கோள்களோடு மனிதர்கள் கொண்ட தொடர்பு, தொலைநோக்கிகள், நாம் விண்வெளியில் செய்த திட்டங்கள் என பல்வேறு விஷயங்கள் ஆழமாக எழுதப்பட்டுள்ளன. ஆர்வம் கொண்டவர்கள் பிபிசி சீரிஸ் பார்த்தாலும் சரிதான். புத்தகம் படித்து மகிழ்ந்தாலும சரிதான்.
Cosmos: The Art and Science of the Cosmos
இந்த நூலில் நீங்கள் பயந்து நடுங்கும் எழுத்துக்கள் குறைவு. காபி டேபிள் நூல் போல, நிறைய புகைப்படங்கள் உள்ளன. சந்தோஷமாக படங்களைப் பார்த்து படக்குறிப்புகளைப் படியுங்கள் பின்னர் அதனைபற்றி படித்து தெரிந்துகொள்ளுங்கள். அல்லது தேடித் தெரிந்துகொள்ளுங்கள்.
நன்றி:பிபிசி