கார்கில் போர் நினைவு தினம் - 20 ஆம் ஆண்டு




Image result for kargil vijay diwas




1999 ஆம் ஆண்டு வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் கார்கில் போர் நடைபெற்றது. பாக்.இராணுவத்தை விரட்டி அடித்து நாட்டைக் காப்பாற்றியது இந்திய இராணுவம் என ஊடகங்கள் அலறின. ஆனால் அரசுக்கு பெருமை என்றாலும் பலியான இராணுவ வீர ர்களின் எண்ணிக்கை கணிசமானது.

கார்கில் போர் பற்றிய தகவல் தொகுப்பு இதோ!

கார்கிலில் பாக். இராணுவம் பல்வேறு தடைகளையும் அரண்களையும் உருவாக்கியதமு இதன் எண்ணிக்கை 140. இந்திய நிலப்பரப்பில் பாக் இராணுவம் 8 கி.மீ முன்னேறி வந்தது.

ஏப்ரல் 1999 அன்று 7 பட்டாலியன்கள் கார்கிலின் வடக்குப்பகுதியில் குவிந்தன. 23 நாட்கள் போரில் பாகிஸ்தான் இராணுவத்தை, இந்தியப்படை அடித்து விரட்டி சாதித்தது. இப்போரில் மேஜர் ராஜேஷ் அதிகாரி, கேப்டன் விவேக் குப்தா, லியோடனன்ட் கர்னல் ஜி.விஸ்வநாதன் ஆகியோர் பலியானார்கள்.


டைகர் ஹில்ஸ் பகுதியில் போர் நடைபெற்றது. இதன் உயரம் 16 ஆயிரம் அடி உயரம். இப்போரில் பாகிஸ்தான் இராணுவம் 772 வீர ர்களையும் 69 அதிகாரிகளையும் பலி கொடுத்தது.

முதல் மூன்று நாட்களில் பாகிஸ்தானியர்கள், நூறு தோட்டாக்களை சுட்டனர். இதில் இந்திய விமானப்படையின் ஒரு விமானம் கூட பாதிக்கப்படவில்லை.

105 மி.மீ திறன் கொண்ட இந்திய ஃபீல்டு துப்பாக்கி, 155 மி.மி திறன் கொண்ட போபர்ஸ் பீரங்கி இதில் பயன்படுத்தப்பட்டது.

மே 26, 1999 அன்று ஆபரேஷன் விஜய் திட்டம் இந்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. போரில் வீர ர்கள் சுமந்து சென்ற கிட்டின் எடை 24 கி.கி. பயன்படுத்தி துப்பாக்கி இன்சாஸ் ரைபிள் எடை 4.5 கி.கி.

படைகள்

ராஜ்புதனா ரைபிள்ஸ்

கிரேனடயர்ஸ்

கார்வால் ரைபிள்ஸ்

ஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபான்ட்ரி மற்றும் ரைபிள்ஸ்


கூர்க்கா ரைபிள்ஸ்

44 பட்டாலியன் பாரா மிலிட்டரி படைகள் காஷ்மீருக்கு அனுப்பப் பட்டன.

ஜூன் 12, 1999 அன்று வான் வழித் தாக்குதல்களை நிறுத்துங்கள் என்று பாக். அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தாஜ் அசிஸ் செய்தி அனுப்பினார்.


இந்திய இராணுவம் 2,50,000 ஷெல், வெடிகுண்டுகள், ராக்கெட்டுகளை கார்கில் போரில் செலவழித்து அப்பகுதியை முற்றுகையிலிருந்து மீட்டது.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்