இதயத்தை எகிறவைக்கும் செக்ஸ்! - கிரான்க் - ஜேசன் ஆடும் ஆட்டம்!
கற்புக்கரசியான நாயகி! |
கிரான்க்
இயக்குநர் - மார்க் நெவால்டைன், பிரையன் டெய்லர்
ஒளிப்பதிவு - ஆடம் பிடில்
இசை - பால் ஹஸ்லிங்கர்
ஹீரோவின் ஆன்ம நண்பர்! |
கூலிக்கொலை செய்யறவரு, எதிரிகளோடு சதியால தன் இதயத்தை இழந்து விட்டு லோலாய் படுவதாம்ப்பா கதை.
கதை, ஹீரோவோட பேரு, நாயகி யாருங்கிறதையெல்லாம் ஒத்தி வெச்சிட்டு ஜாலியாக சீனு வைட்லா படம் பாக்குற ஃபீல்ல படம் பார்த்தா படம் ஜாலி அதிர்வேட்டு.
ஹீரோவுக்கு சுயநினைவு இல்லாதபோது அவரோட ஹார்ட்டு, கிட்னி, கடைசியாக அந்தரங்க மேட்டர் உட்பட வெட்டி எடுக்க ஜப்பான் கூட்டம் திட்டம் போடுது. அங்கதான் ட்விஸ்ட். அவரை ரிவென்ஞ் எடுக்க பேட்டரி இதயத்தை பொருத்துறாங்க. அது இயங்க அவர் ஓடிக்கிட்டே இருக்கணும். ஆச்சா? அதோட ஒரிஜினல் இதயத்தையும் தேடிப் பிடுங்கணும்னு ஓவர் டைம் வேலை.
இதயத்தை ஓடவைக்க செக்ஸூம் ஒரு வழிதான்! |
ஜேசன் ஆக்சன் அதிர்ச்சி என அத்தனையிலும் ஒரே ரியாக்ஷன் காட்டி பின்னி எடுக்கிறாரு. இதயத்திருடனை தேடி குஜால் கிளப்புக்கு ஜேசன் வர்றாரு. அங்க, மார்ல எலக்ட்ரிக் டேப் ஒட்டி ஆடுற ஏமி ஸ்மார்ட்டின் டான்ஸ் செம சூடு ஏத்துது. பதறிப்போற ஜேசன் எதுக்கு அந்த பிகருக்கு உம்மா கொடுத்து அணைச்சுக்கிறாருன்னு பாத்தா வொய்ஃப்பாமா? அடக் கருமமேன்னு இங்கிட்டு பாத்தா, செக்ஸ் ஹாஸ்டல்ல காப்பாத்துன ஜப்பான் பிகரு, நான் உங்கூடத்தான் செக்ஸ் வெச்சுப்பேன். எப்ப ரெடி நீன்னு துரத்துது.. ஆத்தாடி நாம இங்கிலீஸ் படம்தான் பாக்குறமா இல்ல கே.கே நகர்ல இஎஸ்ஐ பக்கம் ஒட்டியிருக்குமே கள்ளச்சாவி ரக படத்துக்கு கீது வந்துட்டமான்னு ஒரே டவுட்டு.
பக்கத்துல நம்ம பாலக்காட்டு தோழன் எச்சில் வழிய படத்தைப் பார்த்துக்கிட்டிருந்தான். ரைட் கனவு கிடையாது. ஒகே. ரைட்டுன்னு படத்தைப் பார்த்தா ஆங்கிலத்தில் ஒரு தெலுங்குப்படம் ட்ரை பண்ணியிருக்காங்க. இதே டெக்னிக்குல நெஞ்சிருக்கும் வரை ன்னு ஒரு படம் தமிழ்ல எடுத்தாங்க. யாராவது அதை நினைச்சு பாத்தீங்களா? ஜேசனோட இதயத்தை ஆபரேஷன் பண்ணி எடுக்கும்போது, சிகரெட் தட்டறான், எச்சயைக் காரித் துப்புறான் .. சாமி..
ரேஸ்கோர்ஸில் இரு குதிரைகள் கொஞ்சிக்குலாவும் காட்சி! |
படத்தை ஏராளமான துணிச்சலோடு எடுத்திருக்காங்க. ஹீரோவோட மனைவி பணத்துக்காக டிரஸ்ஸை அவுத்து போட்டு ஆடி ஜட்டியை அவுக்கும்போது நாயகன் வந்து வரலாற்றுச்சம்பவத்தை நம்மள பாக்க விடாத தடுத்துடறாரு. ச்சே... ஆனால பக்கத்துல இருக்கிற பிகர்கள் எதுவுமே இல்லாம ஆடிக்கிட்டிருப்பாங்க. அதோட ஜேசனோடு ஆண் நண்பர் ஒரு ஓரினச்சேர்க்கையாளருங்க. அப்புறம் இவருக்கு உதவி செய்யுற இல்லீகல் டாக்டர் பிரெண்டு கருப்பினப் பெண்ணோடு புட்டத்தை மசாஜ் பண்ணிட்டேதான் எல்லா ஆலோசனையும் சொல்லுறாரு.
அங்கத காட்சி படம் முழுக்க இருக்கு. பாத்து புரிஞ்சுக்கிறவங்க புத்திசாலி. அம்புட்டுத்தேன். அதிலும் லாஸ்ட் பைட்டு எடுத்திருக்காங்க பாருங்க சாமி. வாட் எ கிரியேட்டிவிட்டி. முக்கியமாக ஹீரோ தன் இதயத்தைக் காப்பாத்திக்க குதிரைப் பந்தய மைதானத்தில் என்ன சோலி பாக்குறாருன்று பாக்க மறந்துடாதீங்க.
-லோக்கல் ப்ரூஸ்லீ