பயிர்களை அழிக்கும் ஆர்மிபுழுக்கள்!



Image result for armyworms





ஆர்மிவார்ம்ஸ் என்று அழைக்கப்படும் புழுக்கள் இவை. கம்பளிப்புழுக்களை விட அதிக பசி கொண்டவை. Spodoptera frugiperda எனும் பெயரைக் கொண்ட இவை, அர்ஜென்டினா முதல் புளோரிடா வரை ஏராளமான விவசாய நிலங்களை அழித்துள்ளன. ஒரேநாள் இரவு போதும், நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்களை அழிக்க. அப்படியொரு வேகமாக பயிர்களை சாப்பிட்டு வளரும் லார்வாக்களைக் கொண்ட புழுக்கள் இவை. 

பதினான்கு நாட்கள் மட்டுமே இப்புழுக்கள் உயிர்வாழும். 

குறிப்பாக கோடையில் மட்டுமே தோன்றி வளர்ந்து அழியும். 

2. பெண் புழு, பத்து நாட்களில் 1500 முட்டைகளை இடுகிறது. ஒருநாளில் உணவுக்காக நூறு முதல் 500 கி.மீ. தூரம் வரை இந்த புழுக்கள் ஊர்ந்து செல்கின்றன. 
3. ஆண்டுதோறும் இந்த புழுக்களிடமிருந்து பாதுகாக்க பிரேசில் அரசு 600 மில்லியன் டாலர்களை செலவு செய்கிறது. 


4. ஆப்பிரிக்காவில் இந்த ஆர்மி புழுக்களால் 50 சதவீதம் வரை பயிர்கள் நாசமாவதாக கூறுகின்றனர்.

5. 2018 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் இந்த புழுக்களால் ஏற்பட்ட நாசத்தின் மதிப்பு 6 பில்லியன் டாலர்கள். 

6. இப்புழுவின் நீளம் 2.5 செ.மீதான். 

இப்புழுக்களிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும் தப்பிக்க மரபணு மாற்ற பயிர்களை அமெரிக்க விவசாயிகள் பயிரிடத் தொடங்கிவிட்டனர். இவர்களின் சதவீதம் 82. 

நன்றி: க்வார்ட்ஸ

பிரபலமான இடுகைகள்