வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு! மதவாத நாடான இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் கலவரங்கள், கும்பல் வல்லுறவு, இந்து குண்டர்கள் கொள்ளை என எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இதுபோல பருவ காலங்களில் நடைபெறும் இயற்கை பேரிடர்களும் அதிகரித்து வருகிறது. அப்படியான சூழலில் ஒருவர் தன்னை எப்படி காத்துக்கொள்வது என்று பார்ப்போம். உணவு, மருத்துவ சிகிச்சைக்கான பொருட்கள், போகும் இடம், வழிப்பாதை ஆகிய மூன்று விஷயங்கள் முக்கியம். கோவிட் வந்தபிறகு நிறையப்பேர் தனியாக இஎம்ஐ கட்டியேனும் வண்டி வாங்கிவிட்டார்கள். நமது மக்கள், நாம் செத்தாலும் கூடவே நான்கு பேரை இழுத்துச்செல்லவேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டவர்கள். தும்மும்போதும் இருமும்போதும் கூட கைக்குட்டை பயன்படுத்த மறுப்பவர்கள். எனவே, உயிர்பிழைக்கவேண்டிய நேரத்தில் நீங்கள் பிறரது வாகனங்களை எதிர்பார்க்க கூடாது. எந்தளவு வேகமாக செல்கிறீர்களோ, அந்தளவு நல்லது. தாமதம் செய்தால், சாலையில் கூட்டம் சேர்ந்துவிடும். அப்போது நீங்கள் என்ன முயன்றாலும் வேகமாக செல்லமுடியாது. அவரவருக்கு அவரவர் உயிர், சொந்தம், பிள்ளை குட்டி கருப்பட்டிதானே ஐயா... வயதானவர்கள், குழந்தைகள் ...