இடுகைகள்

உலோகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழிலதிபரைத் தாக்கும் மாயவலி, மருத்துவருக்கு ஏற்படும் பதற்றக்குறைபாடு என இரண்டையும் இணைக்கும் காடு! ஃபாரஸ்ட்

படம்
  ஃபாரஸ்ட் - கே டிராமா ஃபாரஸ்ட் தென்கொரியா டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் தென்கொரியாவின் சியோலில் நான்செங் என்ற முதலீட்டு நிறுவனம், ஆர்எல்ஐ என்ற பெருநிறுவனத்தின் பகுதியாக இயங்கி வருகிறது. அதன் தலைவர் காங் சன் சியோக். அவருக்கு பாண்டம் பெயின் என்ற உளவியல் குறைபாடு உள்ளது. இந்த குறைபாட்டால், அவரது வலது கை தீயால் எரிந்து பொசுங்குவது போல தோன்றுகிறது. நிஜத்தில் கை எரிவது போல வலியால் துடிக்கிறார். அப்போது அவர் மனக்கண்ணில் ஒரு காடு தோன்றுகிறது. அதில் நெருப்பு பற்றுவது போல காட்சிகள் தோன்றுகின்றன. மருத்துவமனையில் பான்டம் பெயின் தோன்றுவதற்கு காரணம், அவரது பால்ய கால பிரச்னைகள்தான். அதை தீர்த்தாலே பிரச்னை தீரும் என மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் காங்கிற்கு   அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. அப்போது தொழில்ரீதியாக அவர் மிர்யாங் எனும் காடு பற்றி அறிகிறார். அங்கு டேசங் எனும் தொழில்நிறுவனம் ரிசார்ட் கட்டவிருப்பதாக அறிகிறார். அந்த திட்டத்தை காங் பெற நினைக்கிறார். தனது நிறுவனத்திடம் அனுமதி பெற்று மிர்யாங் காட்டில் உள்ள தீயணைப்பு துறை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அதேநேரத்

கிராமத்தை அழித்த களிமண் எரிமலை - இந்தோனேஷியா

படம்
  களிமண் எரிமலை பெரிய மலை உச்சியில் எரிமலை பொங்கி வழிந்து புகையும், பாறைக்குழம்பும் வெளியே வருவதை டிவி, நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள். இந்தோனேஷியாவில் உள்ள சித்தோர்ஜோவாவில் களிமண் எரிமலையில் பாறைக்குழம்பு வெடித்து வெளியாகிறது. எண்ணெய் தோண்டி எடுக்க ஒரு தனியார் நிறுவனம் ட்ரில்லரை உள்ளே விட்டு துளையிட்டது. அப்போதுதான் எரிமலைக் குழம்பு தலைகாட்டியது. அப்போது 155 மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அதன் விளைவுதான் எரிமலைக் குழம்பு என நிறுவனம் சொன்னது. உலகம் முழுக்க ஆயிரம் களிமண் எரிமலை கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்தோனேஷியாவில் கண்டறியப்பட்டது, மனித செயல்பாடுகளால் உருவானது.   2006ஆம் ஆண்டு மேமாதம் 28ஆம் தேதி துளையிட்டபோதுதான் முதல்முதலில் லூசி எரிமலை உருவானது தெரியவந்தது. நீர், நீராவி, வாயு என முதலில் வெளியானது. பிறகு முழுக்க மண்ணும், உலோகமும் வெளியேறத் தொடங்கியது.     ஒருநாளுக்கு 1,80,000 க்யூபிக் மீட்டர் களிமண் வெளியேறத் தொடங்கியது. 2011ஆம்ஆண்டு வெளியாகும் களிமண் அளவு 10 ஆயிரம் க்யூபிக்காக குறைந்தது.   அங்கிருந்த மக்களை அரசு காலிசெய்யச் சொல்லியது. 30 ஆயிரம் பேர் வீட்டை காலிசெய்த

பூமியின் அடித்தட்டு மர்மம்! - பூமியின் அடித்தட்டில் இருப்பது உலோகமா, வேறு பொருட்களா?

படம்
  பூமியின் அடித்தட்டு மர்மம்! பூமியின் கீழ்ப்புறபகுதியில் நிறைய மர்மங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும் நாம் அறிந்தது, குறைவான தகவல்களைத்தான். புவியோடு பகுதி, மூடகப் பகுதியைக் (Mantle) கடந்து கண்டத்தட்டுகள், வெளிப்புற, உட்புற கருவப் பகுதிகளில் (Outer, inner core ) அழுத்தமும் வெப்பமும் அதிகம். பூமியின் கீழே 5 ஆயிரம் கி.மீ. ஆழத்திற்கு செல்லும்போது, அங்குள்ள உட்கருவத்தில்  இரும்பு, நிக்கல் உருண்டையான வடிவத்தில் உள்ளது என்பதே ஆய்வாளர்களின் எண்ணமாக இருந்தது.  நேச்சர் இதழில் வெளியாகியுள்ள அறிவியல் அறிக்கையில், உட்கருவத்தில் திட, திரவம் என இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையில் (Super ionic state) பொருட்கள் உள்ளன என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுக்காக, நிலநடுக்க அலைகளைப் (Seismic waves) பயன்படுத்தியுள்ளனர்.  புவி அடுக்குகளுக்கு இடையில் நிலநடுக்க அலைகள் வெவ்வேறு அலைநீளத்தில் செலுத்தப்பட்டு, அதில் உள்ள வேதியியல் பொருட்களை அறிய முயன்றனர். இதற்கு முன்னர் செய்த ஆய்வில், ஷியர் அலைகளை (Shear waves)  பயன்படுத்தினர். இதில் கிடைத்த  தகவல்களை வைத்து, புவியின் உள் கருவத்த

நிலங்களில் சுரங்கம் அமைக்க முடியுமா?

படம்
மிஸ்டர் ரோனி பிபிசி  பூமியில் பல்வேறு கனிமங்களை சுரங்கம் அமைத்து தோண்டி விட்டோம். இனி மாசுபாடுகளின் பிரச்னைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தெருக்களில் நடந்து வருகின்றன. இதனால் வேறு கோளைத் தேடிச்சென்று சுரங்கம் அமைத்து கனிமங்களை பெற ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். அது இரவில் நம்மை குளிர்விக்கும் நிலா என்றால் ஆச்சரியப்படுவீர்கள். நிலவின் தென் முனையில் மனிதர்கள் வாழ்வதற்கான நீராதாரம் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கிறது. மனிதர்கள் இங்கு வாழ நினைத்தால் இப்பகுதியில் காலனிகளை அமைக்கலாம். இங்கு கிடைக்கும் உலோக கனிமங்களும் நம்மை கவர்ந்து ஈர்க்கின்றன. சிலிகான், அலுமினியம், நியோடைமினியம், லாந்தனம், டைட்டானியம் ஆகியவை நிலவில் அதிகளவு உள்ளன. மேலும் தரைப்பரப்பில் ஹீலியம் 3 எனும் ஐசோடோப்பு கிடைக்கிறது. இதனை அணுஉலையில் பயன்படுத்த முடியும். இதனால் பல்வேறு அணுஉலை நிறுவனங்கள் நிலவை தோண்ட ஆர்வமாக முன்வந்துள்ளன. பிபிசி  நிலவில் உள்ள கனிமங்களை பல்வேறு உலக நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் முயற்சிகளை செய்து வருகின்றனர். 1979ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. நிலவை உலக நாட

தங்க ஆராய்ச்சி - நூதன வழியில் தங்கம் தேடும் ஆராய்ச்சியாளர்கள்

படம்
giphy.com தங்கத்தைக் கண்டறிய புதிய ஆராய்ச்சி! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் நிலத்திலுள்ள கனிமங்களை மரங்களின் மூலம் கண்டறியும் முறையைக் கண்டறிந்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் மர்மோட்டா (marmota) என்ற நிறுவனம் இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளது. மரங்களின் வேர்கள் நிலத்தடியில் ஊடுருவி கனிமச்சத்துகளை உறிஞ்சுகின்றன. இந்த நிறுவனம் அவற்றின் இலைகள், தண்டுகளை ஆராய்ந்து அதிலுள்ள தங்கத்தின் அளவைக் கணித்துள்ளன. மண்ணில் டன்னுக்கு 3.4 கிராம் தங்கம் உள்ளதை மாதிரிகளிலிருந்து கண்டறிந்துள்ளனர். இச்சோதனை முன்னர் நடத்தப்பட்டபோது, இந்த வெற்றிகரமான முடிவு கிடைக்கவில்லை. மர்மோட்டா நிறுவனம், இலைகளின் மாதிரிகளை சேகரித்து சோதித்தது. அதில் சென்னா வகை மர இலைகளில் அதிகளவு தங்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இங்குள்ள பகுதிகளை திறம்பட ஆராய உள்ளோம். இங்குள்ள மரங்களின் இலைகள், தண்டுகள், கிளைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள கனிமங்களின் அளவைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார் மர்மோட்டா நிறுவன ஆராய்ச்சியாளர் ஆரோன் ப்ரௌன். பொதுவாக மண்ணிலுள்ள தங்கத்தை எப்படி ஆராய்வார்கள்? மண்ணைத் தோண்டி அத

சாலையில் ஆம்லெட் போட முடியுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சாலையில் முட்டையை ஆம்லெட் போடுமளவு வெப்பம் உருவாகுமா? வெயில் கொடுமையை விளக்க சிலர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். நீங்கள் அதனை நினைத்துத்தான் இப்படி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னதான் வெயில் உங்களை படுத்தினாலும், முட்டையை முழுமையாக வேக வைக்க முடியாது. உங்களுக்கு முட்டையை முழு மையாக வேக வைக்க வேண்டுமெனில் அதற்கு 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவை. ஆனால் இதற்கும் தரை உதவாது. அதற்கு பாதாளச்சாக்கடை இரும்பு மூடி பயன்படும். உலோகம் கான்க்ரீட் அல்லது தார் சாலையை விட வேகமாக சூடேறும் என்பதால் இந்த ஐடியா. மற்றபடி இந்த சோதனையைச் செய்து முட்டையை வீணாக்காதீர்கள். முட்டை 5 ரூபாயை பச்சை குதிரை போல தாண்டிக் குதிக்கும் போது இதுபோன்ற சோதனைகள் வேண்டாமே ப்ரோ. நன்றி: பிபிசி