இடுகைகள்

மெக்சிகோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார்டெல்கள் ஆளும் மெக்சிகோ தேசம்! - தினசரி கொல்லப்படும் அப்பாவி மக்கள்!

படம்
  மெக்சிகோ அதிபர் ஆம்லோ கார்டெல்கள் ஆட்சி செய்யும் மெக்சிகோ தேசம் மெக்சிகோ நாட்டை இடதுசாரி பாப்புலிச தலைவர் ஆண்ட்ரேஸ் மானுவேல் லோபஸ் ஆப்ரடார் ஆள்கிறார். இப்படி கூறுவது பெயரளவில்தான். உண்மையில் மெக்சிகோவை   ஆள்வது போதைப்பொருட்களை விற்கும் கார்டெல் குழுக்கள்தான். அதிபரான ஆம்லோ ஆட்சிக்கு வரும்போது தினசரி 89 கொலைகள் நடந்துவந்தன. இப்போது அந்த எண்ணிக்கை கூடி 96 ஆக மாறியிருக்கிறது. ஆட்சி மாற காட்சியும் மாறியிருக்கிறது. என்னதான் நடக்கிறது? இடதுசாரி தலைவரின் ஒற்றைத்திட்டம் கூட நடைமுறைக்கு வரவில்லை. அணுவளவு பயனும் தரவில்லை என்பதே உண்மை. கார்டெல்களில் வேலை செய்யும் நெருக்கடி சூழலில் தள்ளப்பட்ட 2.3 மில்லியன் இளைஞர்களுக்கு   வேலைவாய்ப்பு திறன்களை அளிப்பதாக அதிபர் ஆம்லோ கூறினார். கொலைக்குற்றங்களைக் குறைக்க அறுபதாயிரம் பேர் கொண்ட தேசிய காவல்படையை உருவாக்குவதாக வாக்களித்தார். ஆனால், தேசிய காவல்படை மத்திய அமெரிக்க அகதிகளை தேடி வேட்டையாடி வருவதால், கொலைக்குற்றங்களை தடுக்கமுடியவில்லை. அதேசமயம் நாட்டில் நடைபெறும் கொலைக்குற்றங்களும் கூடி வருகின்றன. அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இயலாமையில் த

போதைமருந்து கும்பலின் வணிகம் சிறக்க நரபலி கொடுத்த மத தலைவர்!

படம்
  கான்ஸ்டான்ஸோ – அடாஃபோ டி ஜீசஸ் 1962ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி பிறந்தவர், அடால்ஃபோ. மியாமியில் வாழ்ந்தவர்கள், க்யூப நாட்டை பூர்விகமாக கொண்டவர்கள். அடால்ஃபோ குழந்தையாக இருக்கும்போது அவரின் அம்மா, புவர்டோ ரிகா சென்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.அடால்ஃபோவுக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள். இவர்கள் அனைவருமே வெவ்வேறு தந்தைகளுக்குப் பிறந்தவர்கள்.   கத்தோலிக்கராக மாறி வழிபடத் தொடங்கியது அவரின் குடும்பம். இரண்டாவது தந்தை இறந்தபோது, குடும்பம் பொருளாதார ரீதியாக சற்று நல்ல நிலையில் இருந்த து. மியாமிக்கு வந்த அடால்ஃபோவின் அம்மா, ஆடு, கோழி ஆகிவற்றின் தலைகளை அறுத்து வைத்து தாந்த்ரீக சடங்குகளை செய்யத் தொடங்கினார். இதனால் ஊரார் அவரை சூனியக்காரி என கூறத் தொடங்கினார். அடால்ஃபோவின் அம்மா, அவருக்கு புதிய மதமான சான்டெரியாவை அறிமுகம் செய்தார். அந்த மதத்தை தழுவியவர், மெல்ல காட் ஃபாதராக மாறினார். அவர், போதைமருந்து குழுக்களோடு தொடர்பு வைத்து வசதியாக வாழ்ந்தார். ‘’நம் ம தத்தை நம்பாத ஆட்களை போதைப்பொருளை வைத்து கொல்லலாம். அவர்கள் முட்டாள்தனத்தை வைத்து பணம் சம்பாதிக்கலாம்’’ என்றார். அடால்ஃபோவுக்கு

பெண்களை அடைத்து வைத்து மாரத்தான் வல்லுறவு கொண்ட குற்றவாளி

படம்
  டெக்சாஸின் எல்பாசோ எல்லை அருகே உள்ள இடம்தான், சியூடாட் ஜூவாரெஸ். மெக்சிகோவில் உள்ள இந்தப் பகுதியில்தான் அதிகளவு பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இங்கு,   கொலை, வல்லுறவு காரணமாக நடைபெறும் குற்றங்கள் அதிகம். 1990ஆம்ஆண்டில், தொடர் கொலைகாரர்களின் விளையாட்டு மைதானம் என மெக்சிகோவின்   ஜூவாரெஸ் அழைக்கப்பட்டது. இங்கு, போதைப்பொருட்களின் புழக்கம் அதிகம். மேலும் இது தொடர்பாக இங்கு நடைபெறும் வன்முறைக் குற்றங்களின்   எண்ணிக்கையும்   அதிகம். 2003ஆம் ஆண்டு எல்பாசோ டைம்ஸ் என்ற பத்திரிகை, இங்கு ஆண்டுக்கு 340 கொலைகள் நடைபெறுவதாக கூறியது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, கொலையாகும் நபர்களின்   எண்ணிக்கை   370 என எண்ணிக்கையை உயர்த்திக் கூறியது. தொடர் கொலைகாரர்களின் நிலம், மைதானம் என கூறினாலும் இங்கு நடைபெறும் கொலைகளுக்கு எந்த கொலைகார ர்களும் பொறுப்பே ஏற்கவில்லை. காவல்துறையினர் சந்தேகப்படும் ஆட்களையெல்லாம் பிடித்து சிறையில் வைத்திருந்தனர். ஆனாலும் ஜூவாரெஸில் உள்ள பெண்கள் தெருக்களில் இறங்கே நடுங்கும் நிலைதான் அங்கிருந்தது. குற்றங்கள் குறையவே இல்லை. தொண்ணூறுகளில் கொல்லப்பட்டவர்களில் முக்கியமான

மாடர்ன் பிரெட்டின் கதை! - இந்தியா, சிங்கப்பூர், மெக்சிகோ என மூன்று நாடுகளை சுற்றி வந்த பிரெட்!

படம்
  இந்திய பிரெட்டின் கதை மாடர்ன் பிரெட்டைப் பற்றி தெரியாதவர்கள் கூட அதனை ஒருமுறையாவது சாப்பிட்டிருப்பார்கள். அந்தளவு ஏராளமான வெரைட்டிகளில் பிரெட்டையும், பன்களையும் விற்றுவருகிற தனியார் நிறுவனம் அது. 1965ஆம் ஆண்டு மத்திய அரசால் சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. பின்னாளில் இங்கிலாந்தைச் சேர்ந்த யூனிலீவர் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. குறைந்த விலைக்கு விற்கப்பட்ட மத்திய அரசின் நிறுவனம் என்ற சர்ச்சை இன்றுவரை தீரவில்லை. மத்திய அரசு தொடங்கி நடத்திய உணவு நிறுவனம், லாபகரமாக இயங்கியது பலருக்கும் ஆச்சரியம்தான். இதனை 2000ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக முன்னணி தலைமையிலான அரசு சுருக்கமாக பாஜக அரசு முதலீடுகளைக் குறைத்துக்கொண்டு தனியார் நிறுவனமான ஹெச்யூஎல்லுக்கு விற்றது. இந்த நிறுவனம், மாடர்ன் பிரெட்டை விரிவாக்கி ஏராளமான புதிய  வெரைட்டிகளை கொண்டு வந்தது. பிறகு, 2016இல் சிங்கப்பூரைச் சேர்ந்த ஈக்விட்டி நிறுவனமான எவர்ஸ்டோன் குளோபலுக்கு விற்றது.  தற்போது இந்த நிறுவனம் மெக்சிகோவைச் சேர்ந்த பிரெட் தயாரிப்பு நிறுவனமான குருப்போ பிம்போவுக்கு மாடர்ன் நிறுவனத்தை விற்றுவிட்டது. என்ன விலை என்பது தெரியவில்லை.  குருப்

குற்றத்தை துணிந்துசெய்! - டூ கன்ஸ் சொல்லும் பாடம் இது!

படம்
சினிமா விமர்சனம் மார்க் வால்பெர்க் ஸ்பெஷல்! டூ கன்ஸ்!( 2013) இயக்கம் பால்டாஸ்கார் கோர்முகார் திரைக்கதை - பிளாக் மாஸ்டர்ஸ் இசை கிளிண்டன் சார்டர் ஒளிப்பதிவு - ஆலிவர் வுட் ராபர் பாபி பீன்ஸ், டிஇஏ துறை அதிகாரி. அவர் ஸ்டிக்மன் என்பவருடன் சேர்ந்து கொள்ளை, வழிப்பறி செய்து வருகிறார். இவர் போலீஸ் என்பது ஸ்டிக்மனுக்கு தெரியாது. பாபியின் நோக்கம், மெக்சிகோவைச் சேர்ந்த பாபி கிரிகோவை போதைப்பொருள் சகிதமாக போலீசில் சிக்க வைக்கவேண்டும் என்பதுதான் பிளான். அதற்கான முயற்சி சொதப்புகிறது. இதனால், வங்கியிலிருந்த பணத்தை திருடி அந்தப்பழியை கிரிகோ மீது போடுகிறார்கள். அப்போது ஸ்டிக்மனுக்கு பாபி போலீஸ் என்பது தெரிய வருகிறது. உடனே அவரைக் காயப்படுத்திவிட்டு பணத்தை திருடிச்செல்கிறார். அப்போதுதான் ஒரு ட்விஸ்ட். ஸ்டிக்மனும் சீல் படை அதிகாரி என்பது பாபிக்கு தெரியவருகிறது. அவருடைய மேலதிகாரி சொல்படி பணத்தை வங்கியில் கொள்ளையடித்து சில முயற்சிகளுக்கு பயன்படுத்த நினைக்கிறார்கள். இதனால் கிரிகோ, சிஐஏ ஆகியோரினால் துரத்தப்படுகிறார்கள். பாபி, ஸ்டிக்மனை மன்னித்தாரா, இருவரும் ஒன்றாகி எதி

போதைப்பொருட்களுக்கு தடை நீக்கமா?

படம்
மெக்சிகோவில் அதிபராகியுள்ள இடதுசாரி தலைவர் லோபஸ், விரைவில் போதைப்பொருட்களுக்கான தடையை நீக்கவுள்ளார். கஞ்சாவிற்கான தடையை நீக்கியதற்கும் இதற்குமான வேறுபாட்டை லோபஸ் புரிந்துகொள்ளவில்லை என பலரும் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர். மெக்சிகோவின் குவாரெரோ பகுதியில் ஹெராயின் கள்ளத்தனமாக ஏராளமாக உற்பத்தியாகி கண்டம் விட்டு கண்டம் ஏற்றுமதியாகிறது. திருட்டுத்தனமாகத்தான். அரசுக்கு, போதைப்பொருட்களை விற்கும் கார்டெல் சண்டைகளைத் தடுப்பதே பெரும் வேலையாக உள்ளது. எனவேதான் இந்த முடிவு. மெக்சிகோவில் போதைப்பொருட்கள் உற்பத்தி நடந்தாலும், இதற்கான வாடிக்கையாளர்கள் அமெரிக்கர்களே. ஆனால் இத்தொழில் காரணமாக ஏற்படும் வன்முறை, மெக்சிகோ கார ர்களின் உயிரைப் பறிப்பதோடு நாட்டிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசின் முடிவைத் தொடர்ந்து ஹெராயின், பெனடாயில் ஆகிய பொருட்களை அதிகம் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். லோபஸ், போலீஸ் மீது நிறைய புகார்கள் வருவதால் அவர்களிடம் போதைப்பொருட்கள் சார்ந்த விசாரணையை தருவதில்லை என முடிவெடுத்துள்ளார். இதுதொடர்பான விசாரணையை தேசிய கார்டு படையை இதற்கென உருவாக்கியுள்ளார். இனி

மெக்சிகோவில் #மீடு பூதம்! - ஊடகத்துறை பலி

படம்
குளோபல் வாய்ஸ் அமெரிக்காவின் திரைத்துறை தொடங்கி மீடு புரட்சி, இப்போது மெக்சிகோவில் மையமிட்டுள்ளது. அதுவும் ஊடகத்துறையில். அங்குள்ள பத்திரிகையாளர் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் லிஸ்ட்டை வெளியிட்டு அதிர்ச்சியூட்டி உள்ளார். இதன் விளைவு என்னாகும்? பாதிக்கப்பட்ட பெண், குற்றம் இழைத்தவர்களை உடனடியாக நிறுவனங்கள் வேலையை விட்டு விலக்கும். அதேதான் நிகழ்ந்துள்ளது. மார்ச் 23 தொடங்கிய இந்த ட்விட்டர் பூதம், மெக்சிகோவின் ஊடகத்துறையினரை கலங்கடித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் எடுத்த நேர்காணலில் 43 சதவீதம் பேர் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது தெரிய வந்துள்ளது. ரீபார்மா, சிலாங்கோ ஆகிய ஊடகங்கள், குற்றம்சாட்டப்பட்ட ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளன. 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த மீடு விவகாரம், 2017 ஆம் ஆண்டில்தான் உலகின் கவனத்தை ஈர்த்தது. மிராமேக்ஸ் நிறுவனர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான புகார்களை நடிகைகள் அளித்தனர். ஆறில் ஒரு மெக்சிகோ பெண்ணுக்கு வன்முறை நிகழ்ச்சி நடைபெறுவதாக ஐ.நா அமைப்பு தகவல் தெரிவிக்கிறது.  41.3 சதவீத பெண்கள் பால