மெக்சிகோவில் #மீடு பூதம்! - ஊடகத்துறை பலி


குளோபல் வாய்ஸ்


அமெரிக்காவின் திரைத்துறை தொடங்கி மீடு புரட்சி, இப்போது மெக்சிகோவில் மையமிட்டுள்ளது. அதுவும் ஊடகத்துறையில். அங்குள்ள பத்திரிகையாளர் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் லிஸ்ட்டை வெளியிட்டு அதிர்ச்சியூட்டி உள்ளார்.

இதன் விளைவு என்னாகும்? பாதிக்கப்பட்ட பெண், குற்றம் இழைத்தவர்களை உடனடியாக நிறுவனங்கள் வேலையை விட்டு விலக்கும். அதேதான் நிகழ்ந்துள்ளது.


மார்ச் 23 தொடங்கிய இந்த ட்விட்டர் பூதம், மெக்சிகோவின் ஊடகத்துறையினரை கலங்கடித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் எடுத்த நேர்காணலில் 43 சதவீதம் பேர் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

ரீபார்மா, சிலாங்கோ ஆகிய ஊடகங்கள், குற்றம்சாட்டப்பட்ட ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளன.


2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த மீடு விவகாரம், 2017 ஆம் ஆண்டில்தான் உலகின் கவனத்தை ஈர்த்தது. மிராமேக்ஸ் நிறுவனர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான புகார்களை நடிகைகள் அளித்தனர்.

ஆறில் ஒரு மெக்சிகோ பெண்ணுக்கு வன்முறை நிகழ்ச்சி நடைபெறுவதாக ஐ.நா அமைப்பு தகவல் தெரிவிக்கிறது.  41.3 சதவீத பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்கு உட்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தினசரி ஒன்பது பெண்கள் வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காகி இறப்பதும் வேதனைத் தகவல்.


நன்றி: குளோபல் வாய்ஸ்