வந்தே மாதரமா? வந்தே ஏமாத்துறோம்! - தேர்தல் 2019
தேர்தல் நாளில் என்ன செய்யலாம்?
தேர்தலில் நேராக வாக்காளர் அட்டையை எடுத்துக்கொண்டு விடுவிடுவென பள்ளிக்குச் சென்று ஓட்டு போட்டுவிட்டு வந்து டிவி பார்ப்பது புத்திசாலித்தனமல்ல. தேர்தல் தொடர்பான சில சிக்கல்களை சந்தித்தால் அதனை எப்படி சமாளித்து தீர்வு காண்பது என்பதையும் யோசிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.
49(P)
சர்க்கார் விஜய் நமக்கு இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தி ஒருவிரல் புரட்சி செய்தார் இல்லையா? அதேதான். நீங்கள் துபாய், அமெரிக்கா ஏன் பக்கத்து ஊரிலிருந்து கூட உங்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொண்ட பள்ளிக்கு வருகிறீர்கள். உள்ளே நுழைந்து சோதிக்கும்போதுதான் தெரிகிறது. உங்கள் ஓட்டை வேறு யாரோ போட்டுவிட்டு ஓடிவிட்டனர். என்ன செய்வீர்கள்.
நீங்கள்தான் குறிப்பிட்ட நபர் என புகைப்படம், ச்சீ அதைப் பார்த்தால் நம் குடும்பத்தினரே நம்ப மாட்டார்கள். எனவே பிற அடையாள ஆவணங்களை கொட்டாவி விடும் ஆபீசரை ஆறுதல் படுத்தி காட்டினால் 49 பி சட்டப்படி காகிதம் ஒன்றைக் கொடுப்பார்கள். அதில் உங்கள் ஓட்டைப் பதிவு செய்து இந்தியக் குடியரசின் மகுடம் கீழே விழாமல் காப்பாற்றிவிட்டு நெட்ஃபிளிக்ஸில் இணையலாம். 1961 ஆம் ஆண்டு உருவான இந்த சட்டத்தின்படி பதியும் வாக்குகளை வேட்பாளர்களுக்கு இடையே வித்தியாசம் குறைந்தால் எண்ணுவதற்காக எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உண்டு.
49(O)
சொக்கத்தங்கம் விஜயகாந்தாக வாங்குவதை எல்லாம் வாங்கிவிட்டு ஊருக்கே நல்ல பிள்ளையாக வாக்குச்சாவடிக்கு செல்கிறீர்கள். ஆனால் உள்ளே போகப்போக பிள்ளையார் கோவிலுக்கு பணம் கொடுத்தது, கருப்பணசாமிக்கு கும்பாபிஷேகத்திற்கு கமிஷன் குறைவாக கொடுத்தது ஆகிய பாரபட்சங்கள் உங்கள் மனசை நெருடுகின்றன.
உடனே அடையாள அட்டையை சோதிக்கச் சொல்லி கையில் மை கூட வைத்து விடுகிறார்கள். ஆனால் தேர்தலில் நிற்கும் இந்த சோதாப் பயல்களுக்கு என் ஓட்டு கிடையாது என்றால் ஆபீசர் என்ன செய்வார்?
பொதுவாக உள்ளூர் என்றால் பூத் ஏஜண்டுகளை கேன்வாஸ் செய்யச்சொல்லி அண்ணாக்கயிறு ஊக்கை எடுத்து காது குடைவார். ஆனால் 1961 ஆம் ஆண்டு சட்டப்படி 17 ஏ லெட்ஜரை எடுத்து உங்கள் பெயரை எழுதிக்கொண்டு கையெழுத்திட்டுவிட்டு வீட்டுக்கு ஜோராக போயிச்சேருங்க வல்லரசு ஐயா என்று கூறுவதே விதிமுறை.
49(M)
இப்படி சில வாக்காளர்கள் உண்டு. அதாவது, வாக்காளர் சோதனை, பரிசோதனை எல்லாம் முடிந்த பின், நான் இவருக்குத்தான் வாக்களிக்கப் போகிறேன் என மைக் டெஸ்ட்டிங் ராஜாவாக கதறி அமர்க்களப்படுத்துவார்கள். இவர்களை என்ன செய்வது?
உடனே 17 ஏ லெட்ஜரை எடுத்து 1961 ஆம் ஆண்டு சட்டத்தை மீறிய மோசமான குடிமகனின் பெயரை எழுதி அவரின் கையொப்பத்தை வாங்கினால் சோலி முடிந்தது. அவ்வளவுதான் இந்த சட்டத்தில் செய்யமுடியும்.
நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா
படம்: பின்டிரெஸ்ட்