ஓபன் சோர்ஸ் ஆப்கள்!








ஓபன் சோர்ஸ் ஆப்ஸ்!


விண்டோஸ், ஆப்பிள், கூகுள் ஆப்ஸ்களுக்கு நிகராக ஓப்பன் ஆபீசிலும் நிறைய ஆப்ஸ்கள் பயனர்களுக்கு ஒளி, ஒலி, புகைப்படம், குறுஞ்செய்தி ஆகிய பயன்பாடுகளுக்கு உதவுகின்றன.

MPDroid

An Android controller for the Music Player Daemon (MPD)
இசையைப் பெற்று ஸ்பீக்கர்கள் வழியாக கொண்டாட சூப்பர் வழி. எம்பிட்ராய்டு ஆப்பை டவுன்லோடு செய்வதுதான். இணையத்திலிருக்கும் ரேடியோக்களை கேட்பது முதல் உங்கள் மெமரிகார்டிலுள்ள பாடல்களை ரசிக்க வைப்பது வரையிலான பயன்கள் இதில் அனேகம்.




RadioDroid

An Android internet radio tuner that I use standalone and with Chromecast
ஸ்பெஷலாக ரேடியோக்களை கேட்டு ரசிப்பவர்களுக்கானது ஆப்பை இன்ஸ்டால் செய்து இயக்கி ஹெட்போனை செருகினால் போதும். ஸ்பானிஷ் ரேடியோவைக் கூட தங்கத்தமிழ் மண்ணில் கேட்டு ரவுசு பண்ணலாம். 

Signal

A secure messaging client for Android, iOS, and desktop
அப்படியே வாட்ஸ் அப்பின் நகல் போல. ஆனால் பாதுகாப்பும், செய்திக்கான பாதுகாப்பும் மீட்டருக்கு மேல் உள்ளது. அதனால் நம்பி இன்ஸ்டால் பண்ணுங்க, நல்லா வாழுங்க. 

ConnectBot

Android SSH client

உங்கள் கணினியிலிருந்து தூரம் தள்ளி இ ருக்கிறீர்கள். கணினியில் வேலை பார்க்க வேண்டும் என்றால் கனெக்ட் பாட் உதவும். 

Termux


Android terminal emulator with many familiar utilities

இந்த ஆப் முழுக்க டெக் ஆட்களுக்கானது. AWK  கோடிங்கை போனின் இயக்கிப் பார்க்க நீங்கள் பயன்படுத்தலாம். குறிப்பாக கணியம் சீனிவாசன் அண்ட் கோ ஆட்களுக்கு உதவலாம். 
செய்தி: படம் : ஓபன்சோர்ஸ்.ஆர்க்

பிரபலமான இடுகைகள்