தொழில்துறை வளர்ச்சியா? வீழ்ச்சியா?








வேலைவாய்ப்புகள் சரிவு என்று கூறும்போது வளர்ச்சி என்று ஆளும் கட்சியும், சரிவு என்று எதிர்கட்சிகளும் கூறி வாதிடுகின்றனர். திடீரென தேசிய புள்ளியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பதவி விலகுகின்றனர். இதெல்லாம் நாட்டின் பொருளாதாரம் சரியில்லை என்பதை சொல்லாமல் சொல்லுகின்றன.

சிறு நிறுவனங்களாக இருந்தவை வளராமல் அப்படியே சிறுநிறுவனங்களாகவே இருக்கின்றன. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு முதலீடு, நிலம், தொழிலாளர்கள், அடிப்படைக் கட்டுமானம் ஆகியவை தேவை.


பேராசிரியர் அமித் கண்டேல்வால், ஜெரோம் ஏ சாசன் ஆகியோர் இதுபற்றி, இந்தியாவில் ஒருமுறை வேலைக்கு தேர்வானவர்களை அவ்வளவு எளிதில் நீக்க முடியாது. காரணம், இந்திய அரசின் கடுமையான விதிமுறைகள்தான் என்று சுட்டிக்காட்டுகின்றனர். இவை பல்லாண்டுகளாக மாறுதல் பெறாமலே இருக்கின்றன என்றும் தலையில் குட்டுகின்றனர்.

அரசு நிர்வகிக்கும் வங்கிகளிடமிருந்து சிறுநிறுவனங்கள் கடன் பெற்றுவிடுவது மிக கடினம். பெரும்பான்மை வங்கிகள், சிறிய கம்பெனிகள் கடனைத்திரும்பி செலுத்தாது என்பதை ஊர்ஜிதம் செய்யாமலேயே நடவடிக்கையில் இறங்கி விடுகின்றன என்கிறார் அமித் கண்டேல்வால்.

நீங்களே தொழில் தொடங்குகிறீர்கள். கனவுடன் கடனுக்காக வங்கிக் கதவைத் தட்டுகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு கடன் கொடுக்க தயங்குகிறார்கள். இதனால் நண்பர்களிடமும், உறவுகளிடமும் கடன் பெற்று நிறுவனத்தை வளர்க்கிறீர்கள். ஆனால் குறிப்பிட்ட வளர்ச்சிக்குப் பிறகு நிறுவனம் அப்படியே நின்றுவிடும். ஏன்?

வங்கிக்கடன் அல்லது கடன்வாங்கி பணத்தை உழைத்தால் மட்டுமே பெரிய நிறுவனமாக வளர்ந்து வரி கட்டுவது சாத்தியமாகும். நிலவிதிகள், தொழிற்சாலையை நகரைவிட்டு தள்ளி கட்டுவதை நிபந்தனையாக விதிக்கிறது. விவசாய நிலத்தை விவசாய நிலம் அல்ல என்று மாற்றுவது சாதாரண விஷயமல்ல. நில மாஃபியா, இயற்கை சூழலியலாளர்கள். கிராம இயக்கங்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு இக்கட்டுகளைத் தாங்கி தொழில்  தொடங்கி வெல்வது சாதாரணமல்ல.

மேற்கு வங்கத்தில் சிங்கூரில் டாடா நிறுவனம் படாதபாடு பட்டது நினைவிருக்கிறதா? அதேதான்.

நன்றி: ஸ்க்ரோல்.இன்.