சைக்கோ கொலைகாரர்கள் 5
சைக்கோ கொலைகாரர்கள் 5
ஜெய்சங்கர்
பதினைந்தே பதினைந்து கொலைகள், 30 கற்பழிப்புகள் என கிரிக்கெட் ரன்போல முன்னேறியவரை போலீஸ் பிடித்து சிறையில் அடைத்தது. ஆனாலும் அங்கிருந்தும் தப்பித்து பெண்களை வெட்டுக்கத்தியால் போட்டுத்தள்ளி புளகாங்கிதம் அடைந்தார். நீதிதேவதை மீண்டும் ஜெய்சங்கரை ஓரக்கண்ணால் பார்த்தபோது, அவருக்கு பத்தாண்டு சிறைதண்டனை கிடைத்தது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஜெய்சங்கர், கௌபாய் போல அங்கிட்டும் இங்கிட்டுமாக ஆடிய கொலை கொலையா முந்திரிக்கா ஆட்டத்தில் பலர் வாழ்வு பறிபோனது. இவரின் உச்ச களப்பணி காலகட்டம் 2006-2009.
தர்பாரா சிங்
2004 ஆம் ஆண்டு சின்சியராக வேலை பார்த்து ஏப்ரல் டூ செப்டம்பர் மாதம் வரை பதினைந்து சிறுமிகளை போட்டுத் தள்ளினார் சிங். இவரின் கொலைசெய்யும் பாணி, குரல்வளையை மாங்காய் துண்டுகளாக்குவது. 2004 ஆம் ஆண்டு கைதானவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரின் பட்டப்பெயர் பேபி கில்லர்.
அமர்தீப் சதா
எட்டு வயதிலேயே க்ரைமில் மாட்டிய ஆள் இவர். பீகாரின் பெகுசராய் பகுதியைச் சேர்ந்த ஆசாமி. தனது குடும்பத்தைச் சேர்ந்த தங்கை(எட்டு மாதம்), சகோதரனை(ஆறுமாதம்) பக்கத்து வீட்டு சிறுமி குஷ்பூ போட்டுத்தள்ளிய அசுரன். இரண்டு கொலைகளை குடும்பமே அங்கீகரித்த கொடுமை வேறு பின்னர்தான் உலகம் அறிந்தது. போலீஸ் கேட்டதற்கு அது குடும்ப பிரச்னை என இறையாண்மை கெட்டதுபோல குடும்பமே சண்டைக்கு வந்தது. ஆனால் பக்கத்து வீட்டு சிறுமியைக் கொன்றால் சும்மா விடுவார்களா? ஏண்டா பாவி கொன்றாய் என போலீஸ் கேட்டதற்கு, அமர்தீப் எளிமையாக அகலமாக புன்னகைத்திருக்கிறார்.
அசுரகுலத்தின் இந்தியா அத்தியாயம் நிறைவு பெறுகிறது. நிம்மதியாக படுத்து தூங்குங்கள்.
படங்கள் உதவி: பின்டிரெஸ்ட்