மைக்ரோசாஃப்டின் இன்டெலி மவுஸ்- 20 ஆண்டு கொண்டாட்டம்
முதலில் நாம் எப்படி ஒரு மவுஸைப் பயன்படுத்தி வந்தோம் தெரியும் அல்லவா? மவுசை அசைத்து எம்எஸ் பெயிண்டில் ஒரு கோடு போட, மவுஸ் பேடு தேவை. அதில் வாரத்திற்கும் ஒருமுறையேனும் துடைத்து வைத்திருக்கும் லேட்டரல் திங்கிங் மனம் தேவை.
இல்லையென்றால் மவுசும் நகராது நம் வேலையும் இம்மியளவுகூட முன்னே நகராது. அப்போதுதான் அறிமுகமானது மைக்ரோசாஃப்ட் ஆப்டிகல் மவுஸ். கீழே எல்இடி விளக்குடன் குண்டுமணி இல்லாத ஒரே மவுஸ். இன்றுவரை சந்தையை மாற்றிய கண்டுபிடிப்பு அதுவே.ஆனால் அப்போது அதன் விலை 75 டாலர்கள் - 100 டாலர்கள் வரை கேட்டனர்.
அமெரிக்காவில் லாஸ்வேகாஸில் நடைபெற்ற காம்டெக்ஸ் என்ற எலக்ட்ரானிக் ஷோவில்(சிஇஎஸ் போலத்தான்) அறிமுகமானது இந்த மவுஸ். இதற்கு பெயர் இன்டெலி மவுஸ்.
இந்த மவுசின் தொழில்நுட்பத்தை மைக்ரோசாஃப்ட் ஸெராக்ஸ் கணினி நிறுவனத்தோடு இணைந்து சந்தைப்படுத்தியது. ஆண்டு 1981. அப்போது அதன் விலை 16, 500. இன்று அதன் விலையை ஒப்பிட்டால், 45 ஆயிரம் டாலர்கள் வரும். ஆனால் இவையெல்லாம் வணிக கணினிகள். இதனைப் பயன்படுத்துவதற்கான மவுஸ் பேடுகள் கூட ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டன.
அப்போது சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் கூட லேசர் முறையில் இந்த மவுஸை தயாரித்தது. இதே தொழில்நுட்பம் சார்ந்து என்று புரிந்துகொள்ளுங்கள்.
பின் ஹெச்பி கணினி இதனை பலரும் வாங்கும் விதமான விலையில் விற்கத் தொடங்கியது. மைக்ரோசாஃப்ட் மவுசில் பொதுவான பயன்பாட்டுக்கான பல்வேறு பட்டன்களை முதலில் இணைத்திருந்தது. பின்னர் இது, ஆப்பிள், லாகிடெக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் மாற்றி அமைத்து தங்களுக்கேற்ப மாற்றிக்கொண்டனர்.
இன்றும் கூட கணினி விளையாட்டுகளுக்கான தனி மவுஸ், பல்வேறு பட்டன்களுடன் கிடைக்கிறது. மைக்ரோசாஃப்டின் மவுஸ் பல்வேறு மாற்றங்களை பின்னாளில் ஏற்படுத்தியது.
நன்றி: கிஸ்மோடோ