புற்றுநோய் தடுப்பதில் இந்தியாவின் இடம் என்ன?


The 9 Most Effective Natural Cancer Treatments.


கொல்லும் புற்றுநோய்!

2018 ஆம் ஆண்டு மட்டும் உலகெங்கும் 9.6 மில்லியன் பேர் புற்றுநோயால் மரணித்துள்ளனர். உலகில் இரண்டாவது பெரிய நோயாக மாறியுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் ஏற்படும் இழப்பு 1 ட்ரில்லியன் டாலர்கள். 2019 ஆம் ஆண்டு 280 நாடுகள் இதனைத் தடுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன.

புற்றுநோய் ஏற்படும் நாடுகளில் டாப் 5

ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து.

குறைவாக புற்றுநோய் பாதிப்பு கொண்ட நாடுகள்

எகிப்து, ரோமானியா, சவுதி அரேபியா, இந்தோனேஷியா, கென்யா


இந்தியாவின் இடம் 19. புற்றுநோயைத் தடுப்பதில் 64 சதவீத மதிப்பெண்ணை பெற்றுள்ளது. இதில் 45 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள நாடுகள் கொள்கை, செயல்பாடு ஆகியவற்றில் மேம்பாடு தேவை என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு மோசமானதாக இருந்தாலும் புற்றுநோயைத் தடுப்பதில் 81.3 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது. புற்றுநோய் ஆராய்ச்சி, புகையிலையைத் தடுக்கும் கொள்கை ஆகியவற்றில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதன்விளைவாக புகையிலைத் தடுப்பில் மொத்தமுள்ள 28 நாடுகளில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.


ஆனால் புற்றுநோயை தேசிய அளவில் தடுப்பதில் இந்தியா 23 ஆவது இடம்பிடித்துள்ளது வரவேற்கத்தக்கதல்ல.

- தி டைம்ஸ் ஆப் இந்தியா




பிரபலமான இடுகைகள்