அசுரகுலம் - சிறுமி எங்கே?



Related image


 காதலி ... காதலே அழி!


2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம். இங்கிலாந்தைச் சேர்ந்த  டேனியல்லா ஜோன்ஸ், அன்று மாலை வீடு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. நேரம் ஆக ஆக அவரின் அம்மா லிண்டாவுக்க பதற்றம் அதிகரித்தது.தன் கணவர் ஆண்டனியிடம் புலம்பியவர்,  மகளின் தோழிகளுக்கு போன் போட்டு பேசியவர், ஒருகட்டத்தில் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தார்.

பள்ளி முடிந்து  கிளம்பிய டேனியல்லா பள்ளி அருகே இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நீல நிற வேன் அருகே நின்று ஒருவரிடம் பேசியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். யார் அவர் என்று பார்த்தால், அவர் டேனியல்லாவின் மாமா, ஸ்டூவர்ட் கேம்ப்பெல்.

போலீஸ் அங்கே இங்கே தேடியும் நானோ அளவுகூட ஆதாரம் கிடைக்கவில்லை. ஸ்டூவர்ட்டின் ஹிஸ்டரியை அப்போது கூட போலீஸ் தோண்டவில்லை. நமது போலீஸ் போல காதலா, கள்ளக்காதலா என டாஸ் சுண்டிப்போட்டு பார்ப்பதற்குள் சித்திரவதைக்குள்ளான டேனியல்லா பரலோகம் போயிருந்தார். அதை உறுதிப்படுத்தக்கூட போலீசுக்கு பெண்ணின் உடல் கிடைக்கவில்லை.

அங்கும் இங்கும் தேடிப்பார்த்த போலீஸ் ஒருகட்டத்தில் ஸ்டூவர்ட்டின் மீது சந்தேகம் வந்து அவரின் வீட்டை சோதனையிட்டபோதுதான், ரத்தக்கறை படிந்த காலுறைகள் கிடைத்தன. ரத்தம் மற்றும்  டிஎன்ஏ டெஸ்ட் டேனியல்லா அங்கு வந்ததை உறுதி செய்தது. ஆனால் சிறுமியைக் காணோம். வேறு ஸ்டூவர்ட்டின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்த அப்படியே மாமியார் வீட்டுக்கு பார்சல் செய்தனர்.

முதலில் குணமாகத்தான் கேட்டனர். மனுசன் சொல்லவேயில்லை. அப்புறம் என்ன மூன்றாவது ரக சித்திரவதை செய்தும் பதில் கூறவில்லை. அடித்து உரித்துப் பார்த்தும் உபயோகமாக எதுவும் கிடைக்கவில்லை. வேறுவழியின்றி பெண்ணின் உடல் கிடைத்தால் போதுமே என ஆயிரத்து ஐநூறு இடங்களில் போலீஸ் சோதித்ததில் புல், பூண்டு, மண்புழு கிடைத்ததே தவிர நயாபைசா பிரயோஜனமில்லை.

ஸ்டூவர்ட் கேம்ப்பெல்: 

1958 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 இல் பிறந்த ஸ்டூவர்டுக்கு பெண்கள் என்றாலே தனி மயக்கம். பிரியமாக பேசுவார் என்று நினைக்காதீர்கள். பெண்களை செக்சுக்கு பயன்படுத்தி தாக்குவது, சித்திரவதை செய்வது என இஷ்டத்துக்கு குழந்தை பொம்மையை போட்டு விளையாடுவது போல செய்வார். இதனை யாருக்கும் தெரியாமல் செய்தார்.


1989 ஆம் ஆண்டு ஒரு சிறுமியை கைமா பண்ண முயன்று மாட்டினார். ஆனால் பர்சனாலிட்டிக்கு பங்கமின்றி சிறிய தண்டனையோடு தப்பிவிட்டார். அடுத்து தெருவிலிருந்து ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முயன்றவர், ஒரு பெண்ணையும் சாத்து சாத்து என சாத்தியிருக்கிறார். ஆனால் இதெல்லாம் செக்ஸ் ரிஜிஸ்டரி வரும்முன்னே வந்த விஷயம் என்பதால், போலீசில் சில மாத்துகளோடு தப்பி ஊருக்குள் யோக்கியன் வேஷம் போட்டுத் திரிந்தார்.

டேனியல்லா தன்னை மாமா என்று சொல்லும்போதெல்லாம் காம வெறியில் தவித்தவர், சரியான சமயம் கிடைத்தபோது அதை பயன்படுத்திக்கொண்டார்.

தன்மீதான கொலைக்குற்றத்தை தடுக்க போலி அலிபி வேறு உருவாக்கினார். டேனியல்லாவின் போனிலிருந்து ரன்னிங் அவே என்று செய்தியை உருவாக்கி தனக்கு அனுப்பிக்கொண்டார். டேனியல்லா எழுதிய பிற குறுஞ்செய்திகளை சோதித்தபோது, இந்த செய்தி மட்டும் அனைத்தும் கேபிடல் எழுத்துக்களில் இருந்தன. அப்புறம் என்ன? ஸ்டூவர்ட்டின் கைவண்ணம் இது என போலீசுக்கு தெரிய தலைவர் இப்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் களி தின்று வருகிறார்.

ஆனால் போலீஸ் கடமையில் தவறுமா? 2017 ஆம் ஆண்டுவரை டேனியல்லாவின் உடலைத் தேடி வருகிறதாம்.


ஆக்கம்: பொன்னையன் சேகர்

நன்றி: க்ரைம் அண்ட் இன்வெஸ்டிகேஷன், விக்கிப்பீடியா

படம்: டெய்லி மிரர்