பென் ஃபிராங்க்ளின் எஃபக்ட் தெரியுமா?
உளவியல் கருத்துகள்
பென் பிராங்க்ளின்
ஒருவரிடம் நீங்கள் உதவிகேட்டு அவர் செய்தால், மெல்ல அவருக்கு நீங்கள் பிடித்தமானவராக மாறுவீர்கள் என்பதுதான் தியரி. 1791 ஆம் ஆண்டு பிறந்த தியரி என்பதால் இன்றைக்கு செட் ஆகுமா என்றெல்லாம் தெரியாது.
இதைப்போலவே உள்ள சில தியரிகள்.
பார்னம் எஃபக்ட்
பீச்சில் நடந்துபோகிறீர்கள். அப்போது அங்குள்ள கைரேகை பார்க்கும் அம்மா, உங்களுக்கு கைரேகை பார்க்க அழைக்கிறார். அவர் சொல்வது உங்களது வாழ்வை படம்பிடித்தது போல உள்ளது. அதாவது உங்களை நல்லவர், பிறருக்கு உதவுபவர் என்று கூறுகிறார். அது உண்மையோ இல்லையோ உடனே அந்த பாராட்டை நீங்கள் ஏற்கிறீர்கள் அதுதான் பார்னம் எஃபக்ட்.
மார்த்தா மிட்செல் எஃபக்ட்
ஒருவர் நீங்கள் நொறுங்கிப் போகும் உண்மையைச் சொல்கிறார். ஆனால் அதனைத் தவிர்க்க அவரை பைத்தியம் என பிரசாரம் செய்தால் எப்படியிருக்கும்? அதுதான் இந்த தியரி சொல்லுகிறது.
அமெரிக்க அதிபர் நிக்சனின் அட்டர்னி மனைவி மார்த்தா, வெள்ளை மாளிகையில் நடந்த கூத்துகளைப் பற்றி பத்திரிகைகளிடம் சொன்னார். உடனே அவரை குடிபோதையில் உளறுகிறார் என கேரக்டரை சிதைத்து செய்தியை அமுக்கினர்.
மண்டேலா எஃபக்ட்
தவறான நினைவு. மண்டேலா, காந்தி வழியில் போராடி தென்னாப்பிரிக்காவுக்கு சுதந்திரம் வாங்கிக் தந்தார். அப்புறம் அதன் அதிபராக இருந்து பின் மறைந்தார். ஆனால் சிலர் அவர் சிறை தண்டனை பெற்று அப்படியே மறைந்தார் என்று நினைத்து வருகின்றனர்.
நன்றி: க்வார்ட்ஸ்.