அமைதியைக் குலைத்த இஸ்ரேல் பிரதமரின் வெற்றி!

Netanyahu was feted by Likud party supporters at an election-night party in Tel Aviv

இஸ்ரேலின் நீண்டகால அதிபர்!

வேறுயார்? பாலஸ்தீனத்தை கடுமையாக தாக்கி அப்படியொரு நாடே இல்லை என்று கூறிய பெஞ்சமின் நேடான்யாஹூதான் அவர். ஐந்தாவது முறையாக அதிபராகி சமாதானம் விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

இதுபோல இந்தியாவிலும் மோடி வென்று வர வாய்ப்புள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட பென்னி கன்ட்ஸைத் தோற்கடித்து பெஞ்சமின் நேடான்யாஹூ வென்றுள்ளார். பெஞ்சமின் மற்றும் அவரது சகாக்கள்மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட புகார்கள் இருந்தாலும் அத்தனையிலும் மீண்டு ஊடகங்கள், நாட்டின் நீதித்துறைக்கு எதிராக பேரணி நடத்தி தேர்தலிலும் வென்று காட்டிவிட்டார்.

பெஞ்சமினின் வெற்றி, குறைந்தபட்சம் பாலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இருந்த பிரச்னைகளை தீர்க்கும் என்று நினைத்த நம்பிக்கையைக் கூட அழித்துவிட்டது என்று கருத்து சொல்லியிருக்கிறார் முன்னாள் பிரதமர் ஈஹட் பாரக்கின் பிரதம செயலரான ஜில்லீடு ஷெர்.


நன்றி: டைம் இதழ்