நிலவில் அமெரிக்கா!
pinterest\ann sissom |
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவில் அமெரிக்கா காலடி எடுத்து வைக்க இருக்கிறது. நிலவின் மாதிரியை கெத்தாக எடுத்து வந்தவர்கள், அங்கு 96 வகை கழிவுக்குப்பைகளை போட்டுவிட்டு வந்துவிட்டனர். அடுத்தமுறை நிலவுக்குச் செல்லும் அமெரிக்க வீரர்கள் இக்கழிவுகளை திரும்ப பூமிக்கு கொண்டுவரும் முடிவில் உள்ளனர்.
இதுவரை பனிரெண்டு விண்வெளி வீரர்கள், நிலவுக்கு சென்றுள்ளனர். இதன் விளைவாக 96 கழிவுகளைக் கொண்ட கவர்கள் அங்கு தேங்கிவிட்டன.
நாசா இதுவரை ஆறு திட்டங்களின் மூலம் நிலவின் வெவ்வேறு பகுதிகளை ஆராய்ந்துள்ளது.
கழிவுகளை மட்டும் நாசா அங்கு விட்டுவரவில்லை. திட்டங்களைச் செய்ய கொண்டு சென்ற கேமரா, சில பொருட்கள், விண்வெளி பொருட்கள் ஆகியவை நிலவிலேயே உள்ளன.
நிலவில் தங்கி பணியாற்றும் வீரர்களுக்கு சிறுநீர் கழிக்க, மலம் கழிப்பதற்கான டயாபர் ஆகிய வசதிகளை நாசா செய்து தருகிறது.
2024 ஆம் ஆண்டு நிலவுக்குள் நிலவுக்கு பயணிக்க நாசா தயாராகி வருகிறது. கழிவுகளை இங்கு கொண்டு வந்து என்ன செய்வார்கள் என்று தோன்றுகிறதா? நிலவிலுள்ள சூழலைக் கணிக்க அவை உதவும் என்பது ஆராய்ச்சியாளர்களின் எண்ணம்.
நிலவின் வெப்பநிலை 173 டிகிரி செல்சியஸ் முதல் 156 டிகிரி செல்சியஸ் வரை.
நிலவில் வசிக்கமுடியுமா என்கிற நப்பாசையும் இதில் உள்ளது.
-தி டைம்ஸ் ஆஃப் இந்தியா