டைம் 100 - திறமைக்கு மரியாதை





Image result for time 100 2019 cover



டைம் 100



கல்விக்கரம் - FRED
SWANIKER

ஆப்பிரிக்கர். இன்று அங்கு 60 சதவீத மக்கள்தொகையினர் 25 வயதுக்குள் உள்ள இளைஞர்கள்தான். அங்குள்ள இளைஞர்களுக்கு கல்வி அளித்து அவர்களை தலைவர்களாக்கும் கல்வி முயற்சியை ஃபிரெட் ஸ்வானிகர் தொடங்கியுள்ளார்.


சொல்லாத கதைகள் -
LYNN NOTTAGE

மனிதநேயம் பேசும் கதைகள், நாடகங்களுக்கான உழைப்புதான் லின் நோட்டேஜின் பெயர் சொல்லும் படைப்புகளுக்கான காரணம்.
இவரின் ஸ்வெட் எனும் நாடகத்திற்காக நாடு முழுவதும் அலைந்து அதனை உருவாக்கினார். இதற்கு அங்கீகாரமாக இரண்டாவது முறையாக புலிட்சர் பரிசைப் பெற்றுளார் லின்.

இனவெறி, மதம் ஆகியவற்றைக் கடந்து மனிதநேயம் பேசும் படைப்புகளை உருவாக்க முனையும் லின்னின் உழைப்பு ஆச்சரியமானது. பாராட்டப்பட வேண்டியது.

பெண்களுக்கான குரல்
Aileen Lee

பலரும் கூகுளில் பெண்களுக்கு மதிப்பில்லை, ஊதியம் குறைவு என்று பேசுவதோடு நின்றுவிடுவார்கள். ஆனால் அய்லீன் லீ ஆல் ரெய்ஸ் என்ற தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி பெண்கள் பலருக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறார். ஆண்களின் நெருக்கடிகளால் தவித்த பெண்களுக்கு தன்னம்பிக்கை தந்துள்ளார்.


TARA WESTOVER

எஜூகேட்டட் என்ற நூலைப் படித்து பிரமித்துப் போனேன். மிக  நுணுக்கமாக அமெரிக்காவின் கலாசார அடுக்குகளை பேசியுள்ளார் எழுத்தாளர் தாரா. அவரின் அடுத்த நூலுக்காக காத்திருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் என்னை நம்பவா போகிறீர்கள். இப்படிச்சொன்னவர் பில்கேட்ஸ்.


அனைவரும் சாப்பிடலாம்
Massimo Bottura

தலைப்புதான் கான்செஃப்ட். அகதிகள், வீடிழந்தவர்கள் என அனைவருக்குமான உணவை கம்யூனிட்டி கிச்சன் முறையில் உருவாக்கி வருகிறார் போட்டுரா. ஆஸ்டெரியா ஃபிரான்செஸ்கானா என்பது இவரின் பிரபலமான புகழ்பெற்ற உணவகம்.


இலக்கியத்தின் மனசாட்சி MARLON JAMES

இலக்கியம், இனம், மதம், இனவெறி என அனைத்தையும் எந்த இடத்திலும் பேசி மக்களை மயக்கும் எழுத்தாளர். மேன் புக்கர் பரிசு வென்ற இலக்கியவாதி.


நீதிபீடத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரல் -  ARUNDHATI KATJU AND
MENAKA GURUSWAMY

சாதாரண மக்களுக்கே நீதி கிடைக்காதபோது எல்ஜிபிடியினருக்கு என்ன கிடைக்கும். 377 என்ற குற்றச்சட்டத்தை மாற்றி, தீர்ப்புகொடுத்து இந்தியாவின் முகத்தை மாற்றியவர்கள் இந்த நீதிபதிகள்.


கருந்துளையை பார்க்க வைத்தவர் - Shep
Doeleman


பூமியிலுள்ள அனைத்து தொலைநோக்கிகளையும் இணைத்து கருந்துளையை படம் எடுத்து இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்து அதனை நம் கண்களுக்கு விருந்தாக்கிய விஞ்ஞானி. இவர் மட்டுமல்ல இவருடன் பணியாற்றி 200 ஆராய்ச்சியாளர்களும் இந்த வெற்றிக்கு பொறுப்பானவர்கள்.

நன்றி: டைம்











பிரபலமான இடுகைகள்