ஆப்பிரிக்க மக்களைக் காக்கும் ஸ்கேனர்!





Image result for in africa phone become ultrasound scanner




ஸ்மார்ட் ஸ்கேனராக்கும் ஆப்பிரிக்க மக்கள்!


டாக்டர் வில்லியம், அச்சிறுவனை சோதித்தார். எதன் மூலம், தன்னுடைய ஐபோன் ஸ்கேனர் மூலம்தான். அதில் பலவீனமாக இருந்த கார்டன் என்ற சிறுவனின் நுரையீரல் முழுக்க சளி கட்டியிருந்தது.

சக நண்பர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்க, கார்டன் உடல் சோர்ந்து கிடக்க அந்த சளிதான் காரணம். உகாண்டாவைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி டாக்டர் வில்லியம் செரினாக், இப்படித்தான் அங்குள்ள மக்களின் குறைபாடுகளைத் தீர்த்து வருகிறார். கார்டனுக்கு ஆன்டி பயாடிக் மருந்துகளையும், காசநோய்க்கான சோதனைகளையும் பரிந்துரைத்தார்.

கனடாவைச் சேர்ந்த டாக்டர் வில்லியம், ஸ்கேன் சோதனையை அன்றே டொரண்டோவுக்கு அனுப்பி வைத்தார். அச்சோதனை முடிவில் தொடக்க நிலை நிம்மோனியா பாதிப்பு கார்டனுக்கு இருப்பது தெரிந்தது. இதனை அறிய அவர் பயன்படுத்திய கருவி பட்டர்ஃபிளை ஐக்யூ. நாம் பயன்படுத்தும் ஷேவர் அளவில் உள்ளது இந்த ஸ்கேனர். ஸ்டெதாஸ்கோப்பின் போர்ட்டபிள் வர்ஷன் போல உள்ளது இக்கருவி. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்காக பட்டர்ஃப்ளை நெட்வொர்க் என்ற அமெரிக்க கம்பெனி இந்த ஸ்கேனரைத் தயாரித்து வழங்குகிறது. ஒரு கருவியின் விலை 2 ஆயிரம் டாலர்கள்.

எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் என்பதெல்லாம் உள்ளடங்கிய ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பெரும் கனவுதான். இக்கருவியை மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க கேட்ஸ் பவுண்டேஷன் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் உதவுகின்றன.

இதனை உருவாக்கிய நிறுவனரின் மகளுக்கு தினசரி ஸ்கேன் எடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதற்குப்பிறகுதான் பட்டர்ஃப்ளை நிறுவனம் ஐக்யூ ஸ்கேனர்களை தயாரித்து வழங்கினால் என்ன என்று யோசித்து செயலில் இறங்கியுள்ளது. நிறுவனர் வணிகரீதியாக விற்றாலும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விலையின்றி இக்கருவிகளை வழங்கியுள்ளார்.

நிம்மோனியாவைக் கண்டுபிடிப்பதில் ஏற்படும் தாமதம் ஆப்பிரிக்க குழந்தைகளை பலிவாங்கி வருகிறது. எனவே, அதற்காகத்தான் இந்த ஸ்கேனர்களை தற்போது டாக்டர் வில்லியம் பயன்படுத்தி மக்களைக் காப்பாற்றி வருகிறார். ஆனாலும் இக்கருவி மூலம் வேறு நோய்களைக் கண்டறியவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா. (டொனால்டு மெக்நெய்ல்)