இடுகைகள்

உலகம்- ஹாங்காங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுதந்திரத்திற்கு தடை விதிக்கும் சீனா!

ஹாங்காங்கில் சுதந்திரத்திற்கு தடை ! ஹாங்காங்கைச் சேர்ந்த சீனாவிடமிருந்து சுதந்திரம் வேண்டும் தேசியக்கட்சியை தடைசெய்ய அரசு ஆலோசித்து வருகிறது . மிக குறைவான உறுப்பினர்களைக் கொண்ட தேசியக்கட்சி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூட இல்லாத கட்சி தொடங்கப்பட்டு இரு ஆண்டுகள்தான் ஆகிறது .   கட்சித்தலைவரான சான் ஹோ - டின்னுக்கு ஹாங்காங் அரசு கட்சியை நடத்துவதற்கு பல்வேறு நெருக்கடிகளை முன்னர் அளித்தது . " தேசியபாதுகாப்பு , பொதுமக்களின் அமைதி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கட்சியை தடைசெய்ய யோசித்து வருகிறோம் . குறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டு மட்டுமே கட்சிகள் இங்கு இயங்கலாம் " என்று பேட்டியளித்துள்ளார் ஹாங்காங்கின் பாதுகாப்பு செயலர் ஜான் லீ . பிரிட்டிஷ் காலனியாக ஹாங்காங் இருந்தபோது சீன கம்யூனிஸ்ட் கட்சி இங்கு தடைசெய்யப்பட்டு இருந்தது . 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியல் கட்சிக்கு ஹாங்காங்கில் தடை விதிக்கப்பட இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .

ஹாங்காங்கில் மொழிப்போர்!

சீனா ஆக்கிரமிப்பில் ஹாங்காங் ! பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் , 1997 ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் கைப்பிடிக்குள் வந்துவிட்டது . அதிகாரப்பூர்வ மொழியான கன்டோனீஸ் மறைந்து தற்போது சீனாவின் மாண்டரின் பரவிவருவதை அந்நாட்டு மொழியியல் வல்லுநர்கள் பதட்டத்துடன் கவனித்து வருகின்றனர் . இருபதாண்டுகளாக ஹாங்காங் குடிமக்கள் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் போராடிவருகின்றனர் . மொழி , வணிகம் என அனைத்திலும் ஹாங்காங்கை ஆக்கிரமிக்க சீன அதிபர் ஜின்பிங் முயற்சி எடுத்து வருகிறார் . கேரி லாம் தலைமையிலான ஹாங்காங் அரசு கல்வி , சுற்றுலா என கிடைத்த இடத்தில் மாண்டரின் மொழியை புகுத்தி வருகிறார் . ஹாங்காங்கில் 80 சதவிகிதம் பேர் காண்டனீஸ் மொழியை பேசிவருகின்றனர் . எழுபது சதவிகித தொடக்கப் பள்ளியில் மாண்டரின் மொழி வழியாகவே பாடம் நடத்தப்படுகிறது . சீனாவை வேலைவாய்ப்புக்கு சார்ந்திருப்பதால் மாண்டரின் மொழியை படிக்கும் கட்டாயம் ஹாங்காங் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது . இதனை மாற்ற சான் லோக் ஹாங் உள்ளிட்ட தன்னார்வலர்களின் அமைப்புகள் (SLH) முயற்சித்து வருகின்றன . குவாங்சூ உள்ளிட்ட பகுதிகளில் காண்டனீஸ் மொழி அற