இடுகைகள்

கூகுள் புக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சத்யவே ஜெயதே - மின்னூல் வெளியீடு - விரைவில்....... நூல் அட்டை அறிமுகம்

படம்
  காந்தியைப் பற்றிய அவரது கொள்கைகளைப் பற்றி அறிய உதவும் சிறிய நூல். மொத்தம் 92 பக்கங்கள். காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டு கடந்து சென்றிருக்கிறது. தற்போது இந்தியாவின் நிலை என்ன, அதில் காந்தியின் தாக்கம் என்ன என்பதை அலசி ஆராயும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. இந்த நூல் விரைவில் கூகுள் பிளே புக்ஸ் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த தளத்தின் விசேஷமாக நூலின் சில பக்கங்களை நீங்கள் வாசித்துவிட்டு நூலை வாங்க முடியும். அமேஸானில் இந்த வசதி இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த வகையில் தற்போதைக்கு கூகுள் தளத்தில் இது சிறப்பானதுதான் என்று கூறலாம். 

நினைத்து வெகுகாலமாகிவிட்டது மின்னூல் வெளியீடு - கூகுள் புக்ஸ் பிளே சென்டர்

படம்
  இரா.முருகானந்தம், வினோத், கதிரவன் என மூன்று வெவ்வேறு நண்பர்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்த நூல். இதில் அக்காலகட்ட அரசியல், சமூகம், உடல், உள்ள பிரச்னைகள் பேசப்பட்டுள்ளன. மேறகூறிய மூவரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். முருகானந்தம், அரசியல், பேச்சு, நூல்களை வாசித்து அதை பகிர்வதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலையைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் இந்தியா முழுக்க அலைந்து திரிந்தவர். அப்படி சேர்த்த அனுபவங்களைக் கொண்டு பயண நூல் ஒன்றைக் கூட எழுதி வெளியிட்டிருக்கிறார். இடதுசாரி எழுத்தாளரான கதிரவன், சமூக நோக்கம் கொண்டவர். அவரது குடும்பமே இடதுசாரி சித்தாந்த அடிப்படையைக் கொண்டது. இவர் தமிழ் நாளிதழ் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இந்த மூன்று நண்பர்களிடமும் நான் இடையறாது கடிதம் எழுதி உரையாடியதுதான் இப்போது நூலாகி இருக்கிறது. இன்று தகவல்தொடர்புக்கான காசு மலிவாகி இருக்கிறது. ஆனால் இதயங்களால் நாம் வெகு தொலைவில் தள்ளி இருக்கிறோம். அந்த இடைவெளியை இக்கடித நூல் குறைக்கும். பிறரோடு தகவல் தொடர்பு கொள்வது, அறிவை, அனுபவத்தை பகிர்வது எந்தளவு முக்கியம் என்பதை நினைத்து வெகுகாலமாகிவிட்டது