இடுகைகள்

பாலினத் தேர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண் குழந்தைகளின் உருவாக்கத்தைத் தவிர்க்கும் ஜப்பான் ஆராய்ச்சி!

படம்
பிறக்கும் குழந்தைகளை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்! செய்தி: மரபணுக்களை மருத்துவர்கள் கணித்து, ஆண், பெண் குழந்தைகளைத் தீர்மானிக்கும் திறனைப் பெற்றுள்ளனர்.இது சமூகத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜப்பானில் உள்ள ஹிரோசிமா பல்கலைக்கழகத்தில் மசயுகி சிமடா  தலைமையிலான ஆராய்ச்சிக்குழுவினரின் ஆராய்ச்சி இதுவே. ஆணின் விந்தணுக்களில் எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் உண்டு. இவற்றில் எக்ஸ் குரோமோசோம்கள் கருப்பைக்குள் செல்வதைத் தாமதப்படுத்தினால் பெண் குழந்தைகளின் பிறப்பைத் தடுக்கலாம். இதன் விளைவாக, ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த ஆராய்ச்சிதான் மருத்துவ வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. விந்தணுக்களில் சராசரியாக ஐநூறுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் உள்ளன. விந்தணு செல்களை கருப்பைக்குள் நடத்திச்செல்வது இதன் அடித்தளத்திலுள்ள பதினெட்டு புரதங்கள் ஆகும். இவற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, குழந்தைகளின் பிறப்பை மாற்றலாம் என்பது புதிய கண்டுபிடிப்பு. “இந்த கண்டுபிடிப்பு  சமூகத்தின் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனை ஒருவர் தன