இடுகைகள்

சிறுதீவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சிறுதீவுகளின் சூழல் முயற்சிகள்!

படம்
  சூழலைப் பாதுகாக்கும் சிறு தீவுகள்!  அயர்லாந்தின் வடக்குப் புறத்தில் நிறைய தீவுகள் அமைந்துள்ளன. இதில் எல் வடிவில் அமைந்துள்ள தீவு, ரத்லின் (Rathlin). இங்கு மின்சார வசதி கிடைத்ததே, தொண்ணூறுகளில்தான். மூன்று  காற்றாலைகள் நிறுவப்பட்டு காற்று மூலம் ஆற்றல் சேகரிக்கப்பட்டது.  ஆனால் பத்தாண்டுகளுக்குப் பிறகு, அதனை பராமரிப்பதற்கான வசதிகளும் பழுதடைந்த பாகங்களும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக, 2007ஆம் ஆண்டு ரத்லின் தீவு,  அயர்லாந்து நாட்டின் மின் அமைப்புடன் இணைக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிற்குள் ரத்லின் தீவு, கார்பன் இல்லாத தீவாக மாறும் செயல்பாடுகளை செய்து வருகிறது. பிறரைச் சாராமல் தனக்கான செயல்பாடுகளை வரையறுத்துக்கொண்டு செயல்படுவதுதான் ரத்லின் தீவின் முக்கியமான சாதனை. டென்மார்க்கின் சம்சோ (Samso), கிரீசின் டிலோஸ் (Tilos), தென்கொரியாவின் ஜேஜூ (Jeju) ஆகிய சிறு தீவுகள் அனைத்துமே தூய ஆற்றலைப் பயன்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன.  தீவுகள் சிறியவை. இதிலுள்ள மக்களும் குறைவு. இவர்கள் தங்களின் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதால்