இடுகைகள்

கல்லீரல் சிகிச்சைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்லீரல் சிகிச்சைகளின் வரலாறு!

படம்
1955 ஆம் ஆண்டு சி.ஸ்டூவர்ட் வெல்ச் என்ற மருத்துவர் கல்லீரலை மாற்றி பொருத்த முடியும் என்று கண்டுபிடித்தார். இவர் அல்பானி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்தவர். 1958 ஆம் ஆண்டு அமெரிக்காவின் போஸ்டன் நகரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை வல்லுநர் ஃபிரான்சிஸ் மூர் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்தார். 1963 ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் ஸ்டார்ஸ்ல் , செய்த அறுவை சிகிச்சை படுமோசமாக முடிந்தது. 3 வயதான நோயாளிக்கு செய்த அறுவை சிகிச்சையின்போது ரத்தப்போக்கு அதிகமாக ஆபரேஷனும் தோல்வியாகி நோயாளியும் கண்விழிக்கவே இல்லை. அடுத்த செய்த ஆபரேஷனில் நோயாளி  23 நாட்கள் மட்டுமே உயிருடன் இருந்தார். 1977 ஆம் ஆண்டில் 200 கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெற்றன. 1989 ஆம் ஆண்டு தன்னிடம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் உயிர் பிழைத்துள்ளனர் என மருத்துவர் தாமஸ் ஸ்டார்ஸ்ல் கூறினார். 2017 ஆம் ஆண்டு ஹெபடைடிஸ் சி நோய்க்கான சோதனைகள் செய்யப்பட்டன. நன்றி: க்வார்ட்ஸ்