இடுகைகள்

தந்தையர் தினம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அப்பாக்களை கொண்டாடும் தினத்தில் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல்கள்!

படம்
                தந்தையரை கொண்டாடும் நூல்கள் ! வரும் ஜூன் மாதம் அப்பாக்களை நினைவுகூருவதற்கான தினம் வருகிறது . 20 ஆம் தேதி வரும் இந்த தினத்தை நூல்களைப் படித்து கொண்டாடலாம் அல்லவா ? இதற்காக சில நூல்களை பார்ப்போம் வாங்க ! பெஸ்ட் சீட் இன் தி ஹவுஸ் 18 கோல்டன் லெசன்ஸ் பிரம் எ பாதர் டு ஹிஸ் சன் கோல்டன் பியர் என்று அழைக்கப்படும் ஜேக் நிக்லாஸ் என்பவரின் மகன் எழுதியுள்ள நூல் இது . அவரது தந்தையும் அம்மாவும் இணைந்த நடத்திய குடும்ப வாழ்க்கை , கடைபிடித்த விஷயங்கள் , விதிகள் , கட்டுப்பாடுகள் , பிறரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என ஏராளமான விஷயங்கள் விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் . டாட் இஸ் ஃபேட் 2013 ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகர் , எழுத்தாளர் ஜிம் காபிகன் எழுதிய நூல் . இவர் தனது குடும்பத்தில் ஆறாவது குழந்தையாக பிறந்தவர் . இப்படி பிறந்தவர் எப்படி இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்தார் . தன்னை அப்பா எப்படி பார்த்துக்கொண்டார் என்பதையும் , எழுந்த பிரச்னைகளையும் நேர்மையாக எழுதியுள்ளார் . நூலின் பின்பகுதியில் காபிகனின் குடும்ப புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது வாசகர