இடுகைகள்

டீசல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார்பன் வரியின் நோக்கம்!

      கார்பன் வரியின் நோக்கம் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் கார்பன் வரி என்பது நடைமுறைக்கு வந்திருக்கும் அல்லது கொண்டு வரலாம் என யோசித்துக்கொண்டிருப்பார்கள். பிரான்ஸ் போன்ற நாட்டில் வரியை எதிர்த்து போராட்டங்களே வெடித்தன. உண்மையில் கார்பன் வரி எதற்காக, இதைக் கொண்டு வந்தால் கரிம எரிபொருட்கள் தயாரிப்பு குறைந்துவிடுமா, காலநிலை மாற்றம் பிரச்னை தராதா? அப்படியெல்லாம் கிடையாது. கார்பன் வரி என்பது, முற்றாக கரிம எரிபொருட்கள் உற்பத்தியை நிறுத்தப்படுவதை சற்று தள்ளிப்போட உதவுகிறது. கார்பன் வரியைக் கட்டுபவர்களால், அரசை முழுக்க எதிர்த்து தான் நினைத்தை செய்ய வைக்க முடியுமா என்று பதில் கூறுவது கடினம். கரிம எரிபொருட்களை முற்றாக ஒழிப்பது அரசுக்கு சாத்தியமா என்றால் சாத்தியம்தான். ஒரே உத்தரவில் அந்த தொழிற்சாலைகளை இழுத்து மூடலாம். ஆனால் பொதுவாக எந்த அரசும் அதுபோல செய்வதில்லை. பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், எக்செல் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் , தங்கள் தொழிற்சாலையை மூடுவது நடக்ககூடிய ஒன்றா என்ன? ஆனால், அவர்கள் கூட கார்பன் வரியை ஆதரிக்கிறார்கள். இப்போது சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கார்பன் வரி பற்ற...

பசுமை சக்தியில் இந்தியாவின் இடம் என்ன?

படம்
பசுமை சக்தி உலகம் முழுக்க ஹைட்ரஜன் வாகனங்கள், மின் வாகனங்கள் என போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலும் அதுதொடர்பான சட்டங்கள் உருவாகி வருகின்றன. இன்று நாம் பெட்ரோல் டீசல் என ஊற்றி ஓட்டினாலும் வருங்காலம் என்பது ஹைட்ரஜன், லித்தியன் அயன் பேட்டரி வண்டிகளாகவே இருக்கும் என்பது உறுதி. அத்துறை சார்ந்த நிறுவனங்களும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் சந்தையை விட்டுவிடாது. தற்போது வரை உலகளவில் அதிகளவு கார்பன் வெளியிடும் நாடுகளில் சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதுபற்றி சில தகவல்களைப் பார்ப்போம். 2030க்குள் தனது கார்பன் வெளியீட்டு அளவை பெருமளவு குறைத்துக்கொள்வதாக இந்தியா கூறியுள்ளது. எவ்வளவு தெரியுமா 30-35 சதவீதம். தொண்ணூறுகளிலிருந்து 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வெளியேறிய கார்பன் அளவு 147 சதவீதம் என்கிறது சூழல் அமைப்புகளின் அறிக்கை. உலகளவில் இந்தியா வெளியேற்றும் கார்பன் அளவு 6.55 சதவீதம்தான். தனிநபர் வெளியேற்றும் கார்பன் அளவில் இந்தியா 20 வது இடத்தில் உள்ளது. காற்றாலைகள் மூலம் கிடைக்கும் ஆயிரம் ஜிகாவாட் மின்சாரம் மூலம் 250 பே...

இறப்புக்கு காரணம் டீசல்!

படம்
உலகம் முழுவதும் தோராயமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காற்று மாசுபாட்டில் பாதிக்கப்பட்டு மரணத்தை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பான அமெரிக்க ஆய்வு வெளியாகி அதிர்ச்சியூட்டி உள்ளது. காற்று மாசுபாடு மக்களின் சில நோய்களுக்கு காரணம் என்பது பொதுவாக பலரும் அறிந்ததே. ஆனால் முழுமையாக ஒருவரின் இறப்புக்கு காரணம் என்று ஆய்வறிக்கை திடமாக கூறுவது அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.  எண்ணிக்கையில் 3 லட்சம், உலகளவில் 40 சதவீதம் என டீசல் இஞ்ஜின்கள் மனிதர்களை பலிவாங்கி வருகின்றன. பொதுவான சதவீதம் என்று கூறினாலும் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த அளவு 66 சதவீதமாக உள்ளது. இன்டர்நேஷ்னல்  கௌன்சில் ஆன்  க்ளீன்(ICCT) என்ற அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  2015 ஆம் ஆண்டு இந்த அமைப்பும், அமெரிக்க பல்கலைக்கழகங்களும் இணைந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது மாசுபாட்டு குற்றத்தைக்கூறி(2015) நிரூபித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.  ஐரோப்பாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஊறு விளைவித்துவருவது டீசல் இஞ்ஜின்கள் ஆகும். மாசுப...