வங்கி ஓடிபியில் பணியாளருக்கு ரேட்டிங்கை வழங்குவது எப்படி? பத்து நிமிட வழிகாட்டி கட்டுரை
யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - பலவித அனுபவங்கள் நான் கணக்கு வைத்துள்ள வங்கி விவசாயிகளுக்கானது. இப்போது மெல்ல படித்த வர்க்கத்தினருக்காக கட்டாயமாக மாறி வருகிறது. படிக்காத வாடிக்கையாளர்களைக் கூட மிரட்டி கட்டாயப்படுத்தி கடன் அட்டையை திணித்து அதன் வழியாக பணத்தை எடுக்கச் சொல்கிறார்கள். அதற்கான சேவைக் கட்டணம் அவர்களுக்கு முக்கியமானதாக படக்கூடும். ஊழியர்களுக்கு ஆண்டு இலக்கு கூட நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். இந்தவகையில் அதுவரை வழங்கப்படாத கடன் அட்டை நிறைய பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பெண்கள் அனைவருமே கல்வியறிவற்றவர்கள். அதுவரை படிவத்தில் காசு வேண்டுமென்றால் அதை வங்கியிலுள்ள சீருடை தரித்த பெண்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு வந்து காசாளரிடம் கொடுத்துத்தான் பெறுவார்கள். ஆனால், படிவம் எழுதுகிறவர்களைக் கூட, இன்று கட்டாயப்படுத்தி கொடுத்த கடன் அட்டை இருக்கிறதல்லவா, அதைப் பயன்படுத்துங்கள் என வங்கி அதிகாரிகள் கூச்சலிடுகிறார்கள். மாற்றங்கள் இந்திய சமூகத்தில் மெதுவாகத்தான் வரும் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் போல. இதுபற்றி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஒருமுறை கூறியிருக்கிறார். நூலகம் ஒன்ற...