சிறையில் உளவியலாளர் பணி - ஹரே என்ன செய்தார்?
அசுரகுலம்
உளவியலாளர் ராபர்ட் ஹரே
ராபர்ட் ஹரே நம் ஆட்கள் போல படித்தால் டாக்டர் இல்லைனா எஞ்சினியர் என பிளான் போட்டு படிக்கவில்லை. அல்பெர்டாவின் கால்கேரியில் பிறந்து வளர்ந்தவர் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் எந்த இலக்கும் இல்லை. அவருக்கு கணிதம், அறிவியல், தொல்லியல் ஆகிய துறைகளில் ஈடுபாடு இருந்தது. ஆனால் அல்பெர்டா பல்கலையில் ஏதேனும் படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது உளவியலும் சேர்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்தார். 1950 ஆம் ஆண்டு உளவியல் படிப்பில் பட்டம் பெற்றார்.
அதை நினைவுகூர்ந்தவர், எனக்கு அப்போது நான் படித்த விஷயங்களை ஆய்வு அடிப்படையில் சோதித்தப் பார்க்க விரும்பினேன். ஏனெனில் கல்லூரியில் படித்தது முழுக்க தியரிதானே ஒழிய அதற்கான எடுத்துக்காட்டுகளை நாங்கள் பார்க்கவேயில்லை என்றார். காலம் நீங்கள் விரும்புகிற விஷயங்களை வழங்காமல் போகுமா? அவருக்கும் வழங்கியது.
அப்போது உளவியல் வகுப்பில் ஒரு பெண்ணைப் பார்த்தார். அவெரில் என்ற அந்தப் பெண்ணுடன் டேட்டிங் போய் பிறகு அந்த உறவை சுபமாக திருமணத்தில் முடித்தார். 1959 ஆம் ஆண்டு திருமணமானவர்கள் படிப்பிலும் இல்லறத்திலும் அதீத ஆர்வம் காட்டி, செரில் பிறந்தாள். அப்போது ஒரேகான் பல்கலையில் முனைவர் படிப்பு படித்துக்கொண்டிருந்தார் ஹரே.
உணர்வுகள், குணநலன்கள் குறித்த படிப்பு அது. செரிலின் உடல்நிலை அவர்களின் பெற்றோரை படுத்தி எடுக்க, குறைவான விலையில் தரமான சிகிச்சை எடுக்க கனடாவுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு ஹரேவுக்கு கிடைத்தது வான்கூவர் அருகிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா சிறையின் உளவியல் மருத்துவர் பணி.
எனக்கு முதலில் எப்படி அந்த பணியை செய்வது என்றே புரியவில்லை. கொலைக்குற்றவாளிகளை எப்படி டீல் செய்வது? என்று முதலில் குழம்பிப் போனேன்.
கைதிகளிடம் ஆளுமை குறித்து அறியும் சோதனைகளை நடத்த வேண்டும் என்பதே அவரது பணி. இதற்கு சிறை காவலர்களின் உதவியை நாடினார்.
ரே என்பவரை முதலில் சந்தித்தேன். என்னை அவர் தன்னுடைய உணவு போல பார்த்தார். பின் எந்தவித குற்ற உணர்வுமின்றி கத்தியை எடுத்து என்னை குத்த பாய்ந்தார். நான் சரியான நேரத்தில் அபாய பட்டனை அழுத்தி தப்பினேன் என அந்த அனுபவத்தை விவரித்தார்.
உண்மையில் ரே அன்று அந்தகத்தியை வைத்திருந்தது இன்னொரு கைதிக்காகத்தான். சொன்னது யார்? தேவாதான் என்று ரஜினி சொல்வாரே அதேபோல ரேதான சொன்னார் என்கிறார் ஹரே. ரே தன்னை சோதிப்பதாக உணர்ந்தவர், இதனை காவலர்களிடம் சொல்லவில்லை. ஆனால் ரே, சிறை விதிகளை உளவியல் சோதனைகளுக்காக கைவிட நினைத்து ஹரேவை கருவியாக பயன்படுத்த நினைத்தார்.
ரேவை சோதனைகள் வைத்து சோதித்துக்கொண்டிருந்தபோது மேற்கு ஒன்டாரியோவில் படிப்பு முடித்து பட்டம் பெற்றார். அப்போது காரில் தன் மனைவியுடன் ஜாலி பிக்னிக் சென்றபோது பிரேக் செயலிழந்து அரும்பாடுபட்டு உயிர் பிழைத்தார். பின்னர்தான், குற்றவாளிகளின் ஆளுமை, குணங்கள் குறித்து தீவிரமாக படிக்கத் தொடங்கினார். ஆய்வுகளைச் செய்வதில் ஈடுபாடு காட்டினார்.
1963 ஆம் ஆண்டு யுபிசியின் உளவியல் துறை பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார். அங்கு பயம், தண்டனை, பரிசு ஆகியவற்றைப் பற்றியும் ஆராய்வதில் தன் நேரத்தை செலவிட்டார். புதிய இடத்தில் ஆய்வுக்கூடமோ, அதற்கான இடமோ கூட இல்லை.
2
அப்போது தன்னார்வலர்களை கூட்டி வைத்து சிறிய சோதனைகளை செய்து வந்தார் ஹரே. அதில் சிறிய அதிர்ச்சி தரும் சோதனையும் ஒன்று. இந்த ஆய்வு தி ஜர்னல் ஆஃப் அப்நார்மல் சைக்காலஜி என்ற ஆய்விதழில் வெளியானது. 1965 ஆம் ஆண்டு வெளியான இந்த ஆய்வு, உளவியல் ரீதியான அழுத்தம் மனநல பிறழ்வு கொண்டவர்களுக்கு கிடையாது என்று நிரூபித்தது. அதிர்ச்சி நிகழ்வை மனநல பிரச்னைகொண்ட கைதிகள், குறிப்பிட்ட நிமிடங்களுக்கு முன்பாகவே நாங்கள் எதிர்பார்த்தோம் என பதில் சொல்லி மிரட்டினர்.
அப்போது நாங்கள் செய்த ஆராய்ச்சிக்கு எந்த மதிப்பையும் அறிவியல் உலகம் தரவில்லை. கிளெக்லியும் நானும் மட்டுமே தனியாக உலகில் நிற்பது போல கனவுகளே எனக்கு வரும். இதனால் தொல்பொருளியல் சார்ந்து வேலை பார்த்து போய்விடுவோமா என்று கூட நினைத்திருக்கிறேன் என்றார் ஹரே.
1970 ஆம் ஆண்டு ஹரே சைக்கோபதி: தியரி அண்ட் ரிசர்ச் என்ற நூலை பதிப்பித்தார். அமேசானில் இந்த நூலை புத்தகமாக தேடினால் ஒன்பதாயிரம் சொச்ச ரூபாய் என கணக்கு காட்டுகிறது. எனவே சுருக்கமாக அவர் என்ன சொன்னார் என்பதைக் கூறிவிடுகிறேன்.
அதற்குப்பிறகுதான் என் வாழ்வில் உருப்படியான விஷயங்கள் நடக்க தொடங்கின. எதற்குப் பிறகு மேற்சொன்ன நூலை வெளியிட்ட பின்தான். எனக்கு இத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் கிடைத்தனர். நான் எங்கு செல்லவேண்டுமென அவர்களின் ஆர்வமே முடிவு செய்தது. ஆனாலும் அதற்கான கருவிகள், ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை சமூகம் தீவிரமாக விமர்சனம் செய்ய ஹரே சோர்ந்துபோனார். ஏனெனில் அப்போதுதான் அவருக்கு ஆய்வகம் கூட கிடைத்தது. பாலிகிராஃப் கருவியைக் கூட செட் செய்துவிட்டார். ஆனால் ஆய்வை வெளியிடும் ஆசிரியர்கள், இதன்மூலம் உளவியலுக்கு என்ன மதிப்பீடு கிடைத்துவிடும் என கேள்வி கேட்க கடும் கழிவிரக்கத்திற்கு உள்ளானார் ஹரே.
அப்போது நிலநடுக்கத்தைக் கண்டறிய ரிக்டர் கண்டுபிடித்த கருவி போல ஒன்றிருந்தால் எப்படியிருக்கும் என்று கூட யோசித்தேன் என்றார்.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: டிஸ்கவர் இதழ், சைக்காலஜி டுடே, சயின்ஸ் ஆஃப் பீப்பிள்
ImageL pinterest