இடுகைகள்

ஈகோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களின் வாழ்வை வடிவமைக்கும் மூன்று உளவியல் அம்சங்கள்!

படம்
  ஃப்ராய்டின் மகள் செய்த ஆய்வுகளைப் பற்றி பேசுவோம். இவர் தந்தை ஃப்ராய்ட் செய்த ஆய்வுகளை மறுத்து வேறு கருத்துகளை முன்வைத்தார். அதைப்பற்றித்தான் பார்க்கப்போகிறோம். ஈடன் தோட்டத்தில் ஆதாம், ஏவாளுக்கு பாம்பு ஒன்று தடை செய்யப்பட்ட கனியை சாப்பிட ஆசை காட்டி, அவர்கள் சாப்பிட்ட கதையை படித்திருப்பீர்கள். கிறிஸ்துவ மத புனித நூலான பைபிளில் மேற்சொன்ன கதை இடம்பெற்றுள்ளது. இதை அடையாளம் காட்டுவது போலவே ஃப்ராய்ட் தனது உளவியலை மூன்று அம்சங்கள் கொண்டதாக வடிவமைத்தார். இதில் ஐடி, சூப்பர் ஈகோ, ஈகோ ஆகியவை உள்ளடங்கும்.  இதில் ஐடி என்பது பாம்பு. ஆசையைத் தூண்டிவிடுவது. உணவு, பாலியல் உணர்வு, உடை, வீடு என பல்வேறு விஷயங்கள் மீது ஆசைப்படத் தூண்டுவது என கொள்ளலாம். சூப்பர் ஈகோ என்பது நடத்தை கொள்கை, லட்சியம் என கொள்ளலாம். பெற்றோர்கள், சமூகம் சொல்லும் நன்னடத்தை விதிகள், வாழ்க்கை நெறிகள் ஆகியவற்றைக் கொண்டது. ஈகோ என்பது மேற்சொன்ன இரண்டு நிலைகளுக்கும் இடைபட்டு முடிவெடுத்து இயங்குவது. மனதில் ஆசைகள் காவிரியாக பொங்கினாலும் அதை அடக்கியபடி முடிவுகளை எடுக்கும் செயல்திறன் கொண்டது.  தந்தை ஃப்ராய்ட் கூறிய கருத்துகளை சற்று விரிவுபடு

காதலை சொல்லத் தயங்கும் கோபக்கார பெண்ணின் வாழ்க்கை! - வருடு காவாலேனு 2021

படம்
  வருடு காவாலேனு 2021 தெலுங்கு - தமிழ் டப்  இயக்கம் லஷ்மி சௌஜன்யா இசை, பின்னணி - விஷால் சந்திரசேகர், எஸ்.தமன் படத்தின் சிறப்பு ரிது வர்மாவின் பாத்திரம் தான். இதனை இயக்குநரே பேட்டியில் கூட சொல்லிவிட்டார். இதில், பெண் பாத்திரமாக நாயகிக்குத்தான் அதிக முக்கியத்துவம் உள்ளது போல தெரியும். ஆனால் அப்படி கிடையாது. படத்தில் இரு பாத்திரங்கள் முக்கியமானவை. ஒன்று பூமி எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தும் இளம்பெண். அடுத்து, அவளை ஆகாயம் போல சுற்றி வளைக்க முயலும் பாரிஸிலிருந்து வரும் கட்டிடக் கலைஞன் ஆகாஷ். இவர்கள் இருவரின் காதல், ஈகோ, போட்டி, பொறாமை, ஆவேசம்தான் படமே.  காட்சிகளின் படி படத்தை அடுக்கினால் தான் படம் மட்டுமல்ல கதை சொல்வதுமே புரியும். பூமி, தரணி எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்துகிறாள். முழுக்க இயற்கைக்கு அதிக சேதம் விளைவிக்காத பொருட்களை வைத்து வீடுகளை கட்டுவதுதான் நோக்கம், லட்சியம், பேராசை இன்ன பிற என்று வைத்துக்கொள்ளுங்கள்.  பூமிக்கு, திருமணம் ஆகவில்லை. வயதும் 30 ஆகிவிட்டது. இதனால் அவளை வீட்டில் அம்மா கல்யாணம் செஞ்சுக்கோ என நெருக்குகிறாள். அப்பாவைப் பொறுத்தவரை கல்யாணம், காதல் எல்லாம் அவள்தான

இரண்டாவதாக ஓடி ரேசில் வென்ற ஸ்டீவ் ஜாப்ஸ் - சூப்பர் பிஸினஸ்மேன்

படம்
                சூப்பர் பிஸினஸ்மேன் அமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் சூப்பர் பிஸினஸ்மேன் என்று யாரையாவது கூற வேண்டுமெனில் யாரைக் கூறலாம் ? பில்கேட்ஸ் அல்ல . பில் ஹியூலெட் , டேவிட் பெக்கார்டு ஆண்டி குரோவ் , கூகுளின் இரட்டையர்களை கூறலாம் . ஆனால் பலருக்கும் மனதில் வரும் ஒரே பதில் ஆப்பிளை மக்களுக்கான எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ்தான் . இப்போது டிம் குக் , நிறுவனத்தின் லகானைப் பிடித்து செலுத்தினாலும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவது , அதனை எளிமைப்படுத்துவது ஆகியவற்றில் மாஸ்டர் ஸ்டீவ்தான் . வாடிக்கையாளர் பயன்படுத்தும் ஆப்பிள் பொருட்கள் , எளிதாக இருக்கவேண்டும் . அதன் பயனர் கையேட்டை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட எளிதாக புரிந்துகொள்ளவேண்டும் என மெனக்கெட்டார் . ஆப்பிளின் பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி விழாவைப் போல நடத்தப்படும் . எப்படி பொருளை மார்க்கெட்டிங் செய்வது என்பதை ஸ்டீவ் தனது அனுபவங்கள் வழியாக கற்றிருந்தார் . அதனால்தான் ஆப்பிள் என்றால் ஸ்டீவ் , ஸ்டீவ் என்றால் ஆப்பிள் என்று இன்றுமே கூறப்படுகிறது . 1955 ஆம் ஆண்டு தனது அம்மாவின்

தம்பியின் டீம் ஜெயிக்க ஆவியாகி வந்து உதவும் அண்ணன்! - சிக்ஸ்த் மேன் 1997

படம்
            சிக்ஸ்த்மேன் 1997   Director: Randall Miller Produced by: David Hoberman Writer(s): Christopher Reed, Cynthia Carle Music by Marcus Miller Cinematography Mike Ozier பேஸ்கட் பால் விளையாட்டுதான் வாழ்க்கை . அதற்குப்பிறகுதான் பிற விஷயங்கள் என்று நினைக்கும் குடும்பம் . அதில் ஆண்டன் , கெனி என இரு சகோதர ர்கள் . இதில் அண்ணன் வெகு சாமர்த்தியசாலி . இவர்களுக்கு கோச் வேறு யாருமில்லை . அவர்களது தந்தைதான் . இந்த நிலையில் சிறப்பாக விளையாடி ஆண்டன் புகழ்பெற நினைக்கிறான் . ஆனால் ஒரு விளையாட்டில் கோல் போடும்போது மாரடைப்பு வந்து சடக்கென இறந்துவிடுகிறான் . அவன் நினைத்தபடி அவனது டீம் சாம்பியன் பட்டம் வென்றார்களா இல்லையா என்பதுதான் படம் .    படம் முழுக்க காதல் , தூக்கலாக காமெடி , கொஞ்சம் நெகிழ்ச்சி நிரம்பியுள்ளது . முழுக்க பேஸ்கட்பால் கோர்ட் , ஸ்கோர்போர்டு என்று நடைபெறுகிற படம் என்பதால் சிலருக்கு சலிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது . அதற்குத்தான் பேன்டசி சமாச்சாரத்தை சேர்த்திருக்கிறார்கள் . ஆண்டனைத் தவிர பிறருக்கு அவ்வளவு சமர்த்து பத்தாது . அல்லது அவர்களுக்கு ஊக்கம் கொடுக