இடுகைகள்

காங்கிரஸ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவாதம் நடத்தி மசோதாக்களை நடைமுறைப்படுத்தவே விரும்புகிறேன்! -ஓம் பிர்லா

படம்
ஓம் பிர்லா மக்களை சபாநாயகர் முன்னர் உங்களது பங்களிப்பால் மக்களைவில் உற்பத்தித்திறன் 100 சதவீதம் இருந்தது. ஆனால் குளிர்கால கூட்டத்தொடர் உற்பத்தித்திறன் 22 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. இதுபற்றி தங்கள் கருத்தென்ன? கடந்த ஐந்து முறையாக கூட்டத்தொடர் சிறப்பாக நடைபெற்றது. எம்பிக்கள் தங்களு டைய கடமையை சரியாக நிறைவேற்றினர். மக்களவை அதிக பிரச்னையின்றி நடைபெற்றது. சில சமயங்களில் அவை நள்ளிரவு வரை கூட நடைபெற்றது. அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றபோதுதான் பெகாசஸ் பிரச்னை வெடித்தது. இதனால் எதிர்க்கட்சிகள் இதுபற்றி விவாதிக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட அமளியை சரிசெய்யவே முடியவில்லை. நான் என்னளவில் இப்பிரச்னையை சரிசெய்ய முயன்றேன்.  நாடாளுமன்றம், ஜனநாயக முறையில் நாட்டின் பிரச்னையை விவாதிக்கும் இடமாக மக்கள் கருதிவருகின்றனர். இது நேர்மறையான பிம்பத்தைக் கொண்டுள்ளது. பிற ஜனநாயக அமைப்புகளுக்கு முன்னோடியாக உள்ளது.  இப்படி மக்களவை முடக்கப்பட யார் காரணம் என நினைக்கிறீர்கள்? நான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு யாரை காரணம் சொல்லுவது? ஆளும் அரசு, எதிர்கட்சிகள் சில விஷயங்களில் ஒற்றுமை கொண்டால் மட்டுமே சபை நடக்கும். இதி