இடுகைகள்

ஆக்கிரமிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆற்றுத் துண்டாடலால் நடைபெறும் சேதங்கள்! - வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு கூடுகிறது!

படம்
வெள்ளத்தால் மாறும் ஆற்றின் வழித்தடம்! 2008ஆம் ஆண்டு, இந்தியா- நேபாளத்தின் எல்லையில் உள்ள கோசி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, 30 லட்சம் மக்களின் வீடுகள் வெள்ளத்தால் அழிந்தன.  வெள்ள எச்சரிக்கையை முன்கூட்டியே கூறாத அறிவியலாளர்கள், அரசு ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். வெள்ளப்பெருக்கு அபாயத்தை ஆக்கிரமிப்புகளும் அதிகரித்தன என்பதே உண்மை. இந்த சம்பவத்தில் நாம் அறியவேண்டியது, ஆறு தன் வழித்தடத்தை மாற்றிக்கொள்வதேயாகும்.  பெரியளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபிறகு, ஆற்றின் வழித்தடம் மாறுவதற்கு, ரிவர் அவல்ஷன் (River avulsion) என்று பெயர். தமிழில் வெள்ளத் துண்டாடல் எனலாம். ஆற்றின் வழித்தடத்தில் காலப்போக்கில் அரித்துச் செல்லும் மண்ணில் உள்ள வண்டல் கீழே படியும். இப்படி படியும் மண் ஆற்றின் நீர்ப்போக்கைத் தடுக்கும். இதனால் ஆற்றின் நீர் வேறுவழியாக செல்ல முயலும். இதனால் ஆற்றின் கரைப்பகுதிகளில் ஏற்படும் சேதம், நிலநடுக்கம் ஏற்பட்டால் உருவாவதைப் போலவே இருக்கும். கங்கை ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான கோசி ஆறு, வெள்ளம் ஏற்பட்டபோது, அதன் வழித்தடத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்திற்கு மாறியது. ஆற்ற

புல்டோசர் சென்றபிறகு வாழ்க்கை என்னவானது?

படம்
  பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், மதம் மாறி திருமணம் செய்தால் போதும். உடனடியாக மாநில அரசு அதற்கான தண்டனையை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இன்ஸ்டன்டாக வழங்கி விடுகிறது. இன்றுதான் இன்ஸ்டன்ட் உப்புமா, பொங்கல் என வந்துவிட்டதே நீதி மட்டும் ஏன் தாமதமாக கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. வீடு இடிக்கப்பட்ட பிறகு நீதிமன்றம் வழக்கை விசாரித்து இடிக்கப்பட்டது சரியா அல்லது தவறா, ஊடக கருத்துக்கணிப்பு, மக்கள் கருத்து என என்ன செய்யலாம் முடிவு செய்யப்படுகிறது. பாஜக அரசின் இந்த முன்மாதிரி செயல்பாட்டால் நீதிமன்றத்தின் சுமை பெரும்பாலும் குறைந்து வருகிறது.  ஜஹாங்கீர்புரி இங்கு நூர் ஆலம் தனது மூன்று பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் வாழ்கிறார். நூர் ஆலம், கால்நடைகளுக்கான தீவனத்தை தயாரித்து அருகிலுள்ள பால்ஸ்வா பால் பண்ணைக்கு தருவதுதான் முக்கியமான வேலை. இவரது கடை இருக்கும் கட்டிடத்தை நகர நிர்வாகம் ஆக்கிரமிப்பு என சொல்லி இடித்து தரைமட்டமாக்கிவிட்டது. இதனால் நூர் ஆலம் தனது வாழ்க்கையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கியிருக்கிறார். இதற்கு ம

மாஃபியாவுக்கு எதிரான கோவை மனிதர்!

படம்
  கோவையிலுள்ள சௌரிபாளையத்தைச் சேர்ந்தவர், தியாகராஜன். 50 வயதாகும் இவர், சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து நில ஆக்கிரமிப்பை எதிர்த்து செயல்பட்டு வருகிறார். ஆக்கிரமிப்பு நிலத்தில் கோவில், வீடு, நிறுவனம் என எது மாநகராட்சியால் அகற்றப்பட்டாலும் அதனை முழுமையாக ஏற்று சந்தோஷப்படும் ஆன்மா கோவையில் தியாகராஜனாகத்தான் இருக்க முடியும்.  ஆர்டிஐ தகவல்கள் மூலம் அரசு நிலங்களைக் கண்டுபிடித்து அதனை பிறர் ஆக்கிரமிக்காதபடி தடுத்து வருகிறார். அதனை வேலியிட செய்யுமளவு அக்கறை காட்டுகிறார். பெரும் சக்திகளின் எதிர்ப்புகளையும் மீறி  இந்த வேலையை கடந்த 16 ஆண்டுகளாக செய்துவருகிறார். இதுவரை 26 ஏக்கர்களுக்கு மேலான நிலங்களை மீட்டு அதற்கு சொந்தமானவர்களுக்கு கொடுத்திருக்கிறார். இதன் சந்தை மதிப்பு 300 கோடிக்கும் அதிகம். வீட்டுநலச்சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களை கூட தியாகராஜன் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டிருக்கிறார்.  கோவை மாநகராட்சியில் 50 ஆக்கிரமிப்புகளைக் கண்டுபிடித்து அதில் 40 இடங்களை மீட்டுக்கொடுத்துள்ளார். இதில் பத்து இடங்களில் சட்டரீதியான போராட்டங்கள் நடந்து வருகின்றன.  2004ஆம் ஆண்டு நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்

அடேலி பெங்குவின்களின் வாழ்க்கைப்பாடு!

படம்
  பிட்ஸ்  பெங்குவின்  அன்டார்டிகாவில் பொதுவாக காணப்படும் பெங்குவின் இனத்திற்கு அடெலி பெங்குவின் என்று பெயர். இவை உண்ணவும், குடிக்கவும் கடல்நீரை நாடுகின்றன. சாதாரணமாக ஒருவர் உப்பு அதிகமுள்ள உணவை சாப்பிட்டால் நோய்வாய்ப்படுவார். அடெலி பெங்குவின்கள், கண்களுக்கு மேலுள்ள உறுப்பு மூலமாக அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இந்த உறுப்பு வடிகட்டி போல செயல்படுகிறது. ”அடிக்கடி தலையை உதறுவது, தும்மல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இப்படி நடக்கும்போது அதனை சுற்றிலும் உப்புநீர் தெறிப்பதைப் பார்க்கலாம்” என்றார் பெங்குவின் ஆராய்ச்சியாளரான டையான் டேநெபோலி.  அடேலி பெங்குவின்களின் உடலிலுள்ள தோல்தான் அவற்றைக் குளிரிலிருந்து பாதுகாக்கிறது. நீரால் உடல் நனைவதை தடுப்பதோடு, உடல் வெப்பம் வெளியேறி செல்லாமல் பாதுகாக்கிறது. உடலில் உள்ள முடிகளை சிறு துண்டுகளாக உள்ள பார்புலஸ் எனும் உறுப்பு ஒன்றாக இணைக்கிறது. இதன் உரோமங்களை வெல்க்ரோ (velcro) அமைப்பு போல இணைக்கிறது. உரோம அமைப்பு, வெளியிலுள்ள காற்று உள்ளே வரும்போது அதனை கதகதப்பானதாக மாற்றுகிறது.  பெங்குவின்களால் பறக்க முடியாது. ஆனால் அதன் கால்களில