ஊபா ஒடுக்குமுறை சட்டத்திற்கு அடுத்த பலி - சாய்பாபா
ஊபா ஒடுக்குமுறை சட்டத்திற்கு அடுத்த பலி - சாய்பாபா டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தவரான சாய்பாபா, மாற்றுத்திறனாளி. சக்கர நாற்காலி மூலமே நடமாடி வந்தார். ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவருக்கு மனைவி, மகள் உண்டு. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது, அதற்கு ஆதரவு தெரிவித்தார். மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே ஆதரவான கூட்டங்களில் பங்கேற்றார். மனித உரிமைகளை பேசி வந்தவர், ஒன்றிய அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்கினார். எனவே, சாய்பாபாவை முடக்க ஒன்றிய அரசு போலியான வழக்கு ஒன்றை தொடுத்தது. பல்கலைக்கழக மாணவரை கைது செய்து அவருடைய தகவலின் அடிப்படையில் மாவோயிஸ்டுகளுக்கும் அவருக்கும் இடையே கடிதங்களை பரிமாற மாணவர் உதவினார் என்பதே குற்றச்சாட்டு. பேராசிரியரோடு கூடவே ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவானது. 2014ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரை சாய்பாபா நீதிமன்றம், சிறை என அலைந்தார். ஏழு ஆண்டுகள் சிறைதண்டனையும் அனுபவித்தார். பிறகு உச்சநீதிமன்றம் மூலம் விடுதலையானார். ஆனால் உடல் முற்றாக சிதைந்துபோயிருந்தது. ஆறு மாதங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிவந்த நிலையில் மரணத்தை த...