இடுகைகள்

வசை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வசை, அவதூறு, சதி, துரோகங்களைக் கடந்து வெல்லும் தற்காப்புக் கலை தலைவனின் நெகிழ்ச்சியான கதை!

படம்
  கிங் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ்  காமிக்ஸ் 380 அத்தியாயங்கள்..... நிறைவடையவில்லை ரீட்மங்காபேட்.காம் யேசென் என்பவன், ஸென்குயு இனக்குழுவைச் சேர்ந்தவன். தற்காப்புக்கலையில் சிறந்தவனாக இருப்பவனை அங்குள்ள சிலர் சதி செய்து அவன் தற்காப்புக்கலையை அழிக்கிறார்கள். மேலும் அவனை இனக்குழுவில் இருந்து நீக்குகிறார்கள். அவனது காதலிக்கு சுவாங்க்லிங் எனும் அழிவற்ற உடல் இருப்பது தெரிய வருகிறது. இதனால் அவளும் அவனை ஊதாசீனப்படுத்துகிறாள். காதலை கைவிடுகிறாள். அவனை அவமானப்படுத்த காத்திருந்தவர்கள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவனுக்கு பெற்றோரோ, உதவி செய்ய எந்த ஆதரவான சக்தியும் இல்லாத சூழ்நிலையில் காட்டு வழியே நடந்துசெல்கிறான். அப்போதுதான் விண்ணிலிருந்து விண்கல் ஒன்று காட்டில் வந்து விழுகிறது. அதிலிருந்து நெருப்பு அணையாமல் எரிகிறது. அவன் அதன் அருகில் சென்று நின்று, நெருப்பு ஜூவாலையைத் தொட்டு பார்க்க, அந்த நெருப்பு அப்படியே அவனது உடலுக்குள் புகுந்து இழந்த தற்காப்புக்கலையை மீண்டும் கற்கும் தன்மைக்கு உடலை மாற்றுகிறது. அந்த சக்தி ஏற்படுத்தும் அதிர்ச்சியால் மயக்குறுபவனை வயதானவர், அவரது பேரன் ஆகியோர் காப

நண்பர்களைப் பெறுவதில் நல்லதிர்ஷ்டம் இல்லை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  4.3.2022 மயிலாப்பூர் அன்பிற்கினிய  நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? நேற்று நான் திருவண்ணாமலை சென்றேன். அங்கு சென்று புகைப்படக்கலைஞர் வினோத் அண்ணாவைச் சந்தித்தேன். சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு மதியம் 2 மணிக்கு பஸ் ஏறிவிட்டேன். பஸ் கோயம்பேடு வர 8 மணி ஆகிவிட்டது. இடையில் ஏதோ பாலம் கட்டும் வேலை நடைபெற்றது. இதனால் கிராமங்களுக்குள் போய் பஸ் வெளியே நின்று நின்று நகர்ந்தது. அறைக்கு வரும்போது மணி 9 ஆகிவிட்டது.  எங்கள் நாளிதழ் அலுவலகத்தில் கோ ஆர்டினேட்டர் தந்திரமாக அரசியல் செய்து பல்வேறு ஆட்களை காய்களை பயன்படுத்தி வருகிறார். அவரது பெயரை பத்திரிகையில் ஆசிரியர் போடவில்லை. இதற்கு என் பெயர் முன்னே இருப்பது காரணம் என பிரசாரம் செய்து வருகிறார். கூடவே, பத்திரிகையில் வேலை செய்யும் மூத்த செய்தி ஆசிரியர் பெயர் அங்கு வரவேண்டியது நியாயமாம். சக உதவி ஆசிரியர்கள் தன்னை இழுக்காதவரை எனக்கென்ன அக்கறை என கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். சீஃப் டிசைனர் கோ ஆர்டினேட்டரை தூண்டிவிட்டு தனக்கு சாதகமாக எடிட்டோரியலை வளைத்து வருகிறார். நான் வேலையை விட்டு விலகுவதே இவர்களது லட்சியம் என நினைக்கிறேன். இதற்காக வாய்ப்பு கிடைக்

சேறாய் அள்ளிவீசப்படும் அலுவலக அரசியல் மலம்! கடிதங்கள் - கதிரவன்

படம்
  5.2.2022 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  நான் நேற்று கார்ட்டூன் கதிரவனிடம் பேசினேன். நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு வந்துவிட்டாராம். அவர் மயிலாப்பூர் வருகிறேன் என்றார். ஆனால் சில நாட்களில் என்ன வேலையோ உடனே ஊருக்குப் போய்விட்டார்.  இனி சென்னைக்கு வரும்போது நானே அவரைப் போய் பார்த்து லெஜண்ட் கலைஞருக்கு மரியாதை செய்ய நினைத்துள்ளேன்.  ரஷ்மி பன்சல் எழுதிய நூலைப் படித்து முடித்தேன். இருபது தொழிலதிபர்கள்  பற்றிய கதை. தமிழில் நன்றாகவே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. லஷ்மி விஷ்வநாதன் மொழிபெயர்த்திருக்கிறார். ஆபீசில் யார் பெயர் மூளையின் ஐக்யூ சார்ந்து முன்னே இருக்கும் என சதி ஆலோசனைகள் நடைபெறுகிறது. அதிகளவு தாக்குதலை என்மீதுதான் கோ ஆர்டினேட்டர் தொடுக்கிறார்.  வசை, அவதூறு, வீண்பழி, சாடை பேசுவது என அனைத்துக்கும் இப்போது புதிதாக பழகி வருகிறேன். வீட்டிலேயே அப்பாவிடம் இதை எதிர்கொண்டிருப்பதால், பெரிய அதிர்ச்சி இல்லை. வேலை மனநிலை தான் கெட்டுப்போய்விடுகிறது. எவ்வளவு நாள் தாங்க முடியும் என்று பார்ப்போம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களைப் படித்து வருகிறேன். இந்த ஆண்டு புத்தகத

என்றென்றைக்கும் உலகிற்கு தேவைப்படும் காந்தி! - உரையாடும் காந்தி - ஜெயமோகன்

படம்
  காந்தி நன்றி -டைம்ஸ் ஆப் இந்தியா உரையாடும் காந்தி ஜெயமோகன் என்றைக்கும் இல்லாதபடி காந்தி இன்று மக்களுக்கு தேவைப்படுகிறார். அவரின் கொள்கைகள், ஆளுமை, ஊடக வெளிப்பாடு என அனைத்துமே இன்றுமே மக்களை வசீகரிக்கின்றன.  நிறைய ஊடக ஆளுமைகள், வலதுசாரி கருத்தாளர்கள் காந்தியை அவதூறு, வசை செய்வதற்காக அவரது தனிப்பட்ட ஆன்மிக பரிசோதனைகளைப் பற்றி பேசுவார்கள். ஆனால் அப்படியும் கூட அன்றைய காங்கிரசிலும் இன்றும் கூட யாரையும் விட செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தது காந்தி மட்டுமே.  இதை ஒத்துக்கொள்ள இன்றைய காங்கிரஸ் கட்சிக்கு கூட சங்கடங்கள் தயக்கங்கள் இருக்கலாம்.  உரையாடும் காந்தி நூலில் ஜெயமோகன், காந்தி மீது மக்களுக்கு உள்ள பல்வேறு சங்கடங்கள், தயக்கங்கள், கேள்விகள், அவதூறுகள், வசைகள் என அனைத்துக்கும் பதில் அளிக்கிறார்.  இந்த நூல் ஜெயமோகனின் வலைத்தளத்தில் எழுதப்பட்ட கருத்துக்களைக் கொண்டதே.  காந்தியைப் பற்றி எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என ஜெயமோகன் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இதன்படி காந்தியைப் பற்றி பல்வேறு ஊடகங்களில் அறிய வந்த பொய், வதந்தி, அவதூறு, வசைகளுக்கு சலிப்பே இல்லாமல் பதில் சொல்லுகிறார்.  காந்திய