இடுகைகள்

இசிகரெட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புகைத்தால் இறப்பு - சீனா வேபிங் பென்ஸ் காரணமா?

படம்
நிகோடின் கொண்ட இ சிகரெட்டுகள் அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளன. இவை அங்கு 2007 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன. இன்று பல லட்சம் பேர் இதனை அங்கு புகைத்து வருகின்றனர். இ சிகரெட்டுகளில் நிகோடின் திரவ வடிவில் இருக்கும். பேட்டரி மூலம் அந்த திரவம் மெல்ல புகையாகும். அது சிகரெட் புகைப்பது போன்ற உணர்வைத் தரும். தற்போது இ சிகரெட்டுகளைப் பிடிப்பவர்கள் நுரையீரல் பாதிப்புற்று இறந்து வருகின்றனர். விஸ்கான்சின், இலினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் ஐந்துபேர் இ சிகரெட் பிடித்து இறந்துள்ளனர். இதனால் அந்தந்த மாநில நிர்வாகங்கள் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று கூறியுள்ளது. 33 மாநிலங்களைச் சேர்ந்த 450 பேர் இசிகரெட்டால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இ சிகரெட்டில் நிகோடின், மரிஜூவானா, டிஹெச்சி, பூச்சிக்கொல்லி, நச்சு ஆகியவை காணப்பட்டுள்ளன. அரசு 140க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து சோதித்து வருகிறது. நிகோடினுடன் விட்டமின் இ அசிட்டேட் சேர்ந்துள்ளது ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. புரப்பலைன் கிளைக்கால் மற்றும் கிளிசரால் ஆகியவை விட்டமின் இ அசிட்டேட்டிற்கு அடுத்தபடியாக சந்தே