இடுகைகள்

மூளை விளையாட்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடத்தப்பட்ட குழந்தையை பணம் கொடுக்காமல் மீட்கும் பணக்கார தந்தை! - ரான்சம்- மெல்கிப்சன்

படம்
  ரான்சம் ஏர்லைன்ஸ் சர்வீஸ் வைத்து நடத்துபவர் டாம் முல்லன் -மெல்கிப்சன். இவரது மகனை அறிவியல் நிகழ்ச்சி ஒன்றில் கடத்தி சென்றுவிடுகிறார்கள். அவனை மெல்கிப்சன் போலீசாரோடு சேர்ந்து மீட்டாரா இல்லையா என்பதுதான் கதை.  படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகம் இல்லை. முழுக்க உணர்ச்சிமயமான காட்சிகள்தான் அதிகம். மெல்கிப்சன் தான் நேசிக்கும் மகனை இழந்துவிடுவோமோ என பயப்படும் காட்சியிலும் மாடியில் உடைந்து அழும் காட்சியிலும் அவர் நடிக்கிறார் என்பதே மறந்துபோகிறது.  படம் முழுக்க மூளை விளையாட்டுதான். பையனை மீட்க பணம் கேட்போம். அது கிடைத்தவுடன் அவனைக் கொன்றுபோட்டுவிடுவோம் என நினைக்கிறது கடத்தல் கூட்டம். ஆனால் அங்கும் கூட சிறுவன் மீது நேசம் வைக்கும் ஒருவன் இருக்கிறான். அவனைப்பொறுத்தவரை பணம் அவசியம்தான். ஆனால் அது கிடைத்துவிட்டபிறகு எதற்கு கொலை என கேட்கிறான். இந்த கேள்வியே அதற்குப் பிறகான காட்சிகளில் சிக்கலாக மாறுகிறது.  அந்தக்கூட்டத்தில் உணர்ச்சிவசப்படும் இருவர், குழந்தை மீது நேசம் வைக்கும் தம்பியும், தம்பியை நேசிக்கும் அண்ணன் ஒருவரும்தான். இவர்கள் குழந்தையை கடத்தி வைத்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில், தலைவனின் து

காவல்துறையோடு பூனை - எலி விளையாட்டு!

படம்
  காவல்துறையோடு பூனை - எலி விளையாட்டு என்பது எளிதானது கிடையாது. அதற்கு மனதளவில் சிறப்பாக தயார் செய்திருக்க வேண்டும். இலையெனில் காவல்துறை சும்மா இருக்குமா? சென்னை போலீஸ் போல கையில் மாவுக்கட்டு போடும் வாய்ப்பு அதிகம். ஆனாலும் கூட இதிலும் செம சவாலான ஆட்கள் உண்டு.  ஜேக் தி ரிப்பர், ஸோடியாக் கில்லர், பெர்க்கோவிட்ஸ் ஆகியோர் தான் செய்கிறோம் என்று தெரியாமலேயே காவல்துறைக்கு பல துப்புகளை கொடுத்து குழப்பினார்கள். இதேபோல இன்னொருவர்  இல்லாமல் கொஞ்சமேனும் புத்திசாலித்தனமாக யோசித்தார் என்றால் அது ஜான் முகமது, ஜான் மால்வோ என்ற இருவர்தான். இவர்கள் கொலைகளை பல்வேறு மாகாணங்களில் செய்துவிட்டு தப்பிச்சென்றார்கள். ஆனாலும் காவல்துறையை பிடிக்க முடியுமா என சவால்விட்டதால் அவர்கள் சூடானார்கள். முகமதின் அழைப்பு ஒன்றை பின்தொடர்ந்து சென்று கொலைகாரர்கள் இருவரையும் பிடித்தனர். அதோடு அவர்களின் ஃபன் பண்றோம் திட்டம் நின்றுபோனது.  இவர்களை சாதாரணமாக நினைத்து விட முடியாது. இவர்களை என்று இங்கு கூறியது, சீரியல் கொலைகாரர்களைத்தான். காவல்துறை விசாரணையில் கூட தகவல்களை மாற்றிக் கூறி விசாரணையை மாற்றும் முயற்சியையும் செய்வார்கள். ஆ