இடுகைகள்

வி காமிக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கணவரில்லாத கைம்பெண்ணான ஷெல்லி, அவளது மகனை வேட்டையாட முயலும் மர்ம பூதங்கள்!

படம்
டைலன் டாக் வேட்டையாடும் - சட்டைப்பையில் சாவு லயன் முத்துகாமிக்ஸ் - வி காமிக்ஸ் விலை ரூ.90 டைலன் டாக் என்பவர் டிஒய்டி 666 எனும் ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் வரும் அமானுஷ்ய டிடெக்டிவ். இவரது முக்கிய வேலை. ஆவிகளை வேட்டையாடுவது. அல்லது ஆவி என்று வேடமிட்டு மனிதர்களை கொல்பவர்களை அடையாளம் கண்டு கைது செய்வது...டைலன் டாக் - டிடெக்டிவ், க்ரௌச்சோ அவரது உதவியாளர். இவர்கள்தான் பெரும்பாலும் கதையில் இருப்பார்கள். மீதி வரும் பாத்திரங்கள் எல்லாமே வரும் போகும். டைலன் டாக்கின் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் எப்போதும் வருவார்.  ஷெல்லி, தனது ஒரே மகனுடன் வீட்டில் வாழ்ந்து வருகிறாள். அவளுடைய கணவர், ஜாக். சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து இறந்து போயிருக்கிறார். அவர் ஏன் இறந்துபோனார், எப்படி இறந்துபோனார் என்பதே மர்மம்தான். இந்த காமிக்ஸ் தொடங்குவது, ஷெல்லி வீட்டில் தனது ஃபிரிட்ஜில் தற்கொலை செய்துகொண்ட கணவர் ஜாக்கின் தலையைக் காண்கிறார். பயந்து நடுங்குகிறார். ஷெல்லியின் மகன் டேன்னி, இவன் வீட்டுக்குள் மணலைக் கூட்டி விளையாடுகிறான். அதில் இருந்தும் ஏதோ மணல் பூதம் போல எழுகிறது. ஷெல்லிக்கு ஒன்றும் புரிவதில்லை. இதனால...