இடுகைகள்

எலக்ட்ரிக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சந்தைக்குப் புதுசு - ஒரே ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் போதும். போனை கழற்றி மாட்டிவிடலாம்!

படம்
  சந்தைக்குப் புதுசு  ஃபேர் போன் 650 டாலர்கள் விலை கொண்ட ஸ்மார்ட்போன். இந்த போனிலுள்ள பாகங்களை நாமாகவே அவர்கள் கொடுக்கும் ஸ்க்ரூ ட்ரைவர் வைத்து கழற்றி மாட்டிக்கொள்ளலாம். பழுது பார்க்கலாம். கெட்டுப்போன பாகங்களை மாற்றிக்கொள்ளும் விலையும் குறைவுதான். திரை போய்விட்டதா உடனே அதை தூக்கியெறிந்துவிட்டு புதிய போன் வாங்குபவர்கள், இந்த போனை வாங்கலாம். ஐந்து ஆண்டு ஆண்ட்ராய்ட் அப்டேட் உண்டு. அதே ஆண்டுகள் வாரண்டியும் உண்டு. இந்த போன் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கிறது. அமெரிக்காவில் உள்ளவர்கள் ஆர்டர் போட்டுத்தான் வாங்கவேண்டும்.  பிஎம்டபிள்யூ ஐ5 முழுக்க எலக்ட்ரிக் கார். சார்ஜ் போட்டால் முப்பது நிமிடங்களில் எண்பது சதவீதம் சார்ஜ் ஏறுகிறது. ஆனால் இந்த கார் முழுக்க எலக்ட்ரிக் காராக மாற்ற பத்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இந்த காலதாமதம் சற்று ஏமாற்றமளிக்கிறது. விலை 68,800 லிருந்து தொடங்குகிறது. இதில் நிறைய மாடல்கள் உள்ளன. காரில் கேம் விளையாடும்போது உங்கள் ஸ்மார்ட்போனை கண்ட்ரோலராக பயன்படுத்தலாம். 321 கி.மீ. தொலைவு தொடங்கி 361 கி.மீ. வரை செல்ல முடியும்.  மோனோ பிரைஸ் டேபிள் லேம்ப் இந்த நிறுவனம் ஒருவர் வீட்டிலே

ஜனவரி 3 ஆம் தேதி ஏன் முக்கியமானதாகிறது?

படம்
நேரத்தைப் பொறுத்தவரை ஜனவரி 3 முக்கியமாகிறது. காரணம், இதே நாளில் 1957ஆம் ஆண்டுதான் முதன்முதலில் எலக்ட்ரானிக் வாட்ச் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டோடு எலக்ட்ரானிக் கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிறது. ஹாமில்டன் என்ற வாட்ச் கம்பெனிதான் இதனை உருவாக்கியது. அதற்கு முன்பு வரை வாட்ச் என்பது சாவி கொடுத்தால் ஓடும். இல்லையென்றால் உடலின் வெப்பம் காரணமாக ஓடும். அதுவரை வாட்ச் நின்றிருக்கும். இதனையெல்லாம் ஹாமில்டனின் எலக்ட்ரானிக் வாட்ச் மாற்றியது. நவீன குவார்ட்ஸ் புரட்சியின் தொடக்கமாக ஹாமில்டன் நிறுவனம் உருவாக்கிய கைக்கடிகாரத்தை கூறலாம். 1946ஆம் ஆண்டு ஹாமில்டன் டைம்பீஸ் ஒன்றை உருவாக்கியது. இதனை சாதாரணமாக உருவாக்கிவிடவில்லை. இதனை தயாரிக்க இந்த நிறுவனத்திற்கு 11 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஹாமில்டன் எலக்ட்ரிக் 500 என்ற வாட்ச் அனைவரையும் ஈர்த்தது. பாடகர் எல்விஸ் ப்ரெஸ்ட்லி இதனை அணிந்து ப்ளூ ஹவாய் என்ற படத்தில் தோன்றினார். அப்போது உருவாகிய வாட்சுகளில் வென்சுரா முக்கியமானது. இதனை ரிச்சர்ட் அர்பிப் என்பவர் வடிவமைத்தார். எப்போதும் பார்க்கும் வடிவமைப்பில் இல்லாத வாட்ச் இது. டிரையாங்குலர் வடி

டீசல்கார்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு குறைவு! - ஹைபிரிட் கார்களுக்கு ஆதரவு பெருகலாம்!

படம்
  cc   எதிர்கால கார்கள் டீசல்கார்களை நகரங்களுக்கும் கொண்டுவருவதற்கு ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்படலாம். டீசலுக்கான வரிகள் உயர்த்தப்படலாம் இதனால் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்காலத்தில் டீசல் கார்களின் தயாரிப்பை கைவிடுவது உறுதி. மெர்சிடிஸ் நிறுவனம், டீசல் கார்கள் முழுக்க அழிந்துவிடாது என்று கூறியிருக்கிறது. மெர்சிடிஸ் சி300 போன்ற ஹைபிரிட் கார்கள் சந்தையில் வலம் வரலாம். இதற்கு நிறைய மவுசு பெறலாம். எலக்ட்ரிக் கார்கள் டெஸ்லா இந்த பிரிவில் சிறப்பான தலைவராக எலன் மஸ்கை கொண்டிருப்பதால் வேகமாக முன்னேறி வருகிறது. இதற்காக மற்றவர்கள் பின்தங்குகிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். ஜாக்குவாரின் ஐ பேஸ் என்ற கார் இதற்கு போட்டி தரக்கூடியது. போர்ச், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறார்கள். இதில் ஹூண்டாயின் கோனா எலக்ட்ரிக் கார் சிறப்பாக இருக்கிறது. வேகம் வேகம் மணிக்கு 482 கி.மீ வேகத்தில் செல்லும் காரை கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? ஹென்னஸி என்ற கார் நிறுவனம் இந்த வகையில் கார்களை தயாரித்து வருகிறது. ஜான் ஹென்னசி என்பவர்தான் இந்நிறுவனத்திற்கு உரிமைய

டைனமோக்கள் எலக்ட்ரிக் கார்களுக்கு உதவுமா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி டைனமோக்களைப் பயன்படுத்தினால் எலக்ட்ரிக் கார்களின் வேகத்தை அதிகரிக்க முடியுமா? இன்றைய கார்களில் கைனடிக் வகை ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான செட்டிங்குகள் உண்டு. பேட்டரிகள் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் கார்களுக்கு இந்த அமைப்பு மூலம் கூடுதல் ஆற்றல் கிடைக்கலாம். இப்போது கார்களின் சக்கரங்கள் இயங்கும்போது கிடைக்கும் ஆற்றல் பேட்டரிகளில் சேகரிக்கப்படுகிறது. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.100 சிசி வண்டி என்றாலும் முழுத் திறனில் அது ஓடாது. எனவே சிறியளவிலான ஆற்றல் சேகரிப்பு மட்டுமே இப்போது சாத்தியமாகும். நன்றி: பிபிசி