இடுகைகள்

டிசால்வோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வல்லுறவு பிறகு மன்னிப்பு - காமவெறியன் டிசால்வோ

படம்
அசுரகுலம் ஆல்பெர்ட் டிசால்வோ அமெரிக்காவின் போஸ்டன் நகரில் தனியாக வாழும் பெண்களை மிரட்டிய கொலையாளி ஆல்பெர்ட் டிசால்வோ. 1962 -1964 வரையிலான காலகட்டத்தில் 13 க்கும் மேற்பட்ட பெண்களை வல்லுறவு செய்து கொன்றார். அனைத்து கொலைகளுக்கும் பொதுவான அடையாளம், கைகளும் கால்களும் பெண்களின் உள்ளாடைகளால் கட்டப்பட்டிருக்கும். இந்த ரீதியில் மாதம் இரு கொலைகள் என திட்டமிட்டு ஆல்பெர்ட் செயல்பட்டு வந்தார்.  போலீசுக்கு கிடைத்த முதல் துப்பு, கொலைகாரர் வீட்டின் கதவை, ஜன்னலை உடைத்து உள்ளே வரவில்லை என்பதே. இதன் பொருள், பெண்களுக்கு உள்ளே வருபவர் அதாவது கொலையாளி முன்னமே தெரிந்தவராக இருக்கவேண்டும். அல்லது அவர்கள் அவரை உள்ளே வர அனுமதிக்கின்றனர் என தீர்மானித்துக்கொண்டனர். 1964 ஆம் ஆண்டு டிசால்வோவின் வல்லுறவு விளையாட்டிற்கு முடிவு கட்டப்பட்டது. வல்லுறவுக்குள்ளான பெண் துணிந்து போலீசில் புகார் செய்தார். எப்படிம்மா உள்ளே வந்தான் என்பதற்கு, டிடெக்டிவ் என்று சொல்லி உள்ளே வந்து வல்லுறவு செய்தார். பின்னர் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார் என்று அந்த பெண் விசாரணையில் கூறினார். இவர் மட்டுமன