இடுகைகள்

கடிதங்கள் - இரா.முருகானந்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராமச்சந்திர குஹா - அற்புத எழுத்தாளர்

படம்
21.3.16 இனிய தோழர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? நீங்கள் கொடுத்த லெட்டர்ஹெட் பணி எனக்கு திருப்தியில்லை. திருப்பூர் நந்து இப்பணிகளில் ஜெகஜாலர்கள். ஆனால் என்னவோ என்னிடம் நீங்கள் இப்பணிகளை ஒப்படைக்கிறீர்கள். நான் படித்த படிப்பு மறந்து வெகுகாலமாகிறது. ஆங்கிலமா அல்லது தமிழா என தெளிவாக கூறி வடிவமையுங்கள். அதுவே சிறப்பு. இந்திய வரலாறு காந்திக்கு பிறகு – ராமச்சந்திர குஹா படித்தேன். நேர்த்தியான மொழிபெயர்ப்பில் நேரு குறித்த விஷயங்கள் அருமை. அவரது செயல்பாடுகளை சார்பு நோக்கமற்று எடை போட்டு பார்த்து எழுதியிருக்கிறார் குஹா. ராம் அத்வானி என்ற நூல் கடைக்காரரை பற்றி அறிந்திருக்கிறீர்களா? காந்தி ஆசிரமத்தில் புத்தக கடை நடத்தியவராம். ஏதாவது பதிவு செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். டெக்கனில் ஆர்எஸ்எஸ் பேன்ட் மாற்றியதை பற்றி கட்டுரை வெளிவந்துள்ளது. உடை மாறினாலும் குணம் மாறாது என கூறியது அக்மார்க் வரி.   டாக்டர் ஹெட்கேவர் தொடங்கிய இந்து அமைப்பு எப்படி காந்தி, நேரு மீதான வெறுப்பை உமிழ்ந்து 90 ஆண்டுகளாக தொடர்கிறது என்பதை குமார் கேட்கர் எழுதிய கட்டுரை விளக்கியது. நன்றி!

எஸ்.ராவின் தடம்பிறழாத உரை அற்புதம்!

படம்
3.4.2016 அன்புத்தோழர் முருகுவிற்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நான் பல்வேறு அறிவியல் செய்திகளை தேடிப்பிடித்து எழுதி வருகிறேன். எதிர்காலத்தில் வேலைப்பளு கூடும் என எதிர்பார்க்கிறேன்.  முகிலினி நூலின் வெளியீட்டு விழாவில் எஸ்.ரா பேசிய உரையைக் கேட்டேன். நூல் குறித்த தடம் மாறாத பிறழாத உரை. இப்படிப்பேச ஜெ., எஸ்.ரா மட்டுமே நம்மிடையே உள்ளனர். தீராநதி, உயிர்மை தவிர வேறு எதுவும் படிக்கவில்லை. கைம்மண் அளவு எனும் நாஞ்சில் நாடனின் நூல் சூரியன் பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது. பணிகள் நிறைவடைந்து விட்டன. வெயில் இங்கே ஏழு மணிக்கே காய்ச்ச தொடங்கி உடலை வியர்வையால் புழுங்க வைக்கிறது. இது மனநிலையில் ஏற்படுத்தும் உக்கிரத்தை எப்படி கூறுவது? விகடனில் தமயந்தி எழுதிய சிறுகதை தலித் மனிதர்களின் வாழ்க்கையை பேசினாலும் துண்டு துண்டாக உடைந்து கிடக்கிறது. நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும். மற்றபடி ஜெ.வின் முகங்களின் தேசம் வாசிக்கிறீர்களா? நன்றி! சந்திப்போம்.

கூலிக்கொலைகாரனும், குறும்பு சிறுமியும்!

படம்
3.4.2016 இனிய தோழர் முருகுவிற்கு,  அண்மையில் லியோன் – - தி புரொப்பஷனல் என்ற படம் பார்த்தேன். இதன் தமிழ் நகல் சூரியப்பார்வை. ஆங்கிலப்படத்தில் ஜீன் ரெனோ கூலிக்கொலைகாரர். பக்கத்துவீட்டு சிறுமி நடாலியா போர்ட்மன், சிதைந்த குடும்பத்து வாரிசு. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பிரச்னையால் நடாலியா தவிர அத்தனை பேரும் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். நடாலியா என்ன செய்வது என தெரியாமல் ஜீன் வீட்டில் தஞ்சமாகிறாள். அவளைக் கொல்ல போதைக்கும்பல் தேடிவருகிறது. இவளது வெகுளித்தனத்தால் ஜீன் தன் வாழ்வை பரிசீலிக்க தொடங்குகிறார். நடாலியா தன்னை ஜீன் காதலிக்க பேரிளம்பெண்போல நடந்துகொள்கிறாள். உடலுறவு பற்றி அவள் பேச, எரிச்சலாகும் ஜீன் அவள் தன் மகள் போல என உறுமுகிறார். வீட்டை நடாலியா பார்த்துக்கொள்ள அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு நாள் படுக்கையில் படுத்து உறங்கி மகிழ்கிறார். அதுவே அவரது கடைசி தூக்கம். பின் அடுத்தடுத்த காட்சிகளில் சிறுமியை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்கிறார். நடாலியா, அரசு பள்ளியில் இணைந்து படிப்பாள். ஜீன் வளர்த்த செடியை தோட்டத்தில் நடுவதோடு படம் நிறைவடையும். பி கிரேடு படம்தான். ஆனால்

தமிழர்களின் ஆவலாதி! - கடிதங்கள்

படம்
19.1.2013 பிரிய முருகுவிற்கு, தங்களது 9.1.13 தேதியிட்ட கடிதங்கள் கிடைத்தன. சென்னை புத்தகத்திருவிழா சென்றிருந்ததால் தொடர்ச்சியாக கடிதங்கள் எழுத முடியவில்லை. நீங்கள் புத்தகத் திருவிழா வரவில்லை என்பது எனது வருத்தம். எப்போதும்போல அங்கு போட்டித்தேர்வுகளுக்கான அரங்குகள் நிரம்பி வழிந்தன. சினிமா பிரபலங்கள் உள்ளே நுழைந்ததால் புத்தகத் திருவிழாவில் நெரிசல் அதிகம். புத்தகங்களை படிப்பதை விட போட்டோ எடுத்து ஃபேஸ்புக் வரலாற்றில் தங்களை பதிவு செய்ய தமிழர்களுக்கு ஆவலாதி அதிகம்தான். கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டில் சிறந்த நூல்கள் என்றால் அது பெருமாள் முருகன் மற்றும் பூமணி எழுதியதாகவே இருக்க முடியும். வங்க நாவல்கள் சிலவற்றை வாங்கினேன். த.நா.குமாரசாமி மொழிபெயர்ப்பில் வங்க சிறுகதைகளை படித்த திலிருந்து வங்க இலக்கியம்மேல் பேரார்வம் பீறிடுகிறது. காமிக்ஸும் சிலது வாங்கினேன். முத்து காமிக்ஸும் பிரீமியமாக நூறு, நானூறு, அறுநூறு என விலையை தீர்மானித்திருந்தார்கள். என் மனநிலையை சமநிலைப்படுத்த நூல்களை தவிர வேறு வழியில்லை. சாகித்திய அகாடமியில் எந்த நூல்களும் வாங்கவில்லை. நிறைய தள்ளுபடிகள

மதுரக்குரல் கேளாயோ? - கடித கருவூலம்

படம்
தாராபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் அவர்களுக்காக எழுதிய கடிதம் இது. சில கடிதங்கள் காணோம். மழையில் நனைந்து வெயிலில் காய்ந்தாலும் மன உணர்வுகளை வெளிப்படுத்த தவறவில்லை. இதோ உங்களுக்காக! 9.1.2013 பிரிய முருகுவிற்கு, வணக்கம். எதிர்வெளியீட்டகம் வெளியிட்ட நூல்களின் பட்டியல் சந்தோஷம் தந்தது. விலை சற்று அதிகமாக இருக்குமோ? ஷண்முக சுந்தரத்தின் ‘சட்டி சுட்டது’ என்ற நாவலைப்படித்தேன். கொங்கு மொழி வழக்குகள் கொண்ட சுவாரசியமான நூல். சாமிநாதக்கவுண்டர் தன் மகன்கள் மாரப்பன், பழனியப்பன் நடவடிக்கைகளால் தன் மகளுடன் தனியாக வாழத்தொடங்குவது முதல் பகுதி. இறுதியில் மகளுக்கு திருமணம் உறுதியாவதோடு நாவல் நிறைகிறது. பேச்சுவழக்கு, உரைநடை தடுமாற்றங்கள் வாசிக்கும்போது பெரிய பிரச்னையாக தெரியவில்லை. ‘அப்பாவின ்காதலி’ பாறப்புரத்து எழுதிய நூலை படித்தேன். 9 அத்தியாயங்கள்தான் நாவல். மணிக்குட்டனின் தந்தை கோணக்குறுப்பு நாயர் பற்றிய நினைவுகள்தான் கதை. தந்தையின் தொடர்பிலிருந்து கவுரியம்மாளை கடைவீதியில் பார்த்து பேசுவது தொடங்கி கதை விரிகிறது. உங்களுடன்தான் இப்படி கதைகளை பற்றி பேசமுடிகிறது