இடுகைகள்

இயற்கை விவசாயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபணுமாற்ற உணவுகள்!

படம்
  மரபணு மாற்ற உணவுகள் உலக நாடுகளில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப உணவுப்பயிர்களை விளைவிப்பது கடினம். எனவே, விளையும் பயிர்களிலுள்ள மரபணுக்களை மாற்றியமைத்து அதனை ஊட்டச்சத்து கொண்டதாக மாற்றுவதை அறிவியலாளர்கள் முன்வைக்கிறார்கள். இதைத்தான் மரபணுமாற்ற பயிர்கள் (GM Foods) என்கிறார்கள். மரபணு மாற்ற பயிர்களில் பூச்சித்தாக்குதல் குறைவு, சத்துகள் அதிகம், குறைந்த நீரே போதுமானது என நிறைய சாதகமான அம்சங்கள் உண்டு. இவை பல்வேறு தரப்பரிசோதனைகளைச் சந்தித்து சந்தைக்கு வருகின்றன. ஆனால் சூழலியலாளர்கள் மற்றும் இயற்கை விவசாயிகளில் சிலர், நீண்டகால நோக்கில் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என கூறிவருகின்றனர்.  தொண்ணூறுகளில் ஹவாய் தீவில் பப்பாளித் தோட்டங்களை ரிங்ஸ்பாட் என்ற வைரஸ் தாக்கியது. இதன் விளைவாக, அங்கு பப்பாளி தோட்டங்கள் வேகமாக அழியத் தொடங்கின. இதைத் தடுக்க அறிவியலாளர்கள் ரெயின்போ (Rainbow Papaya) என்ற பெயரில்  பப்பாளியை உருவாக்கினர். இது வைரஸ் தாக்கமுடியாதபடி மரபணுக்களை அமைத்து உருவாக்கியிருந்தனர். இதனால் அங்கு மீண்டும் பப்பாளித் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.   

செயற்கை வேதி உரங்களை முழுக்க கைவிடுவது கடினம்! - டெட் நார்தாஸ், அமெரிக்க எழுத்தாளர்

படம்
  டெட் நார்தாஸ், அமெரிக்க எழுத்தாளர் டெட் நார்தாஸ் இயற்கை சூழலியலாளர், ஆலோசகர் பொதுவாக இயற்கை விவசாயம் சார்ந்த வெற்றிக்கதைகளை அதிகம் கேட்டிருக்கிறோம். ஆனால் இலங்கையில் எப்படி இயற்கை விவசாயம் தவறாக போனது? வளர்ச்சி பெற்ற நாடுகளில் இயற்கை விவசாயம் செய்வது எளிது. அங்கு அதற்கென தனி விலை வைத்து வசதியான வாடிக்கையாளர்களுக்கு விற்பார்கள். இதில் குறைந்த விளைச்சல் வந்தாலும் கூட அவர்கள் அதற்கான இடுபொருட்களை குறைவாக பயன்படுத்துவார்கள். கிராக்கியைப் பொறுத்து விலையை கூடுதலாக வைத்து விற்பார்கள். நாட்டிலுள்ள அனைவரும் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினால் நீங்கள் கூடுதல் விலைக்கு வைத்து விற்க முடியாது.  இயற்கை விவசாயம் சார்ந்த சந்தையில் அதிக பொருட்கள் உள்ளன. அவையும் அதிக விலையில் உள்ளன. இதனால், சாதாரண குறைந்த வருமானம் கொண்ட மக்கள் பொருட்களை வாங்க முடியாது. அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்தில் பொருட்களை உற்பத்தி செய்தால், பொருட்கள் அனைத்துமே விலை கூடித்தான் இருக்கும். இதனால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கிறது.,  இப்படி விவசாயம் செய்வது நிலம், வேதிப்பொருள், பசுமை இல்ல வாயு வெளிப்

விவசாயிகளின் துயர் துடைக்கும் மிரிட்ஸா!

படம்
  விவசாயிகளுக்கு உதவும் மிரிட்ஸா! ஆந்திர விவசாயிகளுக்கு உதவ பள்ளி மாணவிகள் நால்வர் இணைந்து  திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். புராஜெக்ட் மிரிட்சா எனும் திட்டத்தை நந்தினி ராஜூ(16), ஸ்ரீலக்ஷ்மி ரெட்டி(16), சாரதா கோபாலகிருஷ்ணன் (14), அம்ருதா பொட்லூரி (16) ஆகிய மாணவிகள் தொடங்கியுள்ளனர். இதுவரை 1.5 லட்சம் ரூபாய் நிதி திரட்டி இயற்கை விவசாயம் செய்யவும் குளிர்பதனக்கிடங்குகளைக் கட்டவும் விவசாயிகளுக்கு உதவி வருகின்றனர். இதில் சாரதா கோபாலகிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். அம்ருதா, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர்.  கடந்த ஜூன் மாதம் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் வீடியோக்களை  உருவாக்குவது, தானியங்களை சேமிப்பதற்கான கிடங்குகளை ஏற்படுத்துவது, இயற்கை விவசாய மாதிரிகளை பிரசாரம் செய்வது, அரசு திட்டங்களை விளக்குவது ஆகியவற்றை செய்து வருகின்றனர்.  ஆந்திரத்தின் குண்டூர் பகுதியில் இன்ஸ்டாகிராம், யூடியூப் என பல்வேறு சமூக வலைத்தளங்களையும் நான்கு மாணவிகளும் பயன்படுத்தி விழிப்புணர்வு பிரசாரங்களை செய்கின்றனர். இங்கு கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின

சூழல்களுக்கு அஞ்சாத விவசாயி! விழுப்புரம் இயற்கை விவசாயி முருகன்

படம்
  பாரம்பரிய நெற்பயிர் ரகங்கள், விழுப்புரம் விழுப்புரத்தில் உள்ளது அய்யூர் அகரம் கிராமம். இங்கு உள்ளே நுழைந்ததும் ஆச்சரியப்படுத்துவது, தூய்மையான புத்துணர்ச்சியான காற்றுதான். ஒருபுறம் சிறுவீடுகள், நேரான குறுகலான தெருக்கள், ஹாரன்களை அடித்தபடி செல்லும் இருசக்கர வாகனங்கள் என்ற காட்சிகளை பார்க்கலாம். இன்னொரு புறம் அழகான பச்சை பசேல் என்ற விவசாய நிலங்களும் கண்களை கவருகின்றன.  இங்குதான் பாரம்பரிய நெற்பயிர் ரகங்களை விவசாயம் செய்து வருகிறார் விவசாயி முருகன் கே. அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் வயல்கள் நீரில் த த்தளித்து இப்போதுதான் மெல்ல அதிலிருந்து மீண்டு வருகிறது.  பருவச்சூழல் மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக சரிசெய்வது கடினம். வேதிப்பொருட்களை தவிர்த்துவிட்டுத்தான் இயற்கை விவசாயத்தை இனி அனைவரும் செய்யத் தொடங்கவேண்டும். அனைவரும் இப்படி விவசாயம் செய்யத் தொடங்கினால் அடுத்த தலைமுறைக்கு எந்த பிரச்னையும் வராது என்றார் இவர்.  பூங்கார், கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா, சொர்ணமயூரி, இப்பு சம்பா ஆகியவற்றை நான் நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறேன் என்றார் முருகன்.  முப்பது ஆண்டுகளாக தன

பாரம்பரிய பயிர்களை நடவு செய்யும் விவசாயி!

படம்
  சிவகங்கையில் வாழும் விவசாயியான கண்ணன், அங்குள்ள விவசாயிகளுக்காக அறுவடைத்திருவிழாவை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். இதன் நோக்கமே, பாரம்பரிய நெற்பயிர்களை விவசாயிகளிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான்.  பொறியாளராக பணியாற்றி வந்த கண்ணன் எப்போது விவசாயி ஆனார், அவர் நடவு குறித்த ஏராளமான விஷயங்களை சொல்வார் என யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாது. ஆனால் இன்று சூழல் அப்படித்தான் இருக்கிறது. விவசாயம் பற்றி நுட்ப நுணுக்கங்களை கண்ணன் கற்றுக்கொண்டதே ஜனவரி 2018லிருந்துதான் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.  சென்னையில் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக இருந்தவர், 9 டூ 6 மணி வேலையை விட்டு வருவார் என யாருக்கு தெரியும்? கண்ணனுக்கே சொன்னால் கூட நம்பியிருக்க மாட்டார். கண்ணனின் அப்பா காலமானபிறகு, அவரின் தந்தையும் தாத்தாவுமான அழகுகோனார்  கண்ணன் கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். அவரது ஆசைப்படி சென்னையில் செய்து வந்த வேலையைவிட்டு விட்டு அம்மா இந்திரா, தம்பி பாலசுப்பிரமணியத்துடன் கிராமத்திற்கு வந்துவிட்டார் கண்ணன்.  கட்டுமான இயந்திரங்களை இயக்கி பழகியவர் கண்ணன். ஆனால் விவசாய விஷயங்களை

விற்க முடியாமல் நின்றுபோன ஆங்கில மாத இதழின் அச்சுப்பதிப்பு! கடிதங்கள்

படம்
  பௌண்டைன் இங்க் மாத இதழ் அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  சென்னை முழுவதும் கொரோனா பீதியில் தவித்து வருகிறது. சானிடைசர், மாஸ்க்,  ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடாக உள்ளது. இந்த நேரத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, வைரஸ், பாக்டீரியா தொற்று நோய்களை மையமாக கொண்ட திரைப்படங்களை தொகுத்து பட்டியலிட்டு செய்தியை வெளியிடுகிறார்கள். விநோதமான மனிதர்கள்.  காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு போனாலும் குறிப்பிட்ட டிகிரியில் இருக்கவேண்டுமென திருப்பி அனுப்பிவிடுகிறார்கள் என்று செய்தியைப் படித்தேன். அரசு தன் பொறுப்பை இப்படித்தான் செய்கிறது என நண்பர் பாலபாரதி அலுத்துக்கொண்டார். மத்திய அரசு தொற்றுநோய்க்கு எதிராக தயாராக இருப்பதாக கூறினாலும் உண்மையில் பாதிப்பை சரிவர உணரவில்லை என்றுதான் தெரிகிறது.  பீஷ்மா என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். இயற்கை விவசாயத்திற்கும், வேதிப்பொருள் விவசாயத்தை வலியுறுத்தும் நிறுவனத்திற்குமான சண்டைதான் கதை. படம் நெடுக வரும் காமெடிதான் படத்தை பார்க்க வைக்கிறது.  பௌண்டைன் இங்க் என்ற ஆங்கில மாத இதழின் அச்சுப்பதிப்பு நிறுத்தப்படுகிறது. அந்த இதழ் இனி டிஜிட்டல

சூழலுக்கு இசைவாக விவசாயம் செய்வது மனிதர்களை அழியாமல் பாதுகாக்கும்! - பேராசிரியர் ரத்தன் லால்

படம்
ஓஹியோ பல்கலைக்கழகம் பேராசிரியர் ரத்தன் லால் இந்த ஆண்டிற்கான உலக உணவுப் பரிசை வாங்கியுள்ளார். இந்த விருது, விவசாயத்துறையில் நோபல் பரிசுக்கு நிகரானது. அவரிடம் விவசாயம் பற்றியும், விவசாயிகள் பற்றியும் பேசினோம். சிறு விவசாயிகளுக்கு என்னவிதமான விவசாய நடைமுறைகளை வழியுறுத்துகிறீர்கள்? ஹரியானா, உ.பி. பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளை அறுவடை முடிந்தபிறகு நெல் கற்றைகளை எரிக்க வேண்டாம் என்று கூறியுள்ளேன். இதனால் ஏற்படும் மாசுபாடு நிலத்திற்கும், சூழலுக்கும் நல்லதல்ல என்று வலியுறுத்தியுள்ளேன். நிலத்தில் கழிவாக மிஞ்சி எரிக்கப்படும் நாற்று கற்றைகளை நிலத்திலேயே மட்கச்செய்வது அவசியம். நாம் மண்ணிலிருந்து நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற வளங்களை எடுத்துக்கொண்டு விவசாயம் செய்கிறோம். அதனை திரும்ப நிலத்திற்கு அளிப்பது முக்கியம். உரங்களை நாம் நேரடியாக மண் மீது பயன்படுத்தக்கூடாது இப்போதுள்ள பருவச்சூழலில் அது வெப்பமயமாதலை ஊக்குவிக்கும். முடிந்தவரை இயற்கை உரங்களை பயன்படுத்தலாம். அதுவே மண் வளம் காக்கும். அடுத்து நிலங்களிலுள்ள மேல் மண்ணை செங்கற்கள் செய்ய பயன்படுத்தக்கூடாது. இதனால் மண்வளம் கெட
படம்
நேர்காணல் சுபாஷ் பாலேகர் ஷிஸ்கர் ஆர்யா 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு சுபாஷ் பாலேகரின் ஜீரோ பட்ஜெட்டை கையில் எடுத்துள்ளது. இதுபற்றி சுபாஷ் பாலேகர் என்ன சொல்லுகிறார்? உங்கள் விவசாய முறையை இந்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்துழ 2014 ஆம் ஆண்டு பிரதமர் தேர்தலின்போது  மோடி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதாக கூறினார். அவர் இந்திய விவசாய கௌன்சில் சில ஐடியாக்களை இதற்காக தனக்கு கூறும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அம்முறையில் விஷயங்கள் நடைபெறவில்லை. நிதி ஆயோக் இதுகுறித்து சர்வே ஒன்றை செய்தது. வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய இரண்டும் எதிர்பார்த்த விளைச்சலைத் தரவில்லை என்று இதன் மூலம் தெரிய வந்தது. அதன்பின்னர்தான் என்னுடைய டெக்னிக் மீது நம்பிக்கை வந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும்? இந்த ஆண்டு டில்லியில் இதுபற்றி சந்திப்பு நடைபெற்றது.  நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜிவ் குமார், இந்திய விவசாய கௌன்சில் தலைவர்  திரிலோச்சன் மொகபத்ரா, விவசா