சூழலுக்கு இசைவாக விவசாயம் செய்வது மனிதர்களை அழியாமல் பாதுகாக்கும்! - பேராசிரியர் ரத்தன் லால்
ஓஹியோ பல்கலைக்கழகம் |
பேராசிரியர் ரத்தன் லால்
இந்த ஆண்டிற்கான உலக உணவுப்
பரிசை வாங்கியுள்ளார். இந்த விருது, விவசாயத்துறையில் நோபல் பரிசுக்கு நிகரானது. அவரிடம்
விவசாயம் பற்றியும், விவசாயிகள் பற்றியும் பேசினோம்.
சிறு விவசாயிகளுக்கு என்னவிதமான விவசாய நடைமுறைகளை
வழியுறுத்துகிறீர்கள்?
ஹரியானா, உ.பி. பஞ்சாப்
ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளை அறுவடை முடிந்தபிறகு நெல் கற்றைகளை எரிக்க வேண்டாம்
என்று கூறியுள்ளேன். இதனால் ஏற்படும் மாசுபாடு நிலத்திற்கும், சூழலுக்கும் நல்லதல்ல
என்று வலியுறுத்தியுள்ளேன். நிலத்தில் கழிவாக மிஞ்சி எரிக்கப்படும் நாற்று கற்றைகளை
நிலத்திலேயே மட்கச்செய்வது அவசியம். நாம் மண்ணிலிருந்து நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்
போன்ற வளங்களை எடுத்துக்கொண்டு விவசாயம் செய்கிறோம். அதனை திரும்ப நிலத்திற்கு அளிப்பது
முக்கியம்.
உரங்களை நாம் நேரடியாக மண்
மீது பயன்படுத்தக்கூடாது இப்போதுள்ள பருவச்சூழலில் அது வெப்பமயமாதலை ஊக்குவிக்கும்.
முடிந்தவரை இயற்கை உரங்களை பயன்படுத்தலாம். அதுவே மண் வளம் காக்கும். அடுத்து நிலங்களிலுள்ள
மேல் மண்ணை செங்கற்கள் செய்ய பயன்படுத்தக்கூடாது. இதனால் மண்வளம் கெடும். வயல்களில்
நீரை நேரடியாக பாய்ச்சக் கூடாது. சிறிது சிறிதாக நீரை வயல்களிலுள்ள பயிர்களுக்கு சென்று
சேருமாறு செய்யவேண்டும். நம்மால் எப்படி நீருக்கடியில் மூச்சுவிட முடியாதோ அப்படித்தான்
பயிர்களும் நேரடியாக நீரைப் பாய்ச்சினால் அதனை உள்ளிழுத்து வளர்ச்சி பெற தடுமாறும்.
இந்த வழக்கத்தை விவசாயிகள் தவிர்க்கவேண்டும். சொட்டுநீர்ப்பாசனமே பயிர்களுக்கு சரியான
நீர் பாய்ச்சும் முறை. இதனால் அவற்றின் வேர்களுக்கு சரியான முறையில் நீர் பாய்கிறது.
அவை வறண்டுபோவதில்லை.
அரசு இதற்கு உதவிகளை வழங்குகிறதா?
அரசு, முறையாக மண்ணில் வளத்தைப்
பாதுகாத்து விவசாயம் செய்பவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு பதினாறு டாலர்கள் அளவுக்கு
பல்வேறு வசதிகளை, நிதியை வழங்குகிறது. விவசாய நிலமானது, பல்வேறு உயிரினங்கள், பூச்சிகள்,
பறவைகள், மனிதர்கள் என அனைவரின் வாழ்க்கையிலும் முக்கிய பங்காற்றுகிறது. நிலம் தன்
வளத்தை இழந்து அழிந்தால், நமது வாழ்க்கையும் அத்தோடு முடிவுக்கு வந்துவிடும்.
விவசாயிகள் வெப்பமயமாதல் பிரச்னையில் எப்படி
பங்காற்றுகிறார்கள்?
விவசாயிகள், தங்களின் விளைநிலங்களில்
பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் வழியாக கார்பன் அதிகம் வெளியாகிறது. இதனால் வெப்பமயமாதல்
அதிகரிக்கிறது. இந்த அளவு 2030க்குள் 2-3 என்ற அளவுக்கு உயர்ந்தால் கூட சூழலில் நிறைய
மாற்றங்கள் ஏற்படும். விவசாயத்திற்கு, அதிகம் பயன்படுத்தும் நீரால் கூட நிலத்தடி நீர்
பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பெருந்தொற்று காரணமாக விவசாயம் செய்வது மாறுதலுக்கு
உள்ளாகும் வாய்ப்பு உள்ளதா?
இயற்கை தன்னை சரிசெய்வதற்கு
எடுத்துக்கொள்ளும் காலம் இது என்று நினைக்கிறேன். இயற்கைச் சூழலைக் கெடுக்காமல் விவசாயம்
செய்ய பழகுவது முக்கியம். நீரும், காற்றும் மாசுபாட்டிலிருந்து மீள்வது அவசியம். இதற்கான
அவசியத்தை கோவிட் -19 ஏற்படுத்தியுள்ளது என்று நினைக்கிறேன்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
மன்ராஜ் கிரேவால் சர்மா
கருத்துகள்
கருத்துரையிடுக